Translate

Sunday, December 30, 2012

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2013

மாந்தர்களாய் பிறந்தீரே இப்பூவுலகில்,
ஆட்டுமந்தைகளாய் நடவாதீர் வாழ்நாளில்.

வேதங்களும் பாடங்களாய் வழி நடத்தும்,
கண் மூடி வழிப்பாதை மாறாதீர்.

குடும்பம் மட்டும் காப்பது கடமையில்லை,
வாழும் உலகைக் காப்பதும் கடமையல்லவா?

எத்தனையோ சொல்லி சென்றார் மேதைகளும்,
வழிப் பற்றி நலமோடு வாழ்ந்திடவே.

சிந்தனையில் அழிவுக்கு வழியின்றி,
சிறப்பான வாழ்வுக்கு வழிக் கண்டு,
வாழ்ந்திட வேண்டும் மகிழ்வாக.
வாழியே மக்களே! வாழியே இனிதாக!!

இனிய 2013ம் வருட ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

போதைப்பிரியர்களே, உங்களுக்காக....


புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், குழுக்களாய் சேர்ந்துக் கொண்டு வீதிகளிலும், சாலைகளிலும், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களிலும் மது அருந்தி விட்டு, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சிறிதும் மனத்தில் கொள்ளாமல், மது பாட்டில்களை, பாதைகளில் சூறை விடுவது போல உடைத்து கண்ணாடி சிதறல் சிதறுவதைக் கண்டு கும்மாளமிட்டு குதிப்பதுடன், வயது வித்தியாசம் பார்க்காமல் ஆண்களுடன் பெண்களையும் கேலி செய்து வம்புக்கு இழுப்பதும் சரியான செயலா?
கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது அல்லவா. மற்றவர்களுக்கு இடஞ்சல் இல்லாத வகையில், உங்கள் கொண்டாட்டம் அமைந்தால், அவர்களும் உங்களுடன் பங்கு பெறலாம். இல்லாவிடின் மகிழ்வுடனாவது செல்வார்கள். சிரம்ம் கொடுப்பதாக அமையுமானால் தூற்றுவதுடன் சாபங்களையும் பெறுவீர்கள். புத்தாண்டு துவக்கத்திலேயே இந்த நிலை உங்களுக்கு தேவையா?

கண்ணாடி சிதறல்களால் காயம் படுபவர் நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவரானால் உயிரிழக்கவும் நேரிடலாம், வாகனங்கள் எதுவாகினும் கண்ணாடி சிதறல்களால் விபத்திற்குள்ளாகும் போது குடும்பங்களே பாதிக்க கூடிய னிலை ஏற்பட்டு விடலாம்.

போதையால் இப்படி நடந்து விட்டது என கூறுபவர்களுக்கு, மனத்தில் படும்படியாகவே ஒன்றைக் கேட்கிறேன். உங்களைப் போலவே ஒரு குழுவோ, தனி நபரோ கொண்டாட்டம் என்ற நினைவில் உங்கள் மனைவியையோ, குழந்தையையோ, சகோதரியையோ, பெற்றெடுத்த தாயையோ கற்பழிப்பு, மானபங்கம், கொலை, வழிபறி, கொள்ளை, ஏதேனும் ஒன்றை செய்து விட்டு போதையில் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் விட்டு விடுவீர்களா?

சிந்தியுங்கள் போதையில் இல்லாதபோதே, போதைக்கு ஆட்படாத போதே.. 
வீட்டில் கொண்டாடுங்கள் உங்கள் குடும்பத்துடனும், நட்புகளுடனும்.
போதையில்லா புத்தாண்டு துவக்கமாய் அமையட்டும்.
சாபமற்று வாழ்த்துக்களாய் அமையட்டும்.
உங்கள் அனவருக்கும் இனிய 2013ம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதை வாசிக்கின்ற அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் முகனூலில் மறுபதிவிட்டு அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

காவல் துறையினருக்கு:- புத்தாண்டு தினம் என்று சலுகை வழங்காமல், திடமாய் செயல்பட்டு அனைவரும் மகிழ்வடைய உதவுங்கள். மது அருந்துவது அவர்களுக்கு மகிழ்வு என்று பணியில் சுணக்கம் காட்டாதீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பம், உறவு மற்றும் நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய 2013ம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
தவப்புதல்வன்.

