Translate

Showing posts with label இதுவுமொரு போதை. Show all posts
Showing posts with label இதுவுமொரு போதை. Show all posts

Wednesday, October 11, 2017

இதுவுமொரு போதை


பார்த்தறியா நட்புடனே
வலைதளத்தில் மூழ்கிருந்தான்.
அறிந்தவர் அருகிலிருக்க,
அறியாதார் போலிருந்தான்.
வலையிடை நட்புகளுடன்
தலை குனிந்து இணைந்திருந்தான்.
ஒரு நொடி தாமதமானாலும்
துடித்துடித்து தவித்திருப்பான்.
விரல்கள் துருதுருக்க
விழிகள் படப்படக்க
உடல் முழுதும் விறுவிறுக்க 
மூக்கும் விரைத்துக் கொள்ள
பாரமது ஏறியது போல்
தலையினை இறுக்கிக் கொள்வான்.
பந்தபாசம் பறந்தோட,
புது உறவு மகிழ்வளிக்க,
உற்ற உறவை இழந்து விட்டு
உருவறியா நட்பிடம் தனையிழந்தான்.

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.