Translate

Showing posts with label சென்ரியூ வகை கவிதைகள். Show all posts
Showing posts with label சென்ரியூ வகை கவிதைகள். Show all posts

Thursday, January 4, 2018

சென்ரியூ வகை கவிதைகள் - 8


புலி புதரில் பதுங்கி
காத்திருந்தது இரைக்காக
கொக்கு ஒரு காலில் நீரில் நின்றபடி

ஆலமர விழுதுகள் வளர்ந்தன
பூமியைப் பார்த்தபடி
வானில் வட்டமிட்டு பறந்த கழுகு

காவல் நாய்கள் திருடனைத்தேடி
மோப்பம் பிடித்துக் கொஒண்டிருந்தன
உணவைத் தேடி பன்றிகள்

வெள்ளத்தால் ஆற்றின் மணற்கரை
கரைந்து கொண்டிருந்தது
கடும் வெப்பத்தினால் மெழுகு.

அன்னை அணைப்புக்கு ஏங்கிய குழந்தை
அலறிக் கொண்டிருந்தது
பசியினால் மற்றொரு குழந்தை.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

Thursday, December 7, 2017

சென்ரியூ வகை கவிதைகள் – 7


முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆவி
காற்றோடு கலந்து விட்டது
அவர் ஆற்றிய பல உரைகள்

வானம் முழுவதும் சிவந்திருந்தது
இது தொடக்கமா? முடிவா?
எங்கும் படர்ந்திருந்த ஊழல்

சோக, பக்தி நிகழ்வுகள் எல்லாம்
கடை சரக்கு ஆகிவிட்டது
இப்போது பல திருமண பந்தங்கள்

நினைவுகளில் பசுமையாய் உன் உறவு
கண்ணீரால் கரைக்க முடியவில்லை 😭
நீ கொட்டிய பாச மழை. 👩‍❤️‍👨🌨️

இதை பொறுமையாய் படித்து விட்டு
சிரிக்கத் தான் முடியவில்லை
பலரிடம் பட்ட அனுபவங்களின் சூடு.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