Translate

Showing posts with label உறைபனி.. மணித்துளிகள்!. Show all posts
Showing posts with label உறைபனி.. மணித்துளிகள்!. Show all posts

Saturday, May 26, 2018

🌸"உறைபனி.. மணித்துளிகள்!" 🌸



உறைபனி துளிகளது
உறைய வைக்கும் நிலையது.
உணர்வுகளில் அச்சமின்றி,
உயிரோ துச்சமாக,
ஊடுறுவும் எத்தர்களுக்கு,
உலை வைக்கும் பணியது. 14

எண்ணில்லா நேரங்கள்,
எல்லையற்ற துன்பங்கள்,
எதிர்கொண்டு அத்தனையும்
எடுத்து வைப்பர் அடிகளதை. 23

எடுத்து வைக்கும் சில அடிகள்
எமனைத் தானாய் அழைத்து விடும்
எதிர்பார்க்கும் நெஞ்சங்களுக்கு
ஏக்கத்தையே வழங்கிவிடும் 35

எத்தனையோ சோகங்கள்
அதனில் புதைந்திருக்கும்.
கணக்கிடயியலாதே
அக்கதைகளை எதைக் கொண்டும். 43

அகண்டு விரிந்த நிலப்பரப்பில்,
அழகான பனிவனமது.
அழகான நீரோடைகள்
கண்ணுக்கினிய காட்சிகள்
ஆபத்தான படுகுழிகள்
அத்தனையும் விருந்தாகும்
ஆர்வமான சுற்றுலா பயணியருக்கு. 57
பாசமுடன் குடும்பமது
பனிக்குவியலை வாரியுருட்டி
பந்தாடி மகிழ்ந்திருப்பர்.
பறந்து வரும் பனித்துளியில்
பரவசத்தில் குதுகளிப்பர். 68

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.