Translate

Tuesday, December 31, 2013

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

ஒன்று இரண்டென எண்ணிக்கைகள் 
முடிக்கும் முன்னே,
வருடமென ஒன்று 
முடிந்தே இன்று.

புதிய மலராய் 
பூத்திருக்கும் நாளிது. 
தொடக்கத்தின் முதலென 
கொண்டாடி மகிழ்வோம்.

முறையாய் சிந்தித்து 
விரைவாய் முடித்திட,
மூழ்குவோம் தொடர்ந்து 
விழிப்புடன் நாம்.

வாழ்த்துக்களோ வழக்கமாய் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!  






சேலத்தில் எயிட்ஸ்

சேலம் மாவட்டத்தில் எயிட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்திய அளவில் 0.43 சதவீதமும்,
தமிழக அளவில் 0.28 சதவீதமும்
சராசரி அளவாக இருக்கும் போது
சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்திய சராசரிக்கு 3 மடங்குக்கு மேலும்,
தமிழக சராசரிக்கு சுமார் ஆறு மடங்கு,
அதாவது 1.5 சதவீதம் பேர் ஹெச்.ஐ.வி., எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2012ம் வருட கணக்கெடுப்பில் 0.14 சதவீத கர்ப்பிணி பெண்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்திருந்தனர்.

கடந்த காலங்களில் எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு இன்மையால், தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற பயத்தினால் எயிட்ஸ் நோயாளிகளை புறக்கணிக்கும் நிலை இருந்தது. விழிப்புணர்வு பிரச்சாரங்களாலும், மேற்கொள்ளப்படும் சிறப்பான தொடர் மருத்துவ சிகிச்சையாலும், சமுகத்தில் அவர்களை ஆதரிக்கும் நிலை சிறிது தோன்றியுள்ளது.

இரத்தத்தை கெடுப்பதற்கு கிருமிகளே காரணம். முன்பெல்லாம் ரத்தக்கொதிப்பு ( Blood  Pressure - பிளட் பிரசர் ), சக்கரை நோய் ( Diabetes ), இதய நோய் (Heart Disease ) போன்றவைகள் மக்களை பயமுறுத்தி வந்தது. இன்று அவற்றிக்கு இயல்பாக மருந்து எடுத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

அதுபோல் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து எடுத்து, எயிட்ஸ் நோயாளிகள் தங்கள் உடலுக்கு பலம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாநில, மாவட்ட அளவில் எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், மற்றும் உலக எயிட்ஸ் தின விழா  மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டாலும், தவறான கண்ணோட்டத்துடன் எயிட்ஸ் குறித்த மூடநம்பிக்கை, ஒதுக்குதல் மற்றும் புறக்கணித்தல் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

Monday, December 30, 2013

சந்நியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா! தீட்சை வழங்கினார் நித்தியானந்தா!!.



இது என்ன ஒரு பெரிய முக்கியமான விசயமா? எத்தனையோ பேர் தீட்சை பெறுகிறார்களே. அதைபோல் இதையும் விட வேண்டியது தானே. தேவையில்லாமல் மீடியாகாரர்கள் கூட்டமாய் நுழைய, அவர்களுடன் பொதுமக்களும் நுழைய, அடிதடி கலாட்டா. ஒருவரின் தனிப்பட்ட உரிமையான இடத்தில், அவர்களின் அனுமதியில்லாமல் நுழைவது எந்த விதத்தில் சரியென்று கருதுகிறார்கள்? தேவையா இது?

ஏதோ சட்ட விரோதமான செயல் நடைப்பெறுவது போலவும், அதை தடை செய்ய போவது போல், விற்பனையை அதிகரிக்கத்தான் மீடியாக்காரர்கள் செயல்படுகிறார்கள்.
கன்னட மடாதிபதிகள் கண்டனமாம். எதற்கு, இந்த நடிகை தங்களிடம் வந்து தீட்சை பெற்றுக் கொள்ளவில்லை என்றா? நித்தியானந்தாவையே நீங்கள் மதிப்பதில்லையே. அப்படியிருக்கையில் அவர் யாருக்கு தீட்சை கொடுத்தால் என்ன? கருமாதி செய்தாலென்ன?

# யான், நித்தியானந்தாவின் சீடனோ, அபிமானியோ அல்ல. நடைப்பெறும் செயல்கள் சரியானதாயென சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே, இதை பதித்துள்ளோம். 

Sunday, December 29, 2013

வணக்கத்தில் சில விதம்



1) தலையால் மட்டும் வணங்குதல் - ஏகாங்க நமஸ்காரம்.

2) வலது கையை மட்டும் தலை மீது வைத்து வணங்குதல்  - த்விதாங்க நமஸ்காரம்.

3) இரண்டு கைகளையும் தலை மேல் வைத்து வணங்குதல்  - த்ரிவிதாங்க நமஸ்காரம்.

4) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டிகள், தலை, இவற்றால் வணங்குவது -- பஞ்சாங்க (பஞ்சங்க ) நமஸ்காரம்.

5) இரு கால்கள், இரு கைகள், இரு செவிகள், தலை, மார்பு, ஆகிய எட்டு அங்கங்களால் வணங்குதல் - அஷ்டாங்க நமஸ்காரம். 

6) நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது -- சாஷ்டாங்க நமஸ்காரம். 

#  மந்திரிகளும், சட்ட மன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும்,  கட்சி நிர்வாகிகளும் போடும் வணக்கம், இந்த வகையில், எந்த வகை?

# கூழைக்கும்பிடு  என்கிறார்களே, அதற்கான தனி விதிமுறை என்ன? 

தமிழ் அன்னைக்கு வாழ்த்து


வார்த்தைகள் ஓடி வர
எண்ணங்களில் மிதந்து வர
வண்ணங்களை பூசிக் கொள்ள
வானவில்லாய் தோன்றுமதை
செந்தமிழில் நிலைத்து நிற்க
வரிவடிவம் கொடுத்து வைத்தேன்.

