Translate

Showing posts with label சும்மா சொன்னதில்லை... Show all posts
Showing posts with label சும்மா சொன்னதில்லை... Show all posts

Thursday, February 1, 2018

சும்மா சொன்னதில்லை..



கேளாத இடமென்று
கேட்டதினால் வந்ததின்று.
கதைத்ததந்த வம்புகளை
கதைக்காமல் கேட்டதது.
ஒட்டுக்காய் காது வைக்க
ஒட்டிக்கொண்டதோ காதுமதில்.
சொன்னதெல்லாம் உண்மையென்று
படமிட்டு உணர்த்தினாரோ?
ரகசியமுனு நினைத்ததெல்லாம்
அம்பலமானது எதனாலோ?
பஞ்சு மெத்தையில் நாமுருண்டு
காதோடு உரைத்தததெல்லாம்
களவாடிக் கொண்டதிந்த சுவர்தானோ?
பட்டறிந்த மக்களோ பகுந்துரைத்தார்,
சுவருக்குமுண்டு காதுகளென..
நானுமின்று உணர்ந்துக் கொண்டேன் – என்
நாவசைத்த நிலையாலே..

ஆக்கம்;- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏🙏