Translate

Showing posts with label குடியிருக்க.. Show all posts
Showing posts with label குடியிருக்க.. Show all posts

Wednesday, December 27, 2017

குடியிருக்க.

.

குடியிருக்க வழியின்றி

குடிசைக்கும் இடமின்றி
குடும்பம் ஒன்று
குழந்தைகளுடன் தவித்திருக்க.

குடிநீருக்கு பயனின்றி
குழாயொன்று ஒதுங்கி இருக்க,
குடியிருக்க ஆனதே
குப்பைக்கருகில் இருந்தாலும்.

சமையலை வான் பார்க்க
நாய் முகர்ந்து வாலையாட்ட,
பதம் பார்க்கும் விளையாட்டில்
பத்திரமாய் அதை காத்து

குழந்தைகளுக்கு உணவிட்டு
மூத்தவளோ பின்னிருக்க
ஆறா பசியுடன் அவள் வயிறு
அரைக்குறையாய் நிரம்பியிருக்க,
குழந்தையை தூளிலிட்டு
கூனிக்குறுகி அவள் கிடந்தாள்
குழந்தை வீரிட்டு அழும்போது
உடன் விழித்து தாலாட்ட..

குளிருக்கு மறைப்புமின்றி
குளிக்கவும் தடுப்புமின்றி
குடும்ப உறவுக்கு தனிமையின்றி
குடும்பமது வாழ்வையோட்ட,

சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு
சரியான உறக்கமின்றி
சந்தடிகளுக்கு இடையே
சங்கமமானது அவர் வாழ்க்கை.

கூனிக்குறுகி ஓட்டு கேட்பார்
குடிசை மாற்றி வீடுயென்பார்
குனிந்து ஓட்டு கேட்டவரோ
குடியேறினார் மாளிகையில்

குத்தி ஓட்டு போட்டவரோ
குடிசைக்கும் வழியின்றி வாழ்கிறார்
குழாய் வாழ்வு நிரந்தரமாக.
குழாயடி நிசமாக.

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

27\12\2017