Translate

Thursday, February 19, 2009

பிறந்தநாள் வாழ்த்து

சுபகருக்கு பிறந்தநாள் வாழ்த்து 17\02\2009

நினைவில் வந்தது
எதற்கு என்பது.

பிறந்தநாள்
அதற்கு என்பது.

சொல்ல வார்த்தைகளை
தேடி நிற்பது.

மனமும் அதிலே
மருகி நிற்பது.

இருப்பினும் ஒன்றை
சொல்ல நினைத்து.

வாழ்க நன்றே!
என்றே நினைத்து.


என்றென்றும்,
தாத்தா,
மாமா மற்றும்
குடும்பமும்.

''அந்தரங்கம்''

சகோதரி அனுராதா ரமணன் அவர்களுக்கு, வணக்கம். 
       தங்களின் கைவண்ணத்தால் உருவான எத்தனையோ கதைகளை படித்திருந்தாலும், தினமலர் வாரமலர் ''அந்தரங்கம்'' பகுதியில் தாங்கள் அளிக்கும் ஆறுதலும், அரவணைப்பும், வழிக்காட்டலும் எம்மை மெய்மறக்கச் செய்யும். அதன் தாக்கம் தான் இக்கடிதம்.

தவறுகள் பல விதமாய்
தறிக்கெட்ட பாதைகளில்
தவளும் நினைவுகளோ
தகிக்கிறது எழுத்துக்களில்.

பயமாய், பாவமாய்,
நடுக்கமாய், நாசரமாய்  (நாரசமாய் )
உணர்வுகள் எத்தனையோ
அத்தனையும் எழுத்துக்களில்.

பரவசமோ உணர்வினிலே,
தடுமாற்றமோ மனதினிலே.
சீரமைத்துக் கொள்ளவே,
வழிகளைத் தேடியே,
உமை நாடி வருகின்றார்,
அந்தரங்கத்தை வெளிப்படுத்தி.

ஆறுதல் அளிக்கும் அம்மாவாய்,
வழி நடத்தும் சகோதரியாய்,
தட்டிக் கொடுக்கும் தோழியாய்,
ரணம் அகற்றும் மருத்துவராய்,
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு
கடவுளாய்,
உமை நினைத்து
வெள்ளைத் தாட்களில்
கோடுகளை கிறுக்கி வைப்பார்
கோளங்களாய் மற்றச் சொல்லி.

கழிவுகளை கழித்து விட்டு,
சுகமென்னும் நினைவுகளை
மனத்தினிலே சுமந்திடவே,
மனச்சுமைகளை உம்மிடமே
இறக்கியே வைக்கின்றார்.

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
வாசிக்கின்ற எங்களையே
வருத்தெடுக்கும் எண்ணங்கள்.
மனத்தையே உறைய வைக்கும்.
உடலையும் சிலிர்க்க வைக்கும்.
கண்களை கரைய வைக்கும்.

வந்து உமை தாக்கும்
வேதனை அம்புகளால்
ஆறா ரணமாய்
நிற்கா குருதியுடன்
நித்தமும் துடிப்பீரோ.


வழி பார்த்து விழி இருக்கும்,
உம் பதில் காண காத்திருக்கும்,
  சகோதரன்,
தவப்புதல்வன்.
06\02\2008.

ஈடுபாடு =
1) ஊனமுற்றோருக்கு உதவுதல்
2) உடல், கண், ரத்த தான விழிப்புணர்வு
   ஏற்படுத்துதல்.
3) கவிதை, கட்டுரை பெயர்களில் மனச்சுமைகளை 
   இறக்கி வைக்க முயற்சித்தல்.

பின் குறிப்பு

       தினமலர் 'வாரமலர்'  இமெயில் மூலமாக அனுப்பட்டது. 

வணங்கியே வாழ்த்துகிறோம்.

நிகழ்ச்சிகளை காணவே
தொலைகாட்சி ஒன்றிருக்க.

வாரிசுகள் முறையிலே
அவர்களோ முன்னிருக்க,

மனைவியென்ற பெயரிலே
இணைந்தவளோ அடுத்திருக்க,

தலைவனென்ற சொல்லாலே
அடுத்ததாய் நானிருக்க.

வாய்ப்புகள் கிடைத்தாலே
கண் பதிப்போம்
செவிமடுப்போம்
உமதந்த ''மக்களரங்கத்திலே''.

நாட்கள் சில முன்னாலே (28\12\08)
பெங்களூரு அரங்கத்திலே,
சேவையென்ற தலைப்பிதிலே,
முதலுரைத்த அம்மாவின்
பெயரை யாம் அறியோமே.

தம்பதிகள் இருவருமே
இணைந்திருந்து, செய்யும் 
சேவைகளைச் சொன்னாரே
செய்திகளாய் பலவற்றை.

உள்ளம் உருக
கேட்டுணர்ந்தோம்.
கண் பனிக்க
பார்த்திருந்தோம்.

கைகளோ தன்னாலே
கைகொட்டி ஆர்பறிக்க,
மனமோ மிதந்தது
மகிழ்ச்சியில் தன்னாலே.

சேவைகள் என்றாலே
பெரிதாக தேவையில்லை.
தேவைப்படும் நேரத்திலே
சிறிதாக இருந்தாலும்
செய்தாலே பெருமையப்பா.

நீண்டவாழ்வு இருந்தாலே
சேவை மேலும் தொடருமென்று,
மனமாற வேண்டிக் கொண்டோம்
உடல் நலனை வழங்கவென்று.


அன்புடன்,
ஏ.எம்.பத்ரி நாராயணன் (எ)
தவப்புதல்வன்.
06\ 01\2009





பின் குறிப்பு 
               தங்களை தொடர்புக் கொள்ள சரியான முகவரி இன்மையால், மேற்கானும் கவிதையை  ''மக்களரங்கம்'' ஜெயா டீ.வி அலுவலக முகவரியிட்டு அஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தேன். தங்களை வந்தடைந்ததா என்பதை அறிய இயலா நிலையால் ஓரிரு வார்த்தைகளிலாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் இந்த வலைமுகவரி மூலமாக அனுப்பியுள்ளேன்.  அ.மா.ப. 09\02\2009. 

மீண்டும் ஒரு பின் குறிப்பு
          திரு.விசு அவர்களிடமிருந்து பதில் கடிதம்  கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

உமதும் ஒரு தொண்டு தான்.

மக்களரங்க நிகழ்ச்சிகளோ
உம் அருகில், எமை இழுக்கும்.

செய்திகள் பலர் சொல்ல
செவிமடுக்க செய்தீரே.

வாய் விட்டு சிரித்திடவே
வாய்ப்புகள் தந்தீரே.

உறவுகளின் பெருமைதனை 
உளமறிய செய்தீரே.

சேவைகள் விரிவடைய 
செயல்படுத்த முனைந்தீரே.

சாதனைகள் செய்தாரை
ஊக்கமடைய செய்தீரே.

எமைப் போன்றே பலரையும்
ஏக்கமடைய செய்தீரே.

சிறந்த நிகழ்ச்சிகள்  பலயிருக்கும்,
அதிலொன்றாய் உமதிருக்கும்.

சேவையென கொண்டாலே
உமதும் ஒரு சேவைதான்.

இனிதாய் என்றும் தொடர,
இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்,

A.M.பத்ரி நாராயணன் என அழைக்கபடும்
தவப்புதல்வன்.
06/01/2009.

திருமண வாழ்த்து

மணமகன்               மணமகள்
QQQQQQQQQ       QQQQQQQQQ
பிரசன்ன குமார்   வித்யாலக்ஷ்மி


நாள் 01\ 02 \ 2009.   இடம் ஆத்தூர் (சேலம் )
sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

ஆனந்தமாய் நாம் இணைந்தபடி
ஆடிப்பாடிடுவோம்,
அள்ளிக் கொஞ்சிடுவோம்.

