Translate

Showing posts with label ஆனந்த கண்ணீர். Show all posts
Showing posts with label ஆனந்த கண்ணீர். Show all posts

Friday, September 19, 2014

ஆனந்த கண்ணீர் - இன்றொரு தகவல்






இன்று சிறிது நேரம் முன்பு கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் நகர்ந்து வந்தேன். அப்பொழுது எனக்கும் எமது பேத்திக்கும் நடந்த உரையாடல்.

நான் நகர்ந்து வருவதை சுட்டிக் காட்டி 

பேத்தி: தாத்தா, ஏன் இப்படி வருகிறீர்கள்? 'நடந்து வாருங்கள் என்றார் 

நான்: என்னால் முடியாதம்மா.
 
பேத்தி, தன்  கைகளை நீட்டி பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்.

நான்: என்னால் எழுந்து  நடக்க முடியாதம்மா 

பேத்தி: ஏன் தாத்தா ?

நான்: என் கால்களுக்கு சக்தியில்லை. அதனால் தான் என்றேன். 

சிறிதும் தாமதமின்றி, தனது கால்களை எனை நோக்கி நீட்டி,  என் கால்களை எடுத்துக் கொள்ளுங்கள் என பேத்திக் கூறியதுடன் என்னைப் போலவே எனக்கு முன்னாள் அமர்ந்து பேத்தியும் நகர தொடங்கினார்.  அடுத்த கணம் இதயம் கரைய விழிகளில் நீர் துளித்து விட்டது, அந்த மூன்று (3) வயதே ஆன இளம் குருத்தின் செய்கைக் கண்டு.  

நான் : [மனம் பதற] அம்மா! உன்  கால்களுக்கு சக்தி இருக்கிறது. நடந்துதான் செல்ல வேண்டும். 
என கூறி எழுப்பி அனுப்பி வைத்து விட்டு, 

ஓ... இறைவா! கள்ளமில்லா பாசபிறவியான என் பேத்தி எந்த குறையுமில்லாமல் நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேன்.