இதோ பாரு.... இங்கே பாரு......












விளையாட்டு விளையாட்டு.
எப்போதும் விளையாட்டு.
ஓய்வில்லாத உன் விளையாட்டு.
ஓயாது என் பாட்டு.
வித்தைகளை நீ காட்டு.
விளையாட்டாய் அதை நடந்து.
முளைத்ததோ முந்திரி
விரல் முட்டியில் முந்திக் கொண்டு.
கடற்கரை கிளிஞ்சல்
சங்கமம் ஆனது வித்தையில்.
பாலப்பருவ விளையாட்டை, -நீ
பருவம் அடைந்ததும் மறக்கலையே.
பிரம்பு அடியில் வீங்கும் முட்டி,
இன்று
வித்தைக் காட்டுது கண்ணைக் கட்டி.
சிரிக்க செய்யுது வயிறு குலுங்க.
✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
No comments:
Post a Comment