அள்ளிய, கொஞ்சிய நாட்களை
அசைப்போட்டபடி,
அவணியே மெச்ச, 
அருமையாய் இரண்டை
ஆனந்தமாய் பெற்றிடுவோம்

நம் விரல் பற்றி, நமைக்கண்டு,
நமை அழைக்கும், நாள் வரையே
ஒலிக்கின்ற ஒலிகளுக்கெல்லாம்,
ஓராயிரம் சொற்களால்
ஓயாமல் மொழிப்பெயர்போம்.

கனவுகளை நனவுகளாக்க
பின்னாளை முன்னதாக
கற்பனையாய் காட்சிகளை
கவிதையாய் வடித்து விட்டோம்.

அதற்கு முன்னதாக 
இருக்கின்ற இந்நாளுடன்
வரப்போகும் நாட்களெல்லாம்
இனிக்கின்ற நாட்களாக
வானிலே வட்டமிடும்
ஜோடிப்பறவைகளாய்
புவியிலே வலம் வருவோம்.

காலம் சிறிது கழிந்த பின்னே
ஆனந்தமாய் நாம் இணைந்தபடியீ.....


என்று ஆனந்தத்தில் ஊஞ்சலாடும்
இப்புதுமண தம்பதிகளுக்கு,
வாழ்த்துக்களை வழங்கும்,

தாத்தா.P.A.மாணிக்கம் செட்டியார்.
மாமா.A.M. பத்ரி நாராயணன்.
மாமா.M.தாமோதரன்.
மாமா.M.ரகுராம்.
மற்றும் குடும்பத்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, February 16, 2009

பாரதத்தின் வீரம் - மறைந்த வீரருக்கு அஞ்சலி

பாரத நாட்டை உருகுலைக்க,
புழக்கடை வழியே உள்நுழைந்தார்
முதுகெலும்பற்ற கோழைகள்
நேருக்கு நேர் மோத வீரமின்றி.

ஒன்று பட்ட பாரதத்தை
சீண்ட பார்க்க (துண்டாட) நினைக்கின்றார்.
பாரதத்தின் வலிமைதனை
உணர்ந்திருப்பர் இந்நேரம்.

கிழக்கு மேற்கு என்றில்லை
வடக்கு தெற்கு என்றில்லை
ஒன்றுபட்ட பாரதமே
வலிமையான பாரதம்.

புரிந்து கொள்ளா மூடர்களுக்கு
காலம் சிறிது ஆகலாம்.
என்றுமே இணைந்திருப்போம்
திறமைதனை காட்டியே.

வாலாட்டி பார்க்கின்றார்
வலிமைதனை அறியாமல்.
முழுமையாக நறுக்கிடுவோம்
எங்கும் இதுபோல் முளைக்காமல்.

நறுக்கிடும் வேலையிலே
இன்னுயிர் ஈந்தீரே!
கண்களில் அருவியாக,
உம் செயல்களின் நினைவாக,
கவிதைகளாய் பொழிந்தோமே
உமக்கு அஞ்சலி செய்திடவே.


பின் குறிப்பு
      சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்'' ''அஞ்சலி''  தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன்.  வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...

புகழஞ்சலி

விரோதிகளை ஒழித்திடவே
வீரனாய் சென்றாயே!
முன்னின்று நடத்தினாயே
முனைப்பதனைக் காட்டி.

மெல்ல மெல்ல அடி எடுத்தாய்
முன்னோக்கி நகர்ந்து சென்றாய்
பீடைகளை ஒழித்து விட்டு,
பிணைகளை மீட்க.

வெடிகளின் வேகத்தால்
வெட்டுண்ட உம் உடலை
கண்டுத்தான் துடித்து விட்டோம்
காது கொடுக்க முடியாமல்.

வாசித்த செய்தியெல்லாம்
நெஞ்சையே பதற வைக்க
வாய் விட்டு கதறி விட்டோம்
கொடியவரின் செயலைக் கண்டு.

மனத்தில் ஏறிய பாரத்தினால்
மருகித்தான் நின்று விட்டோம்.
கண்ணில் வழிந்த நீரையே
காணிக்கையாக சமர்ப்பித்தோம்.