அறிவிற்கோ எல்லையில்லை.

அறிவிற்கோ எல்லையில்லை. சிறுக்கதை

தென்னாலி ராமன், பீர்பால் போன்று அகடவிகடத்தில் சிறந்த அறிவாளி ஒருவன், ஒரு வெளிநாட்டில் இருந்தான். அந்த நாட்டில் அறிவாளிகளைத் தெரிந்துக் கொள்ள தலைப்பாகை அணிந்து  கொள்வார்கள். அதுவும் அறிவுக்கு ஏற்றபடி தலைப்பாகையின் அளவும் மாறுபடும். அதை வைத்தே அவர்களின் அறிவுத்திறமையை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த அகடவிகடனும் பெரிய தலைப்பாகை அணிந்திருந்தான். படிப்பறிவு இல்லாத ஒருவன், ஒருகடிதத்தை  அகடவிகடனிடம் கொடுத்து படித்து சொல்லச் சொன்னான்.  வாங்கி பார்த்த அகடவிகடன், எவ்வளவோ முயன்றும் அதில் எழுதியிருப்பது என்னவென்றே புரிந்துக் கொள்ளமுடியவில்லை. இதில் எழுதியிருப்பதை என்னால் படிக்க முடியவில்லை என்று திருப்பிக் கொடுத்தான்.

அதற்கு அவனோ, இவ்வளவு பெரிய தலைப்பாகை அணிந்திருக்கிறாயே, இது கூட படிக்க முடியவில்லையா என கேலியாக கேட்டு நகைத்தான்.  அகடவிகடனுக்கு மகா கோபம். உடனே, அவன் தலையிலிருந்த தலைப்பாகையை இவன் தலையில் வைத்து, இப்பொழுது உன் தலையில் தான் பெரிய தலைப்பாகை உள்ளது. எனவே நீயே படித்துக் கொள் என கூறியவாறே அங்கிருந்து சென்றுவிட்டான்.

என்ன படித்து விட்டீர்களா? சொல்லுங்கள் உங்கள் கருத்தை.

Saturday, December 29, 2012

சீடனாக ஆசை.

கவிதைகளாய் வாசித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு சிறுக்கதை.

சீடனாக ஆசை.

ஒரு ஊருக்கு அருகில் உள்ள காட்டில் யோகி ஒருவர் தியானம் செய்து வந்தார். அவரின் புகழ் விரிந்திருந்தது. சிஷ்யனாக  அவரிடம் சேர ஆசைக் கொண்டு, குருவே, நான் அனைத்தையும் துறந்து விட்டேன். ஆகவே என்னை தங்களின் சிஷ்யனாக ஏற்று தீட்சை அளிக்க வேண்டும் என கேட்டான்.

அதற்கு, நீ முழுமையான தகுதி அடையவில்லை. மேலும் தகுதியை வளர்த்துக்கொள் என அனுப்பி விட்டார். ஒரு வருடத்திற்கு  பிறகு மீண்டும் வந்த போதும், அதே பதிலை சொல்லி அனுப்பி விட்டார்.  மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு வந்த போதும், அதையே சொன்னார். அவனுக்கோ பயங்கர கோபம், இருப்பினும் அதை மறைத்துக் கொண்டு,  சிஷ்யனாக என்னை ஏற்றுக் கொள்ளாத வரை இங்கிருந்து நகரமாட்டேன் என சொல்லி, அவர் முனமர்ந்து விட்டான்.  ஆசை, கோபம், பிடிவாதமுடன் திகழும் இவனை காண்கையில், மேலும் ஒன்றைக் கூறினார்.  அப்பா, வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நீயோ, குடும்பஸ்தனாக திகழ்வதற்கு ஏற்புடையவனாகவே திகழ்கிறாய்.  எம்மிடம் சிஷ்யனாக சேர்வதற்கு உனக்கு தகுதி இருக்கிறதா என உன்னை நீயே பரீட்சித்து (சோதித்து / சோதனை) பார்த்துக்கொள்ள, தேர்வு வைக்கிறேன். அதில் நீ வெற்றி பெறுவதைப் பொறுத்து சிஷ்யனாக சேர்த்துக் கொள்வதைப்  பார்க்கலாம் என சொல்லி,

1) உன் தாயைக் கொலை செய்யவேண்டும்.
2) உன் சகோதரியை மானபங்கபடுத்த வேண்டும்.
3) மது அருந்த வேண்டும்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்து விட்டு வந்து சொல் உன் தகுதியைப்பற்றி எனசொல்லியானுப்பினார்.

சகோதரியை மானபங்கபடுத்து மகாபாவம், தாயைக் கொலை செய்வதோ மகா மகாபாவம், மது அருந்துவது  மட்டுமே யாருக்கும் கெடுதல் இல்லாதது, அதனால் பாவமும் நாம் அடையமாட்டோம் என அவன் நீண்டநேர யோசைனைக்கு பிறகு முடிவு செய்து,  ஒரு மதுக்கடைக்கு சென்று, அந்த யோகியிடம் சிஷ்யனாக சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் மது அருந்த தொடங்கினான்.

போதையோ தலைக்கேற தள்ளாடியவாறு வீடு திரும்பினான்.  அப்போது அவன் சகோதரி குளித்து விட்டு, உடை மாற்ற ஈர உடையுடன் வீட்டுக்குள் சென்றாள். ஈர உடையுடன் சகோதரியைக் கண்டதும், போதையுடன் காமமும் சேர்ந்துக் கொள்ள  சகோதரி என்பதையும் மறந்து, அவள் உடையை இழுத்து மானபங்கம் செய்ய முயன்றான். அவள் கதறி கூச்சலிட,  ஓடி வந்து பார்த்த தாய், அடே பாதகா! என திட்டியபடி, அவனை அறைந்தாள். தடுக்கிறார்களே என்ற கோபத்துடன், அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாயென கருதாமல் தலையை வெட்டிக் கொலை செய்தான்.

தாயின் தலை கீழே உருள, சகோதரி அம்மா என்று ஓலமிட, அப்போதுதான் தெளிந்தது அவன் போதை. ஐயோ! தாயைக் கொலை செய்து விட்டோமே. இத்தனைக்கும் காரணம் அந்த யோகி தான் , அவரையும்  கொலை செய்ய வேண்டும் என்று வேகமாக அவர் குடிலுக்கு சென்றான்.  என்னப்பா இரத்தம் சொட்டும் கத்தியுடன் வந்திருக்கிறாய் என்ன விஷயமென கேட்டார்? உங்களை கொலை செய்ய வந்திருக்கிறேன் என்றான். எதற்கென அவரோ அமைதியாக கேட்க,

குருவே, உங்களால் என் தாயையே கொலை செய்து விட்டேன். நீங்கள் வைத்த சோதனைத் தேர்வே  காரணம் என சொல்லி, நடந்ததை முழுமையாக கூறினான். என்னப்பா, உன் தாய் என்கின்றாய், உன் சகோதரி என்கின்றாய், உன்னை நீ நான் என்கின்றாய். அத்தனையும் உன்னிடம் இன்னும் இருக்கும் போது, அனைத்தையும் துறந்து விட்டேன்,  சிஷ்யனாக ஏற்று தீட்சை அளிக்க கேட்டாயே எப்படியப்பா?

அன்று சொன்னது தான் இன்றும் உனக்கு. நீ குடும்ப வாழ்க்கைக்குதான் சரியானவன் என யோகி கூறியதும், ஐயோ, எனது பாவங்கள் போக என்ன வழி என்றான் கதறியபடி. உனது தாய் வயது, மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களுக்கு தாயாய் நினைத்து பணிவிடை செய். உன் சகோதரி வயதுடைய பெண்களுக்கு,  சகோதரனாய் முன்னின்று  தேவையான உதவிகளை செய். உழைப்பை மறந்து, உழைத்தாலும் குடும்பத்தை மறந்து, பொறுப்புக்கள் அற்று போதையிலும், மோகத்திலும்  உழல்பவர்களுக்கு பொறுப்புகளை உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்து. இதுவே உன் பாவங்களுக்கான பிராயசித்தமாகும் என அருளினார்.

என்ன வாசித்தீர்களா? யோகி கூறியது போல பொறுப்புகள் உணர்ந்து பாவங்களை செய்யாமலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உதவுவீர்களா? 

Friday, December 28, 2012

கனியின்றி கல்லாக!

கனியின்றி கல்லாக!




குறி வைத்து அடித்த அடி
தவறி அது போனதடா.

இயக்கி வைத்த உம் செயலோ,
இடைவெளி மாறுபட,


கனியின்றி கல்லாக
மீண்டுமது திரும்பியதே.

கிளையில் பட்ட கல்லதுவோ,
திரும்பியதை நோக்காமல்,

உம் பார்வை கனியிலிருக்க
தலையை பதம் பார்த்ததடா...


விசைக் கொண்டு செலுத்தாமல்
தன்னிச்சையாய் இயங்காது.




கால்லை ஏன் சபித்தாயோ
உன் தவறை உணராமல்.

Monday, December 24, 2012

தலையை நுழைத்து உயிரை விட்ட பல்லி.

தலையை நுழைத்து உயிரை விட்ட பல்லி.

நேஷனல் ஜியாக்ரஃபி சேனல் ( national geographic channel ), டிஸ்கவரி சேனலில் ( discovery channel )பார்த்தது போல், இன்று காலை ஒரு கட்சியை பார்க்க நேர்ந்தது. ஒரு பூச்சியை பல்லி துரத்த, பூச்சியோ கதவிலிருந்த ஒரு ஓட்டையில் புகுந்துக் கொள்ள, பூச்சியை பிடித்து விடும் நோக்கிலே, தலையை உள்ளே நுழைத்தது. சிறிது நேரம் கழித்தும் தலையை வெளியே எடுக்காததால், குச்சியால் பல்லியை தள்ளிப் பார்த்தோம். அப்போதுதான் தெரிந்தது தலையை வெளியே எடுக்க இயலாமல் சிறுநீரையும் கழித்தபடி உயிரை விட்டு விட்டது என்று. பூச்சியின் நிலையும் தெரியவில்லை.
 



http://www.facebook.com/photo.php?fbid=512878555418458&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater

ஒரு அருமையான பதிவு


எப்படி சொல்ல. இது ஒரு அருமையான பதிவு
முகநூலில் எனது நட்பு வளையத்தில் சமீபத்தில் இணைந்த இனிய நண்பர் ஐ யாம் பாலு அவர்களின் பதிவுகளில் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகின்றேன். தங்கலீஷில் எழுதுவதற்கு இது எவ்வளவோ மேலல்லவா? அன்புடன் கே எம் தர்மா..
Iam Balu : August 8
நீங்கள் தமிழ்லே புலியா !
எங்கே இத படிங்க பார்ப்போம் !

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம். 100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எப
ன்...து மு
கிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்



Thanks to: http://www.facebook.com/andkeyem

Monday, December 17, 2012

சிறகடிக்கும் எண்ணங்கள்.

சிறகடிக்கும் எண்ணங்கள்.


சுற்றமும் நட்பும்
தனிமையைக் கொடுக்க,
அருகிலே நீ
மனத்திலே இருவர்
முவ்வருடன் நான்
சங்கமம் ஆனேன்.




















மனத்திலே மகிழ்ச்சி
அருவியாய் கொட்ட
அணைத்துக் கொண்டேன்
உச்சியை முகர.

உணர்வுகளின் தூண்டல்
உள்மனத்தைத் தீண்ட ,
அமுதமாய் உனக்கு
ஆனந்தமாய் தந்தேன்.

அவனின் அருளால்
அவரைப் பிடித்தேன்.
நீண்ட நாள் கழித்தே
நீ எனக்கு கிடைத்தாய்.

பட்ட காயங்களோ
நெஞ்சிலே இருக்க,
பாவப்பட்ட பிறவியென
எனையே நொந்தேன்.

