பணியிலே நீ மூழ்க
பனியிலே அமர்ந்து நான்,
உணர்த்தத்தான் தெரியாமல்
உறைந்து நான் போனேனடா.
உள்ளம் இறுகித்தான் போனதடா.
பணியென நீ மறக்க,
தனிமையில் நான் தவிக்க,
உணர்வுகளின் ஏக்கத்தை
உன் உள்ளம் புகுத்தத் தெரியாமல்
உரு குழைந்து தேய்ந்தேனடா.
உயிரென நீ உரைக்க,
உள்ளத்தை நான் இழந்து
உண்மை நிலை அறியாமல்
உரிமையென இணைந்தேனே
உணர்வுக்கு உயிரானவனே.
ஆக்கம்:- ✍️✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