இளமையில் கல்வி - உமது
வாக்கு அம்மா, வேதவாக்கு அம்மா.
இளகிய மண்ணில் - ஏர் உழவு
இலகவாகும், மிக இலகவாகும்.
இளம் வயதில் - பாடமது
பதிவாகும், ஆழப்பதிவாகும்.
பள்ளி வாழ்விலே - கற்பதில்
வேகம் வேண்டும், மிக வேகம் வேண்டும்.
படிப்பிலும் கலைகளிலும் இருக்க வேண்டும் - அது
அனுபவ ஞானத்தை வளர்க்க வேண்டும்.
சிந்தித்து விடைதனை அறிய வேண்டும் - அதில்
புவிநிலை கெடாமல் இருக்க வேண்டும்.
கொள்ளும் பணிதனில் முழு சிரத்தை வேண்டும்
மனத்தைப் பண்படுத்தும் குருவினை மதிக்க வேண்டும்.
நட்ட விதை செழித்திட உழைக்க வேண்டும்
பண்டிதனென பெயரெடுக்க முயல வேண்டும்.
ஆக்கம் தரும் செயலுக்கு ஊக்கம் கொள்ள வேண்டும்.
அது மனித இனம் பயனடைய உதவ வேண்டும்.
நிலையின்றி போனாலும் பெயர் நிலைத்திருக்க வேண்டும்
உம் செயல்கள் அத்தனையும் நலம் பயக்க வேண்டும்.