Translate

Saturday, June 14, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shahul Hameed Safeer



Shahul Hameed Safeer

அன்பு கூடிய நட்பும்,
பாசம் நிறைந்த உறவும்,
வாழ்த்தும் வாழ்த்துக்கள்,
சுவைக் கூடிய இனிமையாய்
மகிழ்வு நிறைந்த வாழ்வாய்
என்றுமே திகழ
இன்றுமை வாழ்த்தினோம்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே.

Friday, June 13, 2014

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Munuswami Muthuraman







Munuswami Muthuraman - Jun 10 2014

நெஞ்சிலே நிறைத்திருப்போம் 
நீங்காமல் வைத்திருப்போம்.
பிளாட்டினம் விழா முடிந்து 
வைத்த அடி வலுவாக
காண வேண்டும் நலமுடனே
வைரப்பெருவிழாவை மகிழ்வாக.
பிரார்த்தித்து வாழ்த்தினோம் 
மகிழ்வான இந்நாளில்.

தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.

Thursday, June 12, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - athiabama Sandaran Satia





athiabama Sandaran Satia


எழுத்திலிட முடியுமா
கவிக்குயிலின் அன்பினதை.
வாழ்த்துக்கள் குவிந்துவிட
வானோக்கி உயர்ந்து செல்ல,
சிகரமென நினைத்துக் கொண்டு,
கருமேகம் தவழ்ந்தம்மா.
இனிக்குமந்த குயிலோசைக்கு
புகழ்மிகு நன்னாளாய் விளங்குதம்மா.
இனிய இனிய தேனாய் இனிக்க
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம் கவிக்குயிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

Monday, June 9, 2014

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்



தோழ்ர் கார்ல் மார்க்ஸ் With மகாலட்சுமி


தோழர் தோழியை தோளோடு சேர்த்தணைத்து,
உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றென கலந்து
நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.



இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

Sunday, June 8, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 2 - அன்னைக்கு சமர்ப்பணம்.




எமது தாயார் எமக்கு கூறிய வார்த்தைகளில் ஒன்று:-
  
   அறிந்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுவதை விட, நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றி பேசுவதும், பாராட்டுவதுமே பெருமை மிக்கதும், நாம் பிறப்பெடுத்ததற்கு ஒரு அடையாளமுமாகும் என்பார். அவ்வகையில் யான் உலக சாதனை கவியரங்கத்தில் கலந்துக் கொண்டு, கவி வாசிக்க கிடைத்த இந்த பேற்றை அவர் நினைவுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.



இவன் தான் கவிஞன்

ஆற்றலையும் ஆற்றாதுழல்வதையும்


அழகாக வெளிப்படுத்த,

இன்பங்களையும் துன்பங்களையும்

தனியாளாய் துடைக்க செய்து,

உள்ளிலிருக்கும் திறமையை

ஊக்குவித்து செயல்படுத்த,

கருத்தாழம் கொண்டு, அவன்

கவிதைகளாய் படைத்திடுவான்.


வண்ணங்களை கலந்தே, அவர்

கண் பறிக்கும் ஓவியமாய்

காட்டிடும் ஓவியரைப்போல் ,

வாயசைக்கும் வார்த்தைகளை

மனம் இலயக்கும் கவிதைகளாய்

வரிசைப்படுத்தும் கவிஞனிவன்.



சிற்பியவன் செதுக்கி வைப்பான்,

சிற்றுளி கைக்கொண்டே.

கவியிவன் பாட்டிசைப்பான்

மொழியினைத் துணைக்கொண்டே.


வீணையின் தந்திகளோ

ஒலியெழுப்ப இசையாகும்.

இக்கவியின் வார்த்தைகளோ

கவியாகி உமையிழுக்கும்.


பேசுகின்ற மொழிகளுக்கு அழகு செய்வான்.

மொழியின் பொருளுக்கோ வளம் சேர்ப்பான்.


செல்லுமிடமெல்லாம் நல்ல -

கவிதைகளை இறைத்திடுவான்,

மொழியறிந்த மாந்தரெல்லாம்,

சுவையறிய செய்திடுவான்.


கற்பனை கனவுகளில் தவழுகின்ற
எம் கவிஞர் திருகூட்டம்,
நிசமான நிகழ்வுகளில் நீந்துகின்ற
கூட்டமுமாகுமிது.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். - Kanthavel Arulnithy




Kanthavel Arulnithy

ஒன்றோடு ஒன்றென பிணைந்து...
மாற்றங்கள் மனத்திலிருந்து களைந்து..
குடும்ப வாழ்விலே சுவைக்கூட்டி,
இது ஒன்றாய், அது ஒன்றாய்
இரண்டினை ஈன்றெடுத்து,
நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்தினோம்,
இணை சேரும் உங்கள் இருவரையுமே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

Saturday, June 7, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 1



எமையும் தாங்கி,
வாரிசுகளையும் தாங்கி,
பொறுப்பையும் தாங்கி,
உலக சாதனைக் கவியரங்கத்தில்,
யாம் கவி வாசிக்க,
ஒலி வாங்கியையும் (மைக்கையும்)
தாங்கிக் கொண்டிருக்கிறார்
எமது மனைவி திருமதி.ராஜராஜேஸ்வரி.


அதில் யாம் வாசித்த முதல் கவிதை.

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால், உதித்தது ஒன்று.

உறவற்று போனாலும், உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்,

உறுதியென நினைத்து.