இனியத்தமிழில் வாயினிக்க
என்றென்றும் நிலைத்து நிற்க
சுவையாக நீங்கள் அருந்த
இதமாக நான் தருவேன்.
மனத்திலே சுவையிருக்க
நினைவிலே தானிருக்க
மகிழ்விலே தானினிக்க
தீந்தமிழ் சொல்லாலே
எழுத்தோவியம் கையாலே
நான் கொடுப்பேன் உமக்காக!!






லஞ்சம் ரூ 5000 மட்டும் தானா? ஹி.. ஹி... ஹி....



தமிழகத்தில் 1964ஆம் ஆண்டு, உறவினர்கள் கைவிட்ட, வாழ வழியற்ற முதியோர்களை பாதுகாக்கும் பொருட்டு, முதியோர் ஓய்வூதிய திட்டம் துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் , உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழும், பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஓய்வூதியம் ரூ 1000மாக உயர்த்தி தரப்பட்டது.  நேரடியாகவும், ஜமாபந்தி, அம்மா திட்ட முகாம்கள் மூலமாக ஓ.ஏ.பி. (old age pensioner ) (முதியோர் ) திட்ட ஓய்வூதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதனால் கட்சிக்காரர்களும், வருவாய் துறை அலுவலர்களும் ரூ.5000 வரை ( மீதி?) பெற்றுக் கொண்டு, விருப்பத்திற்கு ஏற்றபடி பயனாளிகளை சேர்த்தனர்.

அதனால், ஈரோடு, கன்னியாகுமரி, நாகை,  விருதுநகர், நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகள் 130 சதவீதமும், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி,நாகை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில், உழவர் பாதுகாப்ப ஒய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் பல நூறு சதவீதம் அதிகரித்தது.

 வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலை விட ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகுதான் விழிப்பு வந்திருக்கிறது.  மாநிலம் முழுவதும் தணிக்கை செய்ததில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10,000லிருந்து 15 ஆயிரம் பயனாளிகளை நீக்கியுள்ளனர். (பல நூறு சதவீத உயர்வுயென கூறி விட்டு, இந்த கணக்கு எங்கோ இடிக்கிறதே )

ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு இருந்த பயனாளிகள் 40000 பேர். ஆனால் இந்த ஆண்டோ, உயர்ந்தது மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம். ஆக 1,45,000. இதில் 25 ஆயிரம் மட்டும் தானா போலி?

அது சரி, 25 ஆயிரம் போலியென கண்டுபிடித்து விட்டு, 10 ஆயிரம் பயனாளிகளை மட்டும்  நீக்கியிருக்கிறார்களாம். மற்ற 15 பேரை நீக்குவதில் என்ன தயக்கம்? இதிலும் எங்கோ குடைகிறதே? அனைத்துக் குற்றங்களுக்கும் சலுகைகள் தானா? பாவம் அப்பாவிகள் மட்டும்.

Saturday, December 28, 2013

உரிமையில்லா உரிமைக்கு துவங்குமோ போராட்டம்?



 




பூமிக்கடியில் இருந்த கனிமங்களை, ஏறக்குறைய வெட்டியெடுத்து விட்டார்கள், சுரங்கங்களைத் தோண்டி. இனி கிடைக்காது என்ற நிலையில் தேட வேண்டியது கடலுக்கடியிலும், விண்வெளி கற்களிலும்.

விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலம் 'ஆஸ்டிராய்டு ' என்ற விண்வெளி கற்களில்  கனிமங்கள் இருப்பதை விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகள் மூலம் கண்டுப் பிடித்துள்ளனர். நிலத்துக்கடியில்  உள்ளது போலவே, நீர், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை இருப்பது தெரிய வந்துள்ளது.

விண்வெளி கற்களை மோத வைப்பதின் மூலம் கனிமங்களை வெளிக் கொணரலாம். இதன் மூலம் , மேலும் பல ஊகங்களுக்கு விடையறிய முடியுமென  கருதுகிறார்கள்.

# நாட்டின் எல்லைகளுக்கு பிரச்சனை இருப்பது போல், விண்கற்களுக்கும் உரிமை பிரச்சனை ஆரம்பமாகிவிடும்.


Tuesday, December 24, 2013

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - 2013 - Baby Sadhana




நலமுடன் நாட்டியமாடி,
குதுகலமுடன் கும்மாளமிட்டு,
மகிழ்வுடன் நீ வளர,
ஆசிகளை வழங்கினோம்
அன்புடன் உனக்கு தானே.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் பேத்தியே.

தாத்தா, பாட்டி.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - 2013

தோட்டத்து செடிகளில்
பூக்களாய் மலர்ந்திருக்க,
காற்றிலாடும் மலர்களோ
மணம் பரப்பி தாலாட்ட.
சுவையறியா நெஞ்சமும்
மகிழ்விலே பாட்டிசைக்க,
குறையா அன்புடன்
குதுகலம் நிறைந்திருக்க.
நிலையான நலன்கள்
வாழ்விலே தொடர்ந்திருக்க,
வாழ்த்தினோம் இன்றே
குடும்பமது சிறந்தோங்க.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

அஞ்சலி செய்தி - Ranganaadhan S/o Suresh Babu R



எமது சகலையும், முன்னாள் ஆசிரியரும், சுரேஷ் பாபு( Suresh Babu )வின் தந்தையுமான அன்னார் ரங்கநாதன் அவர்கள், சென்ற 22/12/13 இரவு இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது மறைவால் பெரும் துயரிலிருக்கும் குடும்பத்தினருக்கும், சுற்றம் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம்.






இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Venkata Kandar Swaminathan Shanmuganaathan



Venkata Kandar Swaminathan Shanmuganaathan
நகல்கள் இருப்பினும்,
அசலது ஒன்றே.
நிழல்கள் ஆயிரம்
நிசமது ஒன்றே.
நடக்கட்டும் நல்லது
மகிழ்வாய் என்றும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Monday, December 23, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rammohan Ramamoorthy


Rammohan Ramamoorthy


செயல்களெல்லாம்
சீராய் இருந்து,
சிறப்பென பெயரினை
விரைவிலே பெற்று
வாழ்விலே உயர,
இனிதான நாளில்
இன்முகமுடன் வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shanmuganathan Swaminathan



 Shanmuganathan Swaminathan

தூரிகைகளெல்லாம் ஓடிப்போக,
எலியின் துணையுடன் கைகளோ
கணினியில் மேய,
கொண்டதோ வடிவம்
புது விதமாக?
வாழ்வின் நிலையோ
செயலிலே சிறக்க,
அன்புடன் வாழ்த்தினோம்
நாளது இன்றில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Sunday, December 22, 2013

தண்டனை!!!!- மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டி



அனைத்து எக்ஸ்பிரஸ் (விரைவு) ரயில் பெட்டிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யோகமாக பெட்டி (எஸ்.எல்.ஆர்.டி) ஒடுக்கப்பட்டுள்ளது. அதில்


1) நெருக்கமாக உட்கார்ந்து (அமர்ந்து) சென்றால், 20 முதல் 25 பேர் வரை செல்லலாம்.
* பெட்டியில் ஒதுக்கியிருய்ப்பதே 2 சீட்டுகள். அதில் 6லிருந்து 8 பேர் மட்டுமே அமர முடியும். மற்றவர்கள் பேட்டியின் தரைப் பகுதியில் தான் அமர வேண்டும்.

2) படுத்து சென்றால் 4 பேர் செல்லலாம்.
* 2 சீட்டில் 4 பேர் படுக்க முடியுமா?

3) ரயில்வே ஊழியர்களும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும், பொது மக்களும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

* உண்மை தான். பல சமயங்களில் ரயில் பரிசோதகர்களும் மற்றவர்களை அனுமதிக்கிறார்கள். இதை மாற்றுத்திறனாளிகளால் சுட்டிக் காட்டி கேட்க முடிவதில்லை.

** 20 முதல் 25 பேர் அமர்ந்து விட்டால், கழிவறைக்குக் கூட செல்ல இயலாது.


Photo

Saturday, December 21, 2013

தமிழ் விக்கிபீடியா - கட்டுரைகள்

தமிழ் விக்கிபீடியா தொடங்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில்,இதுவரை 50 ஆயிரம் கட்டுரைகள் தான் இடம் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ள நிலையில், குறைந்தபட்சம் 1 கோடி கட்டுரைகளாவது நமது பங்களிப்பு செய்திருக்க வேண்டாமா? 

விக்கிபீடியாவில் ஹிந்திக்கு அடுத்துதான் தமிழ் உள்ளது. தமிழ் ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பது குறைவாக உள்ளது.கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் வெளியிட முன்வர வேண்டும்.

# தமிழ் அறிஞர்களே! கொஞ்சம் முட்டுக் கொடுங்களேன்.


http://en.wikipedia.org/wiki/File:Wikipedia-logo-v2-ta.svg

தமிழில்

தமிழில் 10 கோடி சொற்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், தமிழ் விக்கிபீடியாவில் 3 இலட்சம் தமிழ் சொற்கள் தான் தொகுக்கப்பட்டுள்ளனவாம். 

# உங்களுக்கு தெரிந்த தமிழ் சொற்களை, விக்கிபீடியாவில் கோர்த்து ( சேர்த்து ) விடுங்களேன். 

http://en.wikipedia.org/wiki/Tamil_Wikipedia

இன்றொரு தகவல் - நெல்சன் மண்டேலா

Photo: இன்றொரு தகவல் - நெல்சன் மண்டேலா 

மகாத்மா காந்தி வழியில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக, அறவழிப் போராட்டத்தில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து,  வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா  சமிபத்தில் மறைந்தது அனைவரும் அறிந்ததே.

 ஒரு முறையேனும் கண்களால்  அவர் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற நினைவுடன் நாட்டின் மூளை முடுக்களிலிருந்து வந்திருந்த  பல இலட்சக் கணக்கான  மக்கள், மிக பரந்த வெளியில் கட்சி தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள், காவலர்கள், இராணுவம் மற்றும்  தடுப்புகள் எதுவுமே இல்லாமலும்,  முட்டி மோதி முன்செல்ல முயலாமலும், அரும்பெரும் தலைவர் மறைந்து விட்டபோதும், தனியார் மற்றும்  பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமலும்,  வளைந்தும் நெளிந்தும், 'ப' வடிவிலும் மிக நீண்ட வரிசையில் ஒருவருக்கு பின் ஒருவராக  சுய கட்டுப்பாடுடன் அஞ்சலி செலுத்த நின்றிருந்த  காட்சியை, புகைப்படத்தில் கண்டதும், மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த நாட்டினரை விட வாழ்விலும், கல்வியறிவிலும் முன்னேறியவர்களாய் கருதிக் கொள்ளும் நாம், நமது நாட்டில் சில நூறு நபர்கள் கூடும் இடத்தில் கூட பொறுமைக் காப்பதில்லை. முட்டி மோதிக் கொள்கிறோம். அதற்கும் ஆயிரத்தெட்டு தடுப்புகள் தேவைப்படுகிறது. அப்படியும் அதையும் மீறி செல்ல முயற்சி செய்கிறோம். அப்படி முயற்சித்தும் முடியாத பட்சத்தில் அருகிலிருக்கும் மற்றவர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, ஒரு அற்ப சந்தோஷம் அடைகிறோம்.

