Translate

Monday, April 26, 2010

நண்பர்.கிறுக்கனாருக்கு பிறந்த நாள் வாழ்த்து.


கற்பனையில் மிதக்கும் நேரமிதில்

காலமும் விரைவாய் கடந்து விடும்.

கருத்திலே கொண்டு இருந்தால்தான்

கனிவான குடும்பமும் மலர்ந்துவிடும்.

மகிழும் நினைவுகளில் ஒன்றிதுவாய்

மனத்தினில் தங்கி நிழலாட

பிறந்ததை எண்ணிப் பார்த்திடவும்

பிறந்த நாளும் இருக்குதுவே.

மகிழ்வுகள் பூக்கும் நிகழ்வுகளாய்

மங்கா நினைவுடன் அதுவிருக்க,

மகிழ்ந்தே உம்மை வாழ்த்துகிறோம்

மாளா பெருவாழ்வு வாழ்கவென்று!!!..........

நண்பன்,

-தவப்புதல்வன்.

பின்குறிப்பு:

வலை (வளைத்த) நண்பர்.திரு.கிறுக்கன் @ பாலு @ பாலசுப்ரமணியம் கணபதி அவர்களின் ( 53 ஆ 54 ஆ? ஏதோ ஒன்னு.) பிறந்த நாளுக்கு (Apr 27) மனசிலே தோன்றிய எண்ண வடிவம். சென்னையிலிருந்து ஹூப்ளிக்கு.

யாரும் அறியா நிலையினிலே!

உறவை எல்லாம் விலக்கித்தான்

உலகைப் படைத்த இறையிடம் தான்

உடலை விட்டு பிரிந்துத்தான்

உயிரும் நீங்கிப் போனதை தான்

உறவும் அறிந்த நிலையில் தான்

உணர்ந்து உருகி போனதில் தான்

உகுக்கும் கண்ணீர் துளிகள் தான்

உமக்கு செலுத்தும் அஞ்சலி தான்.

பின்குறிப்பு:
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரரும், எமது பெரியப்பாவின் மூத்த மகனுமான A.R. வெங்கடேசன் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி செலுத்தப்பட்ட கண்ணீர் அஞ்சலி கவிதை.
பூத்தது:24 /02 /1936.
உதிர்ந்தது: 16/04 /2010 .

Tuesday, April 13, 2010

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வருவதும் போவதும் தொடர்ந்திருக்க,

பிறக்கின்ற இனிதான இத்தமிழ் ஆண்டில்

நட்புடன் இனிமையும் நிலைத்திருக்க,

வஞ்சமும், பகைமையும் மறந்திடுவோம்.

நாடும் வளமுடன் செழித்திருக்க,

ஊழலை, லஞ்சத்தை ஒழித்திடுவோம்.

உடலிலே ஊனம் இருந்தாலும்

செயலிலே அதையே வென்றிடுவோம்.

மனத்திலே ஊனம் உடையோரை

மாற்றம் அடைய செய்திடுவோம்.


உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



உங்களில் ஒருவன்,

தவப்புதல்வன்.

13/04 /2010.

Friday, April 9, 2010

வினிக்கு திருமண வாழ்த்து

அதேபோல சென்ற 2010 பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி மற்றொரு பெண் நண்பி வினி. இவர் கேரளத்துக்காரர். தமிழ் படிக்க தெரியாது. ஆனால் தமிழில் பேசுவதும், தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் படித்து புரிந்துக் கொள்வார். அவருக்கும் திருமண வாழ்த்தை 123greetings
மூலமாகவும், Orkut மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும், கீழ் காணும் கவிதை மூலம் மீண்டும் இன்றொரு கவிதையை அனுப்பிவைத்தேன்.


கன்னியாய் காத்திருந்தாய்,
கற்பனையில் மூழ்கியிருந்தாய்.
கணவனாய் ஒருவனையே
காலத்திலேயே கைப்பிடிக்க.

ஓவியமாய் தீட்டியிருந்தாய்,
ஒருவனையே உன் மனத்தில்.
ஒப்பனையில்லா காதலுடனே
ஓடி வந்தான் நிசமாக.

வண்ணமலர் பூ பூக்க,
வனமெல்லாம் செழித்திருக்க,
வடியாத நதி போல,
வதனத்தில் நிறைந்திருக்க,
வளமான வாழ்வை நீங்கள்,
வற்றாது பெற்றிடவே,
வானத்துள் உறைபவனை
வணங்கியே வாழ்த்துகிறேன்.
வாழ்க! வாழ்க!! வாழ்க நன்றே!!!

புனிதாவுக்கு அன்புடன் திருமண வாழ்த்து.

என்னுடைய யாகூ மெயிலை இடையில் பல சந்தர்ப்பங்களில் பார்க்காமல் விட்டுவிடுவேன். அதுபோல் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பார்க்காமல் விட்டு விட்டிருக்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக பார்க்காத பழைய மெயில்களை ஒரு பார்வை விட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் நண்பியின் திருமண அழைப்பும் ஒன்றாக இருந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும் தவற விட்டுவிட்டோமே என வருத்தமும் அடைந்தேன். அவருக்கு திருமணம் ஆனதற்கு மகிழ்ச்சியையும், தவற விட்டதற்கு வருத்தத்தையும் எப்படி தெரிவிப்பது என தடுமாறிக் கொண்டிருந்த எனக்குள் தோன்றியது ஒரு வார்த்தைகளின் சங்கமம். உடனடியாக இன்று அனுப்பினேன். இதோ அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள பதிபித்திருக்கிறேன் கீழே.


புனிதமான நாளொன்றில்
புதுமண உறவு கொண்டு
புதுமனை புகுந்த உன்னை
பூம்புனல் நெஞ்சில் போங்க
புன்னகை முகத்துடனே
பூத்திருந்த பூக்களுடன்
புதுமஞ்சள் அரிசியால்
பெருவாழ்வு வாழ்ந்திட,

உற்றாரும் உறவினரும்
கூடியிருந்து உமை வாழ்த்தும்
காட்சிகளை கண் கொண்டு
காணாமல் போனாலும்,
காலம் கடந்த பின்னாலும்
கருத்திலே கொண்டுதான்
கவிதையிலே வாழ்த்தி விட்டேன்.

கனவு உலகில் நீந்திக் கொண்டு,
நிகழ்வுலகை புரிந்துக் கொண்டு,
கருத்திலே அதைக் கொண்டு,
நிசமான காதலை கைக்கொண்டு,
மங்காமகிழ்வு வாழ்விலே நிலைக் கொண்டு,
நீங்களும் புரிந்துக் கொண்டு,
நீங்கா நினைவிலே
என்றுமதை நிறுத்திக் கொண்டு,
நலமுடனே வாழ்விலே
சிறப்புகள் பல கொண்டு,
நலம் நாடும் நட்புடன்
உரிமைதனை யான் கொண்டு,
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வாழ்த்திட்டேன் இந்நாளில்.

அன்புடன்,
UNCLE,
A.M.பத்ரி நாராயணன்
(எ) தவப்புதல்வன்.


திருமணம் நடந்த தேதி: 24/ 08 /2009.
வாழ்த்திய தேதி : 09 / 04 / 2010