Translate

Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

Thursday, February 8, 2018

கனவு

என் கனவில் நீ
உறங்கிக் கொண்டிருக்க - உன்
கனவில் நான்.

கனவு என்ற தலைப்புக்கு மூன்று வரியில் எழுதிய கவிதை

Sunday, October 8, 2017

வருந்துகின்றேன்


செய்யாத குற்றத்தை
வாலிபத்தில்
செய்திருந்தால் நலமென்று.

திகைக்கின்றேன்

நடையிழந்த போது
கோலூன்றி நடந்தேன்.
கோலுடைந்த போது
நினைவுகளில் திகைக்கின்றேன்.😞

Wednesday, October 4, 2017

மீண்டும் - குறுங்கவிதை


தனிமையில் காதலித்தேன் 
தனிமையாய்  உன்னுடனே.
தாகத்துடன் காத்திருக்கிறேன் 
தணிக்க நீ வருவாயென.

 

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதை

இயக்கமோ எமது விரைவாக 
இசைந்து கொடுத்தாய் நெகிழ்வாக 
இசையோடு நடனமாய் அது விளங்க,
இயல்பாய் அத்தனையும் பொருந்திருக்க 
இரசிகருக்கு  அதுவே விருந்தாக 
இருந்ததே ஆக்கம் முடிந்தபின்னும் 




--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதை

கவிஞர் Sukumar Kumar அவர்களுக்கு

எங்கோ அலைகிறது மனம். 
இங்கே இழுக்கிறது கண்கள். 
உள்ளத்திலிருக்கிறது கதைகள். 
உலகறிய செய்யும் கைகள். 
தூண்டும் உம் சொற்கள், 
படைக்க கொடுக்கிறது வலிமை. 


--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Saturday, November 28, 2015

ஓட்டைகள் - ஹைக்கூ...


ஓட்டைகள்
ஆகாயத்தில் எத்தனையோ!,
அத்தனையும் மூடிவிட்டு
பொழிகிறது மேகங்கள்


Monday, October 26, 2015

அழையுங்கள் - குறுங்கவிதை



குடியினால் இறந்தவனை
புதைத்தப் பிறகும்
அழுவதற்கு மிச்சமிருந்தால்.
''அழையுங்கள்''



பொருள்: குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமின்றி குடியினால் தன்னை அழித்துக் கொண்டு, இறந்தவனுக்கான அழுகையில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன்.
ஐயோ! குடும்பத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு சண்டாளன் போய்விட்டானே, இனி குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேனென அழக்கூடிய நிலையிருந்தால், உதவிக்கு நானங்கு வருவேன்.

-    ஆண்டவன்.

Friday, July 3, 2015

அட போடா! - குறுங்கவிதை



அட போடா!
இதுதான் வாழ்க்கை
உனை மறந்து போகிறேன்
அவனில் மூழ்கி நான்

Tuesday, April 7, 2015

இயலாமல் - குறுங்கவிதை





சூட நினைத்தாலும்
பூத்திருப்பதோ வேறிடத்தில்.
தடையாய் வேலிகள்
தாண்டிட இயலாமல். 

ஊர்வலம் - குறுங்கவிதை




உறவுகளின்
உற்சாக தொடர்வண்டி
நினைவுகளில் ஓடுகிறது,

நினைக்கும் போதெல்லாம்
சந்தோசமாய்
அழைத்துக் கொண்டு.

வாழ்க்கை - குறுங்கவிதை



வேண்டுமே
என்றும்
பியூஸ் போகும்
மின்விளக்காய்.

வேண்டாமே
திரி
கருகியணையும்
நெய் விளக்காய்.

ஏதேதோ.... - குறுங்கவிதை


தர்மவானென பெயரெடுத்து
பிச்சைகாரனாக்குகிறாய் -
- உன்னிடத்தில்.
மடியைத் தா..
முத்தம் தா....
இப்படி ஏதேதோ....

தீராத -குறுங்கவிதை


பளபளக்கும்
நின் மென்கூந்தல்
கட்டுடலைத் தழுவி
புரளும் போதெல்லாம்
ஆசைதான் எனக்கும்

Thursday, March 19, 2015

விடியலில் - குறுங்கவிதை

 

நீ
எப்படியோ
அப்படியே
நான்.

அழகான விடியலுக்கு வாழ்த்துக்கள் நட்புகளே.

Wednesday, March 11, 2015

நாய் - குறுங்கவிதை

நாய் 

குலைக்கிறது 
தெரியவில்லை 
அதற்கும்.
நல்லவனா?
கெட்டவனா?

அருள் நிலைக்கட்டும் நட்புகளே! 

தூது - குறுங்கவிதை


தூது



உன்னவரை

நான் கண்டேன்.
என்னவளைக் கண்டாயோ
தோழி நீ......

அன்பு நன்னாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

Tuesday, March 10, 2015

''உன்னிடம்'' - குறுங்கவிதை



 எனக்குள்  பேசிக்கொண்டிருப்பேன்.
பதிலில்லையேயென
ஏங்கிக்கொண்டிருப்பேன்.

''உன்னிடம்''

அருமையான நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

Thursday, March 5, 2015

புதிர் - குறுங்கவிதை,




நீ சொல்லா புதிருக்கு
விடையெங்கு போவேன்?
உனை அறியவியலா புதிருக்கு
விடையென்று காண்வேன்?

அன்பான நன்னாள் வாழ்த்துக்கள் நட்புகளே.





நன்றி Thanks to:

http://thumbs.dreamstime.com/x/illustration-telugu-girl-26336220.jpg




 

Thursday, February 19, 2015

இருக்கிறேனா.... குறுங்கவிதை


தேடித் பார்க்கிறேன்,
உன்னிலே என்னை.  

'' இருக்கிறேனா.... '' 

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்  நண்பர்களே..