Translate

Monday, May 23, 2011

எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......

உன்னிலே உதித்த போதே

உறவுகளின் தொடக்கமம்மா.

மாதங்கள் பத்து சுமந்தாயே,

மரணத்தை நொடி பத்தில் அளித்தாயே.

பெண்ணாய் நீ இருக்கையிலே,

பெண்ணெனை காக்க மறந்தாயே.

உனை வளர்த்த உதிரத்தை

எனக்காக நீ கொடுத்தாய்.

உன் உதிரம் நானென மறந்து,

உதிர்த்துத்தான் விட்டாயே.

உனக்கிருக்கும் ஆசைத்தான்

எனக்கும் தான் இருக்காதோ.

காமத்திலே உமை இழந்தீர்.

காப்பதற்கு எமை மறந்தீர்.

அறியாமல் நாங்கள் உதித்ததிற்கு

அழித்தீரோ எமை, தண்டனையாய்.

{அளித்தீரோ எமக்கு தண்டனையை.}

பெற்றோர் உரிமையென நினைத்து

பெரும்பாவி ஆனீரே எமைக் கொன்று.

அப்பாவிகளாய் உம் கருவில் உதித்ததினால்

பெருந்தண்டனை அடைந்தோமே.

பாலோ வெளுத்திருக்க,

உம் மனமோ கருத்திருக்க,

பாலிலே நெல் கலந்து

பறித்தீரோ எம் உயிரை.

புண் தீர்க்கும் மருந்தாக

கள்ளிப்பாலிருக்க,

உயிர் போக்கும் மருந்தாக

கொடுத்தீரே எமக்குத்தான்.

நீச்சலறியா எம்மையும்

நீரிலே மூழ்கடித்தீர்.

மண் வாசனை அறியுமுன்னே

மண்ணிலே ஏன் புதைத்தீர்?

நாற்றமென எமை நினைத்தோ

குப்பையிலே வீசிச் சென்றீர்.

கொஞ்ச வேண்டிய எமை

கொடும்வெயிலில் போட்டு சென்றீர்.

மூச்சடங்கி போகவென

மூட்டைக்கட்டி போட்டு சென்றீர்.

மேடுபள்ள வாழ்வென என நினைத்து

தோண்டினீரோ பள்ளமதை நீர் எமக்கு.

முள்ளிலும் கல்லிலும் காயம் பட்டு

எறும்புகளும் பூச்சிகளும் எமை ருசிக்க,

உணவென எமை நினைத்தே

நாய்களும் கடித்துதற,

காத்துக் கொள்ள வழியின்றி

கதறித்தான் துடித்தோமே.

பசிப் போக்கும் பால் வேண்டி

குரல் கொடுத்தேன் அம்மாவென.

அம்போவென போட்டு சென்றீரே

எமை விட்டு வெகுதூரம்.

இறைவனிடம் பிறவி கேட்பேன்

இப்புவியிலே மீண்டும் பிறக்க.

வரமதை வேண்டி நிற்பேன்

உம் உயிரை எம் மடி சுமக்க.

கொஞ்சி நான் மகிழ்விப்பேன்

நான் இழந்த சுகத்தையெல்லாம்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சேர்த்துத்தான்,

உறவுகள் அனைவரையும் இணைத்துத்தான்,

சொல்ல விரும்புகிறேன் ஒன்றைத்தான்,

செவிக் கொடுத்துக் கேளுங்கள் இதையும் தான்,

கொல்லவென்றே சுமக்காதீர் எமையும் தான்.

உடல்பசி ஆறவென்றே நீர் இணைந்தீர்

உண்டான எமை அழிக்க ஏன் துணிந்தீர்?

இனிய பெற்றோராய் நீர் விளங்க,

உம் செல்லங்களாய் நாங்கள் வளர,

யோசிப்பீர் இணையுமுன்னே எமைத் தடுக்க.

தீட்டாதீர் திட்டங்களை எமை அழிக்க.

அழிக்கவே கருவுகளை சுமக்காதீர்,

இயற்கையின் நடப்பென்றே ஏற்பீரே.

விருப்பமின்றி உதிப்பதை தடுத்திடவே

முறையாக செயல்பட்டு தடுப்பீரே.

ஐய்யகோ.........

எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......

Tuesday, May 17, 2011

எப்படி... எப்படி?


எனக்கொரு ஓர் உலகம் தனியாய் சுழல,
பரிதியும் மதியும் தோன்றியே மறைய,
பூத்த மலர்களும் புன்னகைப் பூக்க,
சுகந்தம் எங்கும் சுகமாய் பரவ,
பனியும் மழையும் இதமாய் பொழிய,
நளினமாய் மக்கள் மகிழ்வாய் திகழ,
உயிரினம் அனைத்தும் பகையின்றி உலவ,
எதிலும் இனிமை, எங்கும் மகிழ்ச்சி,
கழிந்திடும் பொழிதில் கீரல் பட்ட ஒலியாய்.

