Translate

Showing posts with label கரமதைக் கோர்த்திருப்போம். Show all posts
Showing posts with label கரமதைக் கோர்த்திருப்போம். Show all posts

Monday, January 15, 2018

கரமதைக் கோர்த்திருப்போம்



நானின்றி நீயில்லை.
ஆனால்
எங்குமே
நீயின்றி நானுன்டு,
என்றொரு அகந்தை எனக்குண்டு.

வரண்டதொரு நிலமாய்,,
பாலையில் மணலாய்
பாறைகளோடு நிலமாய்,
பலவாறாய் இருந்தாலும்

கண்களுக்கு விருந்தாக
வாயிக்கு ருசியாக,
வயிற்றுக்கு பசியாற
பசுமையெனும் பெயரெடுக்க
நீயின்றி நானில்லை..

என்றும் ஒன்றாய் கூடியிருப்போம்.
நட்புக்கு இணையென பேரெடுப்போம்.
விளைச்சலை கூடுதலாய் தந்துதவ,
இயற்கைப்படைப்புகள உடனழைப்போம்.
உயிர்களின் பசிப்பிணி  போக்கிட,

முடிந்தளவு நாமும் உதவிடுவோம்.

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்