உலகில் கற்றுக் கொள்ள, அளவிடயியலா நற்செயல்கள் பல இருக்கையில், தீதை கற்றுக் கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஆர்வம் கொள்கிறோம்.  நீங்களே நினைத்துப் பாருங்கள், நாம்  பகுதியிலேயே ஒரு கட்சியில் சிறிய பொறுப்பிலிருந்தாலும், தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் அப்பகுதியே இருக்க வேண்டுமென நினைத்து செயல்படுபவராயினும் (பேட்டை ரவுடி), அவர்கள் வீட்டு விழா நிகழ்வுகளாயினும், துக்க நிகழ்வுகளாயினும், அப்பகுதியே அல்லோகலப்படும். கடைகள் வலிய அடைக்கப்படும். போக்குவரத்து தடை செய்யப்படும். அங்கு எதிர்பாளர்களாக கருதப்படுபவர்களின் சொத்துக்கள், இதுதான் சமயமென சேதப்படுத்தப்படும். அவரையும், அவர் குடுப்பத்தினரையும் தாக்கவும் வாய்ப்புண்டு.

# நல்ல விழிப்புணர்வுகள் எப்போது தோன்றும்? யார் தோற்றுவிப்பார்கள்?

மகாத்மா காந்தி வழியில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக, அறவழிப் போராட்டத்தில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து, வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமிபத்தில் மறைந்தது அனைவரும் அறிந்ததே.

ஒரு முறையேனும் கண்களால் அவர் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற நினைவுடன் நாட்டின் மூளை முடுக்களிலிருந்து வந்திருந்த பல இலட்சக் கணக்கான மக்கள், மிக பரந்த வெளியில் கட்சி தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள், காவலர்கள், இராணுவம் மற்றும் தடுப்புகள் எதுவுமே இல்லாமலும், முட்டி மோதி முன்செல்ல முயலாமலும், அரும்பெரும் தலைவர் மறைந்து விட்டபோதும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமலும், வளைந்தும் நெளிந்தும், 'ப' வடிவிலும் மிக நீண்ட வரிசையில் ஒருவருக்கு பின் ஒருவராக சுய கட்டுப்பாடுடன் அஞ்சலி செலுத்த நின்றிருந்த காட்சியை, புகைப்படத்தில் கண்டதும், மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த நாட்டினரை விட வாழ்விலும், கல்வியறிவிலும் முன்னேறியவர்களாய் கருதிக் கொள்ளும் நாம், நமது நாட்டில் சில நூறு நபர்கள் கூடும் இடத்தில் கூட பொறுமைக் காப்பதில்லை. முட்டி மோதிக் கொள்கிறோம். அதற்கும் ஆயிரத்தெட்டு தடுப்புகள் தேவைப்படுகிறது. அப்படியும் அதையும் மீறி செல்ல முயற்சி செய்கிறோம். அப்படி முயற்சித்தும் முடியாத பட்சத்தில் அருகிலிருக்கும் மற்றவர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, ஒரு அற்ப சந்தோஷம் அடைகிறோம்.

உலகில் கற்றுக் கொள்ள, அளவிடயியலா நற்செயல்கள் பல இருக்கையில், தீதை கற்றுக் கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஆர்வம் கொள்கிறோம். நீங்களே நினைத்துப் பாருங்கள், நாம் பகுதியிலேயே ஒரு கட்சியில் சிறிய பொறுப்பிலிருந்தாலும், தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் அப்பகுதியே இருக்க வேண்டுமென நினைத்து செயல்படுபவராயினும் (பேட்டை ரவுடி), அவர்கள் வீட்டு விழா நிகழ்வுகளாயினும், துக்க நிகழ்வுகளாயினும், அப்பகுதியே அல்லோகலப்படும். கடைகள் வலிய அடைக்கப்படும். போக்குவரத்து தடை செய்யப்படும். அங்கு எதிர்பாளர்களாக கருதப்படுபவர்களின் சொத்துக்கள், இதுதான் சமயமென சேதப்படுத்தப்படும். அவரையும், அவர் குடுப்பத்தினரையும் தாக்கவும் வாய்ப்புண்டு.

# நல்ல விழிப்புணர்வுகள் எப்போது தோன்றும்? யார் தோற்றுவிப்பார்கள்?

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ஒப்பிலான் பாலு



ஒப்பிலான் பாலு

காணும் கனவுகள் 
கவிதையாய் திகழ்ந்து,
நடப்பவை யாவும் 
மகிழ்வினைக் கொடுக்க,
உடலும் மனமும் 
உறுதியுடன் இருக்க,
நட்பும் உறவும்
சூழ்ந்துமை வாழ்த்த,
நிலைக்கட்டும் இன்பம்
இன்று போல் என்றும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Photo: காணும் கனவுகள் 
கவிதையாய் திகழ்ந்து,
நடப்பவை யாவும் 
மகிழ்வினைக் கொடுக்க,
உடலும் மனமும் 
உறுதியுடன் இருக்க,
நட்பும் உறவும் 
சூழ்ந்துமை வாழ்த்த,
நிலைக்கட்டும் இன்பம் 
இன்று போல் என்றும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gee Shankar




Gee Shankar

இனிமையான நாளோ 
மகிழ்வான நாளோ,
புரிந்தும் புரியாமலும் 
குதுகலமாய் வாழ,
திடமான உடலுடன் 
நலமாயிருந்து,
நாளும் பொழுதும்
சுவையாய் கழிய,
இறைவனை வேண்டியே
துதித்தே வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Photo: இனிமையான நாளோ 
மகிழ்வான நாளோ,
புரிந்தும் புரியாமலும் 
குதுகலமாய் வாழ,
திடமான உடலுடன் 
நலமாயிருந்து,
நாளும் பொழுதும் 
சுவையாய் கழிய,
இறைவனை வேண்டியே 
துதித்தே வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

பிரார்த்திப்போம்!