எங்கோ ஓலம் மனத்தை பிசைய,
நினைவுகளில் விரிச்சல் உச்சத்தை அடைய,
நிதர்சன நிலையை உணர்ந்தது மனமே,
தாபமுடன் கோபமும் பேராசை, பொறாமை
வீம்பு, தர்க்கம், உணர்வுகளில் பொய்மை.
எங்கும் எதிலும் நிலையற்ற தன்மை.
பெற்றெடுத்தத் தாயை கூறுபோடும் மனிதனாய்
காக்கும் பூமியை சல்லடையாக்கினான்.

இவன் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைத்தான்.
இயற்கையின் பிடியில் இருப்பதை மறந்தான்.
இரும்பென்ன, கல்லென்ன இடியாதென நினைத்தால்,
இயற்கையின் முன்னே நில்லாது போகுமே.
உணர்ந்தவன் நடந்தால் உயர்வாய் வாழலாம்.
என்ன வழி அவனுக்கு எப்படி சொல்வேன்?
ஏகப்பட்ட இரவுகள் எண்ணங்களில் அலைய,
என் மனம் தொலைந்தது ஏங்கியே தவித்து.

Saturday, May 14, 2011

அன்பு தோழி சத்யபாமாவுக்கு நன்றி.

வான்வெளியில் நாடு கடந்து

கைப்பேசி ஒலி வழியே

ஆனந்தமாய் ஒலித்தது

வாழ்த்துக்களை கூறிடவே.

நட்பு என்ற நிலையாலே

நாடு கடந்த வாழ்த்திது.

ஆர்பரிக்கும் கடல் போல

ஆவலாலே அதிர்ந்தது.

மடைதிறந்த வெள்ளம் போல

மகிழ்ச்சியாய் பாய்ந்தது.

அருவியில் நனைவது போல்

ஆனந்தமாய் இருந்தது.

உணர்வுகளை வெளிக்காட்ட

வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.

உன்னத நட்பொன்றை

அறிந்துக் கொண்டேன்

உம் குரலின் ஒலியாலே.

நன்றி பகர வார்த்தையின்றி

மகிழ்வுகளைப் பகிர்ந்துக் கொண்டேன்

தோழி உமக்கு யான்.

-தவப்புதல்வன்.



  • கிழ்வுடன் கருத்திட்ட முகநூல் நண்பர்கள்:-
    • Vasanthakumar Graphicdesigner நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????
      May 10 at 1:25pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ‎@ Vasanthakumar Graphicdesigner:- ///நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????///
      1) என்ன நம்பர் எனக்கு கொடுத்திங்க? 2) " பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி நன்றி..." என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதையில் உங்கள் பெயருடன் புகைப்படமும் பதித்து, அதற்கு கீழ் உமக்கு வாழ்த்துடன்நன்றி தெரிவித்துள்ளேனே. அக்கவிதையை கவனிக்கவில்லை என நினைக்கிறேன். வாசித்து பதில் எழுதுங்கள். 3) நான் சாதாரணமானவன். உணர்வுகளின் உந்துதலால் எழுதுபவன். நேற்று எம் மகளின் பிறந்த நாளுக்கே எம் விருப்பப்படி கவி வழி வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. 4) சமயம் வாய்க்கும்போது தங்களுக்கும் வாழ்த்துபா இசைக்கமுடியுமென நம்புகிறேன். தனியாக முயற்சிப்பதில்லை. இனிய நாளாக கழியட்டும்.
      May 10 at 1:40pm · · 2 people
    • Vasanthakumar Graphicdesigner அண்ணா சும்மா கேட்டேன்..உங்கள் நட்பே போதும் அண்ணா..சத்தியபாமாவுக்கு உங்கள் நம்பரை கொடுத்ததே நான் தான் அண்ணா..
      May 10 at 1:41pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M அது எனக்கு தெரியும். சகோதரி நான் கேட்காமலே தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி.
      May 10 at 1:44pm · · 2 people
    • Sathiabama Sandaran Satia நட்பென்னும் முத்தெடுக்க கடல் தாண்டினால் என்ன மலை தாண்டினால் என்ன..உங்களை போன்ற கவிப்பெருங்கடலின் நட்பை பாராட்ட நான் பகர்ந்த வாழ்த்துக்கள் மிக சாதாரணமே..அதற்க்கு தாங்கள் எனக்கு வாழ்த்து பொழிந்திருக்கும் இந்த உன்னத கவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் கவிப்பெருன்கடலே...வாழ்க உன் கவி வளர்க நமது நட்பு....நன்றிகள் பத்ரி சார்.....
      May 10 at 1:46pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia அருவியில் நனைவது போல் ஆனந்தமாய் இருந்தது.
      உணர்வுகளை வெளிக்காட்ட வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.////// நித்தமும் உன்மது கவிக்கடலில் மூழ்கும் எங்களுக்கு தாங்கள் செய்திருக்கும் நன்றி பகர்தல் நன்றிக்கே இலக்கணமாய் அமைந்ததே நன்றிகள் சொல்லி கொண்டே இருந்தாலும் தீராது எண்கள்

தவிக்கும் உள்ளங்கள்.

