Translate

Showing posts with label நின் செயல் கண்டு. Show all posts
Showing posts with label நின் செயல் கண்டு. Show all posts

Sunday, March 15, 2015

நின் செயல் கண்டு

கைகளை நீட்டினாய் 
''கா'' வென காட்டினாய்.
விரித்தோமே கடையை 
கொழுவிருந்த பொம்மைகளை.
''கா''வென்று சொன்னபடி 
தள்ளினாயே அத்தனையும் .
புரியாமல் ஏறிட்டோம் மீண்டுமுனை. 
இருக்குமோ இதுவென கொடுத்தோமே
இறையுரு படந்தனை.
கண்களோ மின்ன 
மகிழ்வோ பொங்க 
கரத்தினை நீட்டினாய் 
படத்தினைப் பெற்றாய்.
ஆரத்தழுவினாய் 
நெஞ்சோடு அணைத்து.

அறியாத வயதில் 
புரியாத மொழியில் 
கடவுளைத் தொட்டு 
கரங்களைக் குவித்தாய்.
அறிந்த நாங்களோ 
அதிர்ந்து போனோம்.
ஆனந்தத்தில் மனமோ 
ஆழ்ந்து போனோம்.
அறியாமலே விழிகளில் 
துளிர்த்தது  விழிநீர்.
 பேத்தியே..
நின் செயல் கண்டு.