
விடுதலைப் பெற்ற
நினைவிலா?
விடுப் பட்ட
உணர்விலா?
சஞ்சலங்கள் நிறைந்த
மனத்திலா?
சாதனை புரிந்த
மகிழ்விலா?
விரைந்து செல்கிறதா?
காலம்
விக்கித்து நிற்கிறதா?
நேரம்
ஆழ்கடலாய் இருக்கிறதா?
மனம்
புயற்காற்றாய் வீசுகிறதா?
எண்ணம்
பார்த்து பரிகசிப்பாயா
என் எண்ணங்களை
பரவசத்தில் படரவிடுவாயா
உன் கண்களை
கேட்க உள்ளனரா
உன்னிடம்
சொல்ல நினைப்பாயா
என்னிடம்
எண்ணங்கள்
வெவ்வேறாய் இருந்தாலும்,
தாக்கங்கள்
ஒன்றாய் இருப்பதாலே.
உன் நினைவுடனே
நானிருக்க!
என் நினைவின்றி
இருப்பாயோ நீ?
எப்போதும் ஒரு நினைவாய்
ஒருபோதும் மறையாமல்,
நினைவுகளை அலைக்கழிக்கும்.
இந்நிலையே இருவருக்கும்
போதுவாய் இருக்குமன்றோ.
தாயை இழந்தேன்.
தாயென நினைக்கும்சோதரியேஉமையும் இழப்பேனோ.
நலம் பெற்று வருவீரோஎமைக் காண அன்றி வரட்டுமாஉமைக் காண.உங்கள் பதிலுக்காகதனியானாய்தவிக்கின்றேன்,தனையனாயிருந்து.05\ 06 \2006 ல் எமது H.V.சகோதரிக்காக எழுதியது.