முகநூலாளர் Suresh Babu அவர்களின் தந்தையும், எமது சகலையும் 


முன்னாள் ஆசிரியருமான திரு.ரங்கநாதன் அவர்கள், மூளையில் 

இரத்தகுழாய் வெடித்ததால், அறுவை சிகிச்சை முடிந்தும், அபாய கட்டத்தை 

தாண்டா நிலையில், தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் விரைவில் பூரண 

நலமுடன் இல்லம் திரும்ப பிரார்த்திக்கும்படி அன்புள்ளங்களைக் கேட்டுக் 

கொள்கிறோம்.






உங்கள் விட்டிற்கான வர்ணங்கள்.



உங்கள் வீடு புதிது, பழையது, எதுவாக இருப்பினும், வண்ணங்களால் மிளிர செய்ய, இதோ கீழே ஒரு இணைய தளம். இந்த இணைய தளத்தில் வண்ணம் பூச வேண்டிய அறையை, புகைப்படம் எடுத்து, இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் (அப்லோடு) செய்தால், ஒவ்வொரு வண்ணமாய் காட்டும். அதை பிரிண்ட் அவுட் எடுத்து, குடும்பத்துடன் ஆலோசித்து, தேர்ந்தெடுத்த வண்ணத்தை, பெயிண்டரிடம் கொடுத்தால் போதும். உங்கள் விருப்பப்படியே, உங்கள் அறை.

தற்போது பெயிண்ட் அடிக்காவிடினும், அழகு பாருங்கள், உங்கள் அறைகளை அப்லோட் செய்து. இந்த இணையதளத்தின் சேவை ஓரளவு திருப்திகரமாகவே இருக்கிறது.


http://colorjive.com/home.action

before and after

செல்போன் காப்பீடு



செல்போன்களை பலர் தொலைத்தாலும், 20 சதவீத உபயோகிப்பாளர் மட்டும் செல்போன்களைக் காப்பீடு செய்துள்ளதாக, யுனிவர்சல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செல்போன் முக்கிய பொருளாக மாறி வருகின்ற இந்த சூழ்நிலையில், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாக காப்பீடு திட்டத்தை ( இன்சூரன்ஸ் ) யுனிவர்சல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

யுனிவர்சல் நிறுவனத்தில் வாங்கும் போன்களுக்கு மட்டுமல்ல, வேறு எந்த கடையில் வாங்கியிருந்தாலும் யுனிவர்சல் காப்பீடு செய்ய முடியுமாம்.

# மக்களே! அணுகுங்கள் யுனிவர்சலை. காத்துக் கொள்ளுங்கள் உங்கள் செல்போன்களை. 

https://www.univercell.in/


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Kavi Priya

Mrs.
Kavi Priya

ஓவியமெல்லாம் காவியமாக,
காவியமெல்லாம் கவிதையாக,
கவிதைகளெல்லாம் இனியதாக,
செல்லும் வாழ்வோ நலமாக,
நினைவுகள் யாவும் சுவையாக,
அமைந்திட வாழ்த்தினோம் பிரியமாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிபிரியா.

அங்கிள் & ஆண்டி.

Wednesday, December 18, 2013

அடிமையாகும் இந்தியர்கள்



ஒரு எச்சரிக்கை மணி, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) யால்  அடிக்கப்பட்டுள்ளது.  

இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

வளர்ந்த நாடுகளில் மது புகையிலை பழக்கம் குறைந்து வரும் வேளையில், வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மது பழக்கம் இளைஞர்களை   ஆட்டி படைக்கிறது. வார விடுமுறைகள், விஷேசங்கன், திருவிழாக்கள், பண்டிகைகள் என்றால், மது இல்லாமல் விருந்தில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

இந்தியர்கள் பீர், ஒயின் வகைகளை விட, ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் போன்றவைகளையே அதிகம் விரும்புகின்றனர். "குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும்" என மருத்துவர்கள் எச்சரித்தாலும், குடியில் மூழ்கியவர்களால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

நாடு முழுவதும், போதையால் ஏற்படும் விபத்துக்கள், பல வகைகளில்  அதிகரித்துக் கொண்டே வருகின்றது சமுக விரோத செயல்கள், வன்முறை சம்பவங்களுக்கும் மதுவே முக்கிய காரணமாக உள்ளது. போதை பழக்கத்தினால் உற்பத்தித் திறனும், வருமான இழப்பும் ஏற்படுகிறது. 



மயக்கும் விளம்பரங்கள்:-
மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்கள்,  விளம்பர கட்டுப்பாடு சட்டங்களிருப்பினும் வலுவற்றதாகவே இருக்கிறது. குடிநீர், சோடா,சி.டி.க்கள், குளிர்பானங்கள் பெயர்களில், பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி, இளம்  வயதினரை எளிதாக ஈர்கின்றனர்.

சில முக்கிய விருது மற்றும் விழா நிகழ்ச்சிகள், விளையாட்டுக்களுக்கும் நிதி உதவி அளித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றன. இப்போது வெளியிடப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பாடல்களில், வசனங்களில், மதுபான வகைகளின் பெயர்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கின்றன. 

சமிப காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகிறது. இப்போதுள்ள நிலை நீடித்து, போதைப்பழக்கத்தை   தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சட்டங்களை கடுமையாக்க தவறினால், நாட்டின் மனித வளமுடன்  நாட்டின் பொருளாதார நிலையும், சட்ட ஒழுங்கு நிலையும்  மிக மோசமாக பாதிக்கப்படும். 

