Translate

Showing posts with label இன்றிலிருந்தே. Show all posts
Showing posts with label இன்றிலிருந்தே. Show all posts

Tuesday, May 1, 2018

இன்றிலிருந்தே



போதுமோ ஒரு நாள்
உழைப்பாளிகளுக்கு இந்நாள்.
இந்நாளும் உழைப்பின்றி
இயங்காதே அவர் உலையும். 10

பத்துமிருந்தும் பறித்து தின்னும்
கூட்டமிருக்க,
பரிதவிக்கும் இவ்வினமோ
பாதாளத்தில் வீழ்ந்திருக்க,
பகிர்ந்துண்ணும் எண்ணமோ
பகட்டுக்கான பாவனையாய்.
பறக்கிறதே அவருள்ளம்
பதினாறு தலைமுறைக்கு சேர்த்த பின்னும். 28

பட்டினியால் குடலின்றி வயிறு குழிந்திருக்க,
கடின உழைப்பு தொழிலாளிகள் கடனில் மூழ்கியிருக்க,
வட்டிகளோ பாலில்லா மடியினிலே பால் கறக்க,
பசுந்தோல் போர்த்திய புலிகளும்
உடனிருந்து காவு கொள்ள
மக்களே மன்னரென ஆட்சியர் துகிழ் உரிக்க 53

வாழ்வின் போராட்டத்தில்
நாள்தோறும் செத்து பிழைக்க,
உணருமோ உணர்வுகள்
வறியவரை அரவணைக்க.
உழைப்பாளி மன்னருக்கு நாமளிப்போம்
ஒரு பிடி உணவை தினந்தோறும் 69

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