Translate

Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Show all posts

Monday, April 9, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வாகனங்கள் வரிசையாக
வாசல் வரை நின்றிருக்க ( நிறைந்திருக்க)
வருவோரும் செல்வோரும்
விழியுயர்த்தி பார்த்து செல்ல,
வாழையடி வாழையது
வாழைக்குழைத் தள்ளி விட்டு,
வானோக்கி வளர்ந்து நிற்க,
வாழ்த்தி விட்டு செல்லவே,
வாசகரும், நேசகரும்,
வழி மேல் காத்திருக்க,
வணக்கத்தைத் தெரிவித்தபடி
வந்தாரே மகராசி
Kothai Subbiah கவியரசி.
இறையருளால்
நலனும் மகிழ்வும் நிலைத்திருக்க
பிறந்தநாள்
வாழ்த்துகளைத் தெரிவித்தேன்
வாழ்த்து குடும்பத்திலே ஒருவனாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளம்மா. 💐🎂🍰🎆🎇🎈🎉🎊🙏

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


பரப்பரவென ஆண்டுகளோ
பறக்கிறது நிற்காமல்.
படித்தந்த நாட்களும்
படிந்தந்த வாழ்க்கையும்
பார்வையின் நினைவுகளில்
படிந்திருக்கும் நிறைவாக.
பலமான உடல் தந்து
பரவச நிலை தந்து,
பகவான் உனக்கருள
பாசமுடன் வாழ்த்துகிறேன்
பசுமையாய் வாழ்விருக்கட்டுமென.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மகனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


வடிவமைக்கும் சிந்தனையெல்லாம் 
வழி கொடுக்கும் திண்மையுடனே.
வாழ்வனைத்தும் வெற்றியுடனே
வாழ வேண்டும் மகிழ்வுடனே.
வெற்றிக் கொடிகள் நாட்டியபடி
வென்று மகுடங்கள் சூடியபடி, எம்
வடிவில் உமைதன்னை
வாழ்த்திடுகிறாள் தமிழன்னை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

Friday, March 9, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


ஓடுகின்ற நாட்களில்
இரவும் பகலும் எத்தனையோ.
அத்தனையும் உனக்கு
ஆனந்தத்தை உடனிழைய.
அன்பும் பண்பும்
ஆற்றலுடன் உடன் நுழைய.
எந்நாளும் உமக்கு
சுகமாய் அமைந்திருக்க
வாழ்த்தினோம் உம்மை
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
170213
சுபஹர்

Monday, January 29, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

பட்டு நிலவாய்
படுசுட்டி குயிலாய்
பம்பரமாய் நீ சுற்றி,
பரவப்படுத்தும் வண்ணமாய்
பால்மனம் மாறமால்
பக்குவமாய் நடை பழகி
பரந்த இவ்வுலகில்
பார்ப்போரெல்லாம் உனை வாழ்த்த
பெருமை பொங்கும் விழிகளுடன் – உன்
பெற்றோருடன் நீயும் மகிழ்ந்திருக்க,
பெருங்கூட்டமான அப்பனின் நண்பர்கள்
பெரும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
நீ நலமுடன் சிறப்பெய்த.

செந்தீஸ்வரன் சிவன் பொன்னா(ண்ணா) விஜய தர்ஷினிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 💐🍰🎂🍡🍬🍫🍨

ஆசீர்வதிக்கும் 🙌🙌


தாத்தா.