# ஆசாபாசங்களை துறந்தவர்களாக விளங்க வேண்டிய மத போதகர்களே (ஆன்மீகவாதிகளே ) நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்ற, இந்நிலையில் மதுபான வகைகளை வகை வகையையும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டி, எங்கும் சகஜமாக அனைத்து இடங்களிலும், நேரங்களிலும், வயது வித்தியாசமில்லாமல், அனைவருக்கும் விற்கக்கூடிய நிலையை வைத்துக் கொண்டு, சாதாரண குடிமகனை " குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும்" என்னும் சாதாரண விளம்பரம் மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுமா? 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - S.k. Dogra




S.k. Dogra

காவல்துறை அதிகாரி, கதாசிரியர், சிறந்த நண்பர் திரு. டோக்ரா அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் நண்பர்களே.

வல்லவரே! நல்லவரே!!
நாட்டின் நலம் காக்க,
நல்பதவியில் வீற்றிருப்பவரே.
செய்வன  திருந்த செய்யேன
அதன் வழி நடப்பவரே,
நல்லூக்கம் நலம்பட செய்யுமென
நற்செய்தி சொல்பவரே.
உம் சொற்களால்
ஊக்கமதைக் கொண்டோம்.
உம் செயல்களால்
உறுதியதைக் கொண்டோம்.
மென்மேலும் கூடட்டும் 
சிறப்புடன் வாழ்வு.
நலமுடனும் மகிழ்வுடனும்
வாழ வாழ்த்துகிறோம்
இனிய உம் பிறந்த நன்னாளிலே.


முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Photo: காவல்துறை அதிகாரி, கதாசிரியர், சிறந்த நண்பர் திரு. டோக்ரா அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் நண்பர்களே.

வல்லவரே! நல்லவரே!!
நாட்டின் நலம் காக்க,
நல்பதவியில் வீற்றிருப்பவரே.
செய்வன  திருந்த செய்யேன
அதன் வழி நடப்பவரே,
நல்லூக்கம் நலம்பட செய்யுமென
நற்செய்தி சொல்பவரே.
உம் சொற்களால்
ஊக்கமதைக் கொண்டோம்.
உம் செயல்களால்
உறுதியதைக் கொண்டோம்.
மென்மேலும் கூடட்டும் 
சிறப்புடன் வாழ்வு.
நலமுடனும் மகிழ்வுடனும்
வாழ வாழ்த்துகிறோம்
இனிய உம் பிறந்த நன்னாளிலே.


முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

உண்மையா?



பல நிறுவனங்களின் கைப்பேசி எனப்படும் அலைப்பேசிகளின்,  பெரும்பாலான இணைப்புகள் பாரத் சஞ்சார் என்கின்ற இந்திய தொலைப்பேசி நிறுவனத்தின் டவர்கள் ( அலைக்கற்றை கோபுரங்கள்) மூலமாகத்தான் தங்களுடைய இயக்கங்களை செயல்படுத்தி வருகிறதாம்.

மின்சாரம் தடைப்படும் நேரங்களில் டீசல் ஜெனரேட்டர்களை இயக்கி, டவர்களை செயல்பாட்டில் வைக்க வேண்டியுள்ளதால், கூடுதலாக டீசல், பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதால், தங்கள் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, இந்திய தொலைப்பேசி  நிறுவனமும், தனியார் தொலைபேசி நிறுவனங்களும், மின்சாரம் தடைப்படும் நேரங்களில் உடனடியாக டீசல் ஜெனரேட்டர்களை இயக்காமலும், அவ்வப்போது இடையில் நிறுத்தி வைத்து விடுகிறார்களாம். அதனால் தான் அலைப்பேசி உபயோகிப்போருக்கு சரியான சிக்னல் கிடைக்காமலும், அடிக்கடி தொடர்பு துண்டித்து போவதும் நேரிடுகிறதாம். 

இடையில் அழைப்புகள் துண்டிக்கப்படுவதால், தொலைப்பேசி நிறுவனங்களுக்கு  நட்டம் ஏற்படுவதில்லை. ஏனெனில் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து முழு கட்டணம் கழிக்கப்பட்டு விடுகிறது. தொடர்புக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், நாலைந்து முறை துண்டித்தாலும், சபித்தபடியே பேசி முடிக்கிறார்கள். சிக்னல் கிடைக்காமல் தடைப்படுவதர்கான காரணத்தை மக்கள் அறியாமலும், உணர்ந்துக் கொள்ளாமலும், கேள்வி கேட்காமலும் இருப்பது, நிறுவனங்களுக்கு பெரிய சாதகமாகும்.

எந்த ஒரு நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்கள் விலகுவதைப் பற்றி வருத்தப்படுவதாக தெரியவில்லை. ஏனெனில் மக்கள் அலைப்பேசி இணைப்பு வைத்திருப்பது, ஒரு கௌரவமாகவும், அத்யாவசிய தேவையாக நினைப்பதை உணர்ந்திருப்பதும் ஆகும். மேலும் தங்களை விட்டு வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு சென்றாலும், புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து கொண்டே இருப்பதால், தங்கள் தொழில் நசிந்து விடுமோ என்ற அச்சம் சிறிதும் இல்லா நிலையிலே இருப்பதும் ஆகும். 

காரணமேன்ன?

அலைப்பேசி இணைப்புகளின் ஆரம்பகாலங்களில்  தேவையான டவர்கள் இல்லாததால், அலைப்பேசிகளின் உபயோகத்தில் மிக சிரமமும், உபயோபாளர்களும் குறைவாக இருந்தது. தற்போது அப்படியில்லையே?
தற்சமயம் சிக்னல்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதற்கு காரணமென்ன? 

இது உண்மையா? 