மண்ணுலகில் எந்நாளும்
மங்காத புகழ் கொண்டு வாழ்வாயே!
இந்நாட்டு மக்களுக்காக 
இன்னுயிரை ஈந்த நீயே.

உன்னை நினைத்து
சபதமேற்போம்,
அஞ்சாமல் அசராமல்
நம் நாட்டை காக்க!



பின் குறிப்பு
      சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்''  அஞ்சலி''  தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன்.  வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...

எதைச் சொல்லி ஆற்றிடுவேன்?

பாவியவன்,
பாலூட்டி வளர்த்த தாயை
பாலூற்ற வைத்து விட்டான்.

பயங்கர வாதத்தினால்
பாகுபாடு செய்து - அவன்
பங்கு போட நினைத்து விட்டான்.

பாரத தேசந்தனை
பந்தாடி பார்த்திடவே,
கூறு கெட்ட மனங்களினால்
கூறு போட, அனுப்பட்டு
கொன்றுத்தான் குவித்தானே
கொலைக்காரன் - உன்னையும் சேர்த்து.

ஊணென்றும் உறவென்றும்
உணர்வுகளைக் கொள்ளாமல்
உரிமையான நாட்டைக் காத்திடவே
உழைத்த உன்னை
உருகுலைய செய்து - அவன்
உலையிலே போட வைத்தான் (னே)

உனைப் பெற்ற இதயங்களின்
உள்ளக் குமறல்களை
எதைச் சொல்லி ஆற்றிடுவேன்!
எதைச் சொல்லித் தேற்றிடுவேன்!!


பின் குறிப்பு
      சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்'' அஞ்சலி''  தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன்.  வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...

கடவுளாய் நீ..

கூறு போட வந்தவரை
கூண்டோடு விரட்டி விட
கண்ணாய் இருந்தாய், இந்நாட்டின்
கன்னியத்தைக் காத்திடவே.
களம் புகுந்த உன்னை- அவன்
காலனிடம் அனுப்பி விட்டான்.

நாங்கள் 
ஓய்ந்திருந்த நேரத்திலும்
ஓயாமல் கண் விழித்தாய்.
விழித்த விழி மூடி விட்டாய்
விழிகளையே நிறைத்து விட்டாய்.

கண் கலங்கி நிற்கின்றோம்
தாக்கத்தை உணர்கின்றோம்.
உனையிழந்த நேரத்திலே
யாரைத்தான் குற்றம் சொல்ல?
நினைவுகள் உள்ளவரை
நினைவுகளில் நிறைந்திருப்பாய்.

மற்றொரு நேரமதில்
இந்நிலை நேராமல்
முனைப்புடன் இருந்திடவே,
அருவமாய் இருந்தாலும்
வழி நடத்திக் காப்பாயே.

காப்பவரை கடவுளென்போம்
ஆம்!  நீயும் கடவுள் தான்!!
காத்தாயே இந்நாட்டின் 
கவுரவத்தை.


பின் குறிப்பு
      சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே தாக்குதல்- அஞ்சலி''  தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன்.  வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...

எப்படி இருக்கிறாய் நீ.....!






விடுதலைப் பெற்ற
நினைவிலா?
விடுப் பட்ட
உணர்விலா?

சஞ்சலங்கள் நிறைந்த
மனத்திலா?
சாதனை புரிந்த
மகிழ்விலா?

விரைந்து செல்கிறதா?
காலம்
விக்கித்து நிற்கிறதா?
நேரம்

ஆழ்கடலாய் இருக்கிறதா?
மனம்
புயற்காற்றாய் வீசுகிறதா?
எண்ணம்

பார்த்து பரிகசிப்பாயா
என் எண்ணங்களை
பரவசத்தில் படரவிடுவாயா
உன் கண்களை

கேட்க உள்ளனரா
உன்னிடம்
சொல்ல நினைப்பாயா
என்னிடம்