கழிவினை அகற்றிட உதவி வேண்டும்.
இந்நிலையில் பணியாற்ற,
மனிதரின்றி யாருமில்லை
உணர வேண்டும். 10
அர்த்தமில்லா கழிவிறக்கம் தவிர்க்க வேண்டும்.
அவர் நலம் காக்க உபகரணங்கள்
அளிக்க வேண்டும். 20
மனித உயிரை மதித்திட,
அரசுகளுக்கு உணர்த்த வேண்டும்.
புத்தாக்கக் கருவிகளை பயன்படுத்த
முனைய வேண்டும். 31
அமைப்புகளை சீராக்கி
பணிகளைக் குறைக்க வேண்டும்.
இப்பணியினை யாரெனும் செய்துதானே ஆகவேண்டும். 40
நம்மால் முடியுமாவென நினைக்க வேண்டும்.
அறிவார்ந்த
புது வடிவ ஆக்கங்களுக்கு
ஆராய்ச்சிகள் வேண்டும். 50
கழிவுகளைக் குறைத்திடல் வேண்டும்
உழைப்புக்கு ஏதுவாய்
பணி பலன்கள் வழங்க வேண்டும்
முடிவாக உழைப்பவருக்கு
மரியாதை வழங்க வேண்டும். 64
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.