1) டவர்களை இயக்கத் தேவையான மின்சாரம் அரசாங்கத்தால் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறதா?

2) செலவுகளை சிக்கனப்படுத்தும் விதமாக ஜெனரேட்டர்களை டீசலில் இயக்குவது குறைக்கப்படுகிறதா?

தீர்வு என்ன?

1) மின்சாரம், டீசல் ஜெனரேட்டருடன், அந்த டவர்களிலேயே காற்றின் மூலமாக இயங்கும் சிறிய காற்றாலை விசிறிகள் அமைப்பது, 

2) அல்லது அந்த டவர்களிலேயே சூரிய சக்தி ஒளித்தகடுகள் அமைப்பது மூலமாக அந்த கோப்புரங்களுக்கான   (டவர்களுக்கான) மின்சாரம் தடையின்றி பெறுவதுடன், பராமரிப்பு செலவு, டீசலால் ஏற்படும் கூடுதல் செலவும்,  இறக்குமதியால் ஏற்படும் அந்நிய செலாவணியும்  மிச்சப்படும். 

3) மேலும் டீசல் புகையினால் ஏற்படும் மாசு குறைந்து சுற்று சூழலும் சிறப்படையும். 

4) அந்த டவர்களுக்கான சுயதேவைக்கு போக அதிக மின்சாரமிருப்பின் மின்சார வாரியமே பெற்று மக்களுக்கு விநியோகிக்கலாம். மின்சாரத்தட்டுப்பாடும் குறையும்.

அரசும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இதை கருத்தில் கொண்டு சிறந்த திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதுடன், தங்கள் நிறுவனங்களையும் வளப்படுத்திக் கொள்ளுமா? 

Friday, December 13, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Thilagam Raja




திலகம் மிளிரட்டும்.
தீபம் விரைவில்  ஒளிரட்டும்.
இறைவனைப் பிரத்திப்போம்
இன்று மட்டுமல்ல.
எந்நாளும் எப்போதும்
நலமுடனும், மகிழ்வுடனும்
குதுக்கலமுடன் நீ வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

By,
Uncle.


Photo: திலகம் மிளிரட்டும்.
தீபம் விரைவில்  ஒளிரட்டும்.
இறைவனைப் பிரத்திப்போம் 
இன்று மட்டுமல்ல.
எந்நாளும் எப்போதும்
நலமுடனும், மகிழ்வுடனும் 
குதுக்கலமுடன் நீ வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

Uncle.

Tuesday, December 10, 2013

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Gift Jacob




Gift Jacob

சிலுசிலுக்கும் நினைவுகள்
சிந்தனையில் ஓட,
மங்காத மகிழ்வுகளால்
மனமோ திழைக்க,
வாழ்த்துக்கள் யாவும்
வந்துமை அணைக்க,
நாளும் பொழுதும்
நலமுடன் கழிய,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பனே.


Friday, December 6, 2013

இந்தியா முதலிடம் 2016ல் பேஸ்புக் உபயோகத்தில்

.




பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக இணையதளங்களைபயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்தியாவில் நடப்பு ஆண்டில் 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவில் முதலிடமாகும். இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவில் 28.7ம், மெக்சிகோவில் 21.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

நடப்பு வருடத்தில் 100 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1.61 கோடி புதிய கணக்குகள் துவக்கப்படுகின்றன. நடப்பு வேகத்தில் சென்றால் 2016ல் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா முதலிடம் பெரும்.

# இதில் எத்தனை கோடி போலியோ? கைவிடப்பட்டவை எத்தனையோ?

Thursday, December 5, 2013

அஞ்சலி செய்தி

 அஞ்சலி...





அனைவராலும் அன்புடன் தாத்தா என்றழைக்கப்படும் மிக வயது முதிந்த பெரியவர்,  சென்ற நவம்பர் 15ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் உயிர் பிரியும் வரை பொரி கடலை  விற்பனைக் கடையும், தனைத் தேடி வருகிறவர்களுக்கு ஜாதகமும் பார்த்து வந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பது போல, அவர் கிழே விழுந்ததால் உயிர் பிரிந்ததா? உயிர் பிரிந்ததால் கிழே விழுந்தாரா? உடனடி மரணம்.
நம்மால் அந்த வயதில் நகரக்கூட முடியுமா என்பது சந்தேகமே.  வருத்தமான சூழ்நிலையாக இருப்பினும், இந்த நேரத்தில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக பல இடங்களில் ஒரு ஜாதகம் கொடுத்து திருமண பொருத்தம் பார்த்தால், ரூ.100லிருந்து 500ம் அதற்கு மேலும்  வாங்குகின்ற இந்த நிலையில், 10 ஜாதகங்கள் கொண்டு சென்றால் கூட, பொறுமையாக பார்த்து சொல்வதுடன், நாம் கொடுப்பதை வங்கிக் கொள்வார். அதுவும் ரூ.50, ரூ100 மட்டுமே. ஒரு ஜாதகம் கூட பொருந்தாவிடின் ரூபாய் பெற்றுக் கொள்ள மறுப்பார். நாமே வற்புறுத்தி வலிய கொடுக்க வேண்டும். அவர் சொல்லும் காரணம், வித்தியாசமானதாய், எனது மகன் மகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போல் கருதிதான் பார்க்கிறேன்.  ஒரு ஜாதகம் கூட பொருந்தா நிலையில், கட்டணம் பெற்றுக் கொள்வது எனக்கு ஏற்புடையது அல்ல என்பார்.  அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த அப்பெரியவர், யாருக்கும் சிரமம் கொடுக்காமல் இயற்கை எய்தி, இறைவனடி சேர்ந்து விட்டார்.

நிச்சியமாக நம்புகிறோம், அவர் அத்மா இறைவனின் நிழலில் அமைதியாய் இளைப்பாறும். அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி... ஓம் சாந்தி....  