ஆண்டவனின் பாதம்
சரணம் அடைந்தேன் - உன்
தந்தை, அவருடன்
சங்கமமானேன்.

புத்தம்புது மலராய்
எம் மடியினில் உதித்தாய்
மலடியெனும் பெயரை
மடியச் செய்தாய்.



உதிரம் கொடுத்து
உனை நான் பெற்றேன்.
என் மகன் இவனென
பெருமையை அடைய
பெற்றவள் இவளென
சுட்டும் படியாய்,
ஓயாமல் நானும்
சிறப்பாய் வளர்ப்பேன்.


Monday, December 10, 2012

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gift Jacob




வானத்திலே சிறகடிக்க வழியின்றி போனாலும்,
ஆண்டவரின் அருள்கொடையால்,
திண்மையான எண்ணத்திலே அறிவுசுடர் ஒளி வீச,
ஆற்றலினால், அரும்பெரும் சாதனைகள்
செய்து நீயும், உயிர் கொடுக்க 
வாழ்த்தினோம் உம்மை 
உம் இனிய இப்பிறந்த நன்னாளிலே,
நலமுடனும் மகிழ்வுடனும் இனிதாய் வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பனே.




## மாற்றுத்திறனாளியாய் ஆண்டவரினால் படைக்கப் பட்டிருப்பினும், அறிவுகூர்மையால் கணினியை திறம்பட இயக்கும் ஆற்றல் பெற்ற நண்பர் கிஃப்ட் ஜாகோப் (Gift Jacob)
ஆண்டவரால் வாழ்த்திக் (கிஃப்டாக ) கொடுக்கப்பட்டவரை, மென்மேலும் புகழ்பெற்று சிறப்பாய் வாழ வாழ்த்துவோம் நண்பர்களே

Sunday, December 9, 2012

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கடந்து வந்த பாதையெல்லாம் 
எண்ணிப் பார்க்கத் தோனுதையா.

பண்ணிசைத்த நிகழ்வுகளோ, - பல 
நெஞ்சில் இன்னும் இருக்குதையா.

கொஞ்சி குலாவிய காலம் முழுதையும்
அசைப் போட்டு பார்க்குதையா.

இனி கடக்கப் போகும் பாதையையும்
நினைத்துப் பார்க்க தோனுதையா.

கழிய போகும் நாட்களெல்லாம்
நலமாய் உமக்கு கழிந்திடவே,

இறைவனையே துதித்திட்டோம்
இன்பமுடன் நீர் வாழ.

வாழிய பல்லாண்டு நலமுடனே என
வாழ்த்தினோம் நண்பரே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இயற்கையை காத்திடுவீர். இன்பமாய் வாழ்ந்திடுவீர்.


இயற்கையை காத்திடுவீர். இன்பமாய் வாழ்ந்திடுவீர்.


தவமிருந்த காலமெல்லாம்
கனவாய் நெஞ்சில் நிற்குதையா.

தண்ணீரைத் தேடி - என்
கண்களெல்லாம் பூத்ததையா.

மரத்தின் உச்சியிலே
அமர்ந்து நான் பார்கின்றேன்,

எட்டிய தூரமெல்லாம் நீரில்லா
நிலைகளையே காண்கின்றேன்.

மீன் தின்ற காலமெல்லாம்
மீண்டும் என்று வந்திடுமோ!

பசி தீர்க்க, தேடி நான்
புழு தின்று வாழுகிறேன்.

குளம் குட்டை அத்தனையும்
கட்டடங்களாய் மாறி விட்டால்,

குழிநீரில் மீனின்றி - எம்மினமே
குழுக்குழுவாய் அழிந்திடுமே.

குழுவாய் இருந்த குடும்பம் அழிந்து
தனியாய் வேதனையில் வாடுகிறேன்.

பறவை இனம் வாழ்ந்திடவே
உம் மனத்தை நீர் திறந்து வைப்பீரே.

காற்றாய் நாங்கள் உள்நுழைந்து - உமை
கவலையின்றி வாழ வைப்போம்.
 .