Translate

Showing posts with label இதொரு மழைக்காலக் கோலம். Show all posts
Showing posts with label இதொரு மழைக்காலக் கோலம். Show all posts

Tuesday, December 26, 2017

இதொரு மழைக்காலக் கோலம்



மங்கல நாளென்று
மாவினால் கோலமிட,
வண்ணத் துகள்களுடன்
வின்னகத்து தேவதைப்போல்
வாசலுக்கு வந்தவளின்
பாதந்தனை
முத்தமிட வந்தது,
தரையில் கால் வைக்க இடமின்றி
வாசல் வரை நீர் நிறைந்து.

தேர்ந்திருந்த கலையாலே
தெளிந்திருந்த நீரிலே
கலைந்திடா ஓவியமாய்
நீர்கோலம் இட்டாளே.

விசையாய் விரலசைந்து
விளையாட்டாய் வண்ணங்களில்
விந்தைகளை செய்யும் அவளழகில்
விரிகிறதே எம் விழியிரண்டும். 😯

கடைந்தெடுத்த சிற்பமாய்
காண்பவரை சுண்டியிழுத்தாள் 😍
கவருமந்த கோலமுடன்
கவருகின்ற கோலத்துடன்
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