Wednesday, December 4, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வெள்ளித் தொழிற்பயிற்சி



இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியான சுந்தரராஜன் சேலத்தில் வெள்ளித்தொழில் செய்து வருகின்றார். இவர் மாற்றுத்திறனாளிகள், தன்னம்பிக்கையுடன் வாழும் பொருட்டு இலவசமாக, வெள்ளித்தொழில் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.

வெள்ளித்தொழில் முழுமையாய் கற்று தேர்ச்சி பெற, குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி தேவை. ஊக்கமுடையவர்கள் இன்னும் விரைவாகவும் கற்றுத் தேர்ச்சிப் பெறலாம். பயிற்சி காலத்தில் பணிக்கேற்றபடி கூலியும் கிடைக்கும். தகுதி நல்ல நிலையில் செயல்படக்கூடிய கைகளும்,கூர்மையான பார்வையும் உடைய மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பயிற்சி பெற இயலும்.

பயிற்சி பெற விரும்புபவர்கள், தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகளை அவர்களே செய்துக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்புக்கொண்டு பயன் பெறலாம்.

தொடர்புக்கு: 96299 72438

நெஞ்சத்தைத் தொடும் கதை.


திடீர்னு விபத்தில் இறந்து போனவரை என்ன பண்ணுவீங்க?
படிச்சுட்டுப் பிடிச்சா பகிருங்கள்.

மகன் : யாரம்மா அது நிக்கலஸ் கிரீன் ..?'

'உன் வயசில் இருந்த அமெரிக்க சிறுவன். விடுமுறைக்காக இத்தாலி போயிருந்த போது, திருடர்கள் அவனை சுட்டு விட்டார்கள்'.

' ஐய்யய்யோ...! அப்புறம் ..?'

' ஆஸ்பத்திரிக்கு போயும் பிரயோஜனம் இல்லை கண்ணு !. 'இனி அவனை காப்பாற்ற முடியாது' என்கிற நிலை வந்ததும், அவனுடைய தந்தை ஒரு முக்கிய முடிவெடுத்தார்.

'என்னம்மா அது..?'

' சொல்கிறேன்...! அடுத்த முறை நிக்கலஸின் குடும்பம் இத்தாலிக்கு போன போது , ஏழு பேருக்கு விருந்து கொடுத்தனர். விருந்து முடிந்ததும், அந்த நபர்கள் நிக்கலஸின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் சிந்தினர்.'

'அவர்கள் எல்லாம் யார் அம்மா..?'

'கண்ணே..! அவர்களில் ஆறு பேர், நிக்கலஸின் உடல் பாகங்களை பெற்று உயிர் பிழைத்தவர்கள் '.

கேட்டு கொண்டிருந்த ஆர்த்திக்கு நெஞ்சின் கனம் ஏறியது.

கம்மிய குரலில் கேட்டாள் .

'அந்த ஏழாவது ஆள் யாரம்மா..? '

பதில் உடனே வர வில்லை.

அம்மாவும் துக்கத்தை அடக்கி கொண்டிருந்தது போல் தோன்றியது.

' என் கண்ணே...! அந்த ஏழாவது மனிதனின் அழுது கொண்டிருந்த கண்கள் நிக்கலஸோடது ' திணறி கொண்டே சொன்னாள் அம்மா.

கேட்டு கொண்டிருந்த ஆர்த்தி உடைந்து போய் தேம்ப ஆரம்பித்தாள்.
---------------------------------------------------------------
இப்படியான கதைகள் நிறைந்த புத்தகத்தை சொந்தமாக எழுதி சொந்தச் செலவில் அச்சடித்து வெறும் 100 ரூபாய்க்கு விற்கிறார் திரு.Shanmuganathan Swaminathan சார். (நிஜமா லாப நோக்கோடு விற்றால் தாராளமாக ரூ200/-க்கு விற்கலாம்).

உங்கள் குழந்தையின் அறிவுத் திறனைக் கூட்ட இது போன்ற புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது நல்லது என்பது அடியேனின் கருத்து.

புத்தகம் வேண்டுபவர்கள் vsshan@rediffmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பதிவு செய்தவர் : ஆனந்தன் அமிர்தன்

பின் நோக்கும் நினைவுகள்


ஒரே ஒரு நிமிடம் மட்டும் பிளீஸ் ......
நண்பனுடன்
அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..


பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

(வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)
ஓடமும் ஒரு நாள் தரையில்... புரிந்திருக்குமென நம்புகிறேன்
Kali Muthu_ mylanchi

மறக்கவியலா மனிதர்கள், மறந்து போகும் தினம்.



எம்முடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை அன்றைய நாட்களில் மறந்து விடுவதைப்போல, இந்த நாளும் நினைவுக்கு வருவதில்லை.

ஆம், வேதனைகளிலும், சோதனைகளிலும் மிதந்து, அதையும் தாண்டி, சாதனை புரிந்துக் கொண்டிருக்கின்ற, புரிய துடித்துக் கொண்டிருக்கின்ற, கணக்கற்ற உடன்பிறவா மாற்றுத்திறனாள தோழர் தோழியருக்கான நாள், இன்றையநாள் "உலக மாற்றுத்திறனாளர் நாள்"

இன்றைய நாளில் உங்களில் ஒருவனான யாம் உரைக்கும் ஒரே செய்தி.

உயர்வு தாழ்வுகள் கருதாமல்,
ஜாதி மத வேறுபாடுகள் பார்க்காமல்,
ஒன்றுபட்டு செயல்படுவோம்,
உய
ர்வுகள் அடைந்திட உதவிடுவோம் என்ற உறுதிக் கொள்வோம். 

அன்புள்ளங்களே! 'உலக ஊனமுற்றோர் தினத்தில்' உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறோம்.