தாங்கொன்னா மகிழ்வுடனே

அலையலையாய் ஒலியலைகள்,

மீண்டும் மீண்டும் அவரிடமே

தாங்கி வந்தது

வாழ்த்து சொல்ல.

தாராள மனமுடனே

தவப்புதல்வனென எமை அழைத்து

ஆனந்தத்தில் ஆழ்த்தினாரே.

ஆனாலும் ஒலியலைகள்

ஒற்றுமையில்லா நிலையாலே

செவிமடுக்க முடியவில்லை

செய்தியினை முழுமையாக.

ஏக்கத்தில் முடிந்ததையா

நண்பர் முகவரி ஏதுமின்றி.

அவரும் தான் தவித்திருப்பார்

தொடர்பிலே முழுமையின்றி..

தனிப்பட்ட செய்தி ஒன்று

எமை வந்து சேருமென்று.

விழி விரித்து காத்திருப்பேன்

விரைவில் செய்தி கிடைக்குமென்று.

நன்றிகளை பகர்கின்றேன்

அவரும் எம் நிலை உணர்ந்திடவே.

-தவப்புதல்வன்.


http://www.facebook.com/note.php?note_id=171460362912303
  • சொன்னார்கள் முகநூல் நண்பர்கள்:-.
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      தவப்புதல்வன் இருக்கிறாரா என அவரழைக்க. ஆமாம் பத்ரி நாராயணன் பேசுகிறேனென இயல்பாகக் கூற, ஆனால் அவரோ தவப்புதல்வனிடம் பேச வேண்டும் வாழ்த்து சொல்ல என திரும்ப திரும்ப அழைக்க ஒரு புறம் மகிழ்வாக இருப்பினும், அலைப்பேசியில் இணைப்பு சரியாக கிடைக்காமையால், மற்றொரு புறம் அவரின் ஆசையான, அன்பான வாழ்த்துக்களை முழுமையாகப் பெற்று, அவரையும் உணர்ந்து மகிழ்வை பகிர்ந்துக் கொள்ள முடியவில்லையே என ஏக்கம்தான். இதை வாசித்தால் அவரிடமிருந்து செய்திக்காக காத்திருக்கிறேன்.
      May 10 at 12:01pm · · 3 people
    • Gajan Gajah மிகவும் அருமை நண்பரே, அடியேனின் வாழ்த்துக்கள் பல கோடி..
      May 10 at 12:18pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Gajan Gajah:- நன்றி நட்பே. மதிய வணக்கம். இனிய நாட்களாக கழியட்டும்.
      May 10 at 12:35pm · · 2 people
    • ரவி சாரங்கன் தவப்புதல்வனுடன் பேச மா தவம் செய்திட வேண்டும் அந்த மாதவன் அனுக்ரஹத்தில் விரைவில் அவரும் தங்களிடம் பேசுவார். அடியேனும் பேசுவேன்.
      May 10 at 12:54pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ ரவி சாரங்கன்:- ///தவப்புதல்வனுடன் பேச மா தவம் செய்திட வேண்டும் அந்த மாதவன் அனுக்ரஹத்தில் விரைவில் அவரும் தங்களிடம் பேசுவார். அடியேனும் பேசுவேன்.///
      வணக்கம் ஐயா. யான் அந்த மாதவன் அனுக்ரஹத்திற்காக காத்திருக்கும் மிக மிக சதாரணன். தங்களின் ஆசிகளின் படியே அவரும் தொடர்புக் கொள்ளட்டும். தங்களை சந்திக்கவோ, குரலோசை செவிமடுக்கவோ வாய்ப்பிருப்பின் யான் தான் பாக்யவான். மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் வாழ்த்துக்கு.
      May 10 at 1:04pm · · 2 people
    • ரவி சாரங்கன் விரைவில் சந்திப்போம் பத்ரி நாராயணன் அவர்களே. நானும் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
      May 10 at 1:07pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ ரவி சாரங்கன்:- ///விரைவில் சந்திப்போம் பத்ரி நாராயணன் அவர்களே. நானும் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.///
      மிக்க மகிழ்ச்சி ஐயா.
      May 10 at 1:21pm · · 1 person
    • Oppilan Balu Muniyasamy வாழ்த்தியோருக்கு ..வாழ்த்துச் சொல்லும் உங்களின் பாங்கு ...வாழ்த்துவதர்க்குரியது ..வாழ்க வளமுடன் ..!
      May 10 at 8:47pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Oppilan Balu Muniyasamy:- ///வாழ்த்தியோருக்கு ..வாழ்த்துச் சொல்லும் உங்களின் பாங்கு ...வாழ்த்துவதர்க்குரியது ..வாழ்க வளமுடன் ..!///
      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. மனத்திலே உதித்தது. வார்த்தைகளாய் பதிந்தது. வாய்ப்பாய் அமைந்தது. முகநூலும் ஒரு வழியாய் அமைந்தது. அவ்வளவே நண்பரே. இனிய இரவு வணக்கம்.
      May 10 at 9:12pm ·


      விருப்பக்குறி இட்ட நண்பர்கள்:-