உயர்த்தும் உறுதியில் பள்ளியில் சேர்த்தாய்.

உதித்திருந்த மலரும்,

உயர்வளிக்குமிடத்திலே,

உதிரும் நிலையானதே.

உதித்தவன் உயிருடன் உன்னுயிரும் துடிக்க,

ஈன்றதை பறிகொடுக்கும் நிலையிலே,

உன்னுடைய சோகமோ உயர்வாயிருக்க,

உள்ளத்தின் நினைவுகளோ பறந்தே அலைய,

உணர்ச்சிகளுக்கிடையே உறுதியை பூண்டாய்.

உன்னுடைய உள்ளமோ விரிந்தே கிடக்க,

ஊனமுற்றோரின், ஊனத்தைக் களைய,

உடல்தானம் செய்து உதவிட எண்ணி,

முடிவதை செய்தாய், விரைந்தே எடுத்தாய்.

மகனென்ற உறவு இல்லாமல் போகலாம்.

உன்னுடைய *செயல்கள்

தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய எண்ணங்களுக்கு....

தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.

ஆறுதல் சொல்ல முடியவில்லை.

தலை வணங்குகிறோம்

உனது முடிவுக்கும் உறுதிக்கும்.

Thursday, June 5, 2014

நினைத்தேன்.... -குறுங்கவிதை








உன்னை சந்திக்கா பொழுதுகளில்
சந்தித்ததை நினைத்தேன்.
சந்தித்த பொழுதுகளிலோ,
சிந்தித்ததை நினைத்தேன்.

Monday, June 2, 2014

அஞ்சலி! அஞ்சலி!!



முகமறிந்த நெருங்கிய நட்புகளில், அஞ்சலி பேனர் போடுவார் சிலர்.
அதில் அஞ்சலி செய்தியை பதிப்பர் மேலும் சிலர்.
அதிலே லைக் போட்டு கேளிக்கூத்தாக்குவர் பலர்.
அதற்கும் நேரமின்றி செல்வோர் மேலும் பலர்.
இது நமது நட்பு வட்டதிலேயே நடக்கக்கூடியது.
வீணாக இதையெல்லாம் மனத்திலிட்டு குழம்பிக் கொண்டிருக்காதீர்கள் நண்பர்களே.
எத்தனையோ பெருந்தலைகளே புசுக்.
அப்படியிருக்கையில் நாம், நாம் எம்மாத்திரம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ravi Sarangan 2013





  • ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
    கண் கொள்ளாக் கட்சியாய்
    கனிந்துருகி ஓட,
    மகிழ்விலே மனமும்
    மலர்ந்தது கண்டு.
    வாழ்த்துக்கள் பகிர
    விரைந்தது மனமே.
    ஊறிலா வாழ்வும்
    உளம் நிறைந்த மகிழ்வும்
    உயிரோட்டடமதனை உறவுடன் கண்டு
    உரு தந்த படைப்பால்,
    உன்னத நட்பை
    உணர்த்துமே செயல்கள்,
    உம் உயரிய நிலையை.
    இறைவனின் அருளோ
    இறுதி வரை இருக்க,
    பணிவுடன் அவனின் பாதங்களில் பணிந்து,
    பிரார்த்தித்தோம் உமக்கு பிரியமுடன் யாமே.

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    [அடைத்தது ஏனோ வாசல் வழியை.
    வாழ்த்துக்கள் கூற
    வழியின்றி யாமும்
    சன்னல் வழியே சங்கதி சொன்னோம்.]

    Ravi SaranganPhoto


    • Ravi Sarangan
      Ravi Sarangan

      நிச்சயம். தங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது. நட்புக்கு இலக்கணமான ஸ்ரீராமனுக்கு நன்றி நல்ல நண்பர் கிடைக்க செய்தமைக்கு.
    • July 20, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - MaGo Mgr




MaGo Mgr
2014 Apr 17

நலன்களும் மகிழ்வுகளும்
உமை அண்ட தவம் கொள்ள,
வாழ்த்தினோம் உம்மை
இனிதான இப்பிறந்த நன்னாளிலே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்





உயர்வுகளை நோக்கி செல்கையிலே,
எத்தனையோ வழித்தடைகள்.
அத்தனையும் தாண்டி
செல்லும் பயணம்
இனிதாக நலமுடனும்
மகிழ்வுடனும் அமைந்திட,
இன்றைய நாளில் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

பாழாய் போகும் சுற்றுச்சூழல்


வறண்டிருந்த இடங்களெல்லாம்

வளமாக மாறிடவே

வருங்கால சந்ததியர்

வேட்கை தீர அருந்திடவே

வேறுபாடு நினைக்காமல்

வெட்டினான் குளங்களை

நிறைவாக வாழ்ந்திடவே.

விசாலமான சிந்தனையால் - அன்று

விவேகமாய் கட்டி வைத்தார்.

தீமையான எண்ணங்களால்

தீயதை விதைக்கின்றார்.

குளங்களாய் இருந்த இடம்

குட்டைகளாய் ஆனதே.

நண்ணீராய் இருந்தது

கழிவுநீராய் ஆனதே.

குன்றிருந்த இடங்களையும்

குண்டு வைத்து தகர்க்கிறான்.
நீரிருந்த குளங்களையும்

குப்பைப் போட்டு நிரப்புகிறான்.

காடு இருக்கும் இடங்களையும்

கண் மூடி அழிக்கின்றான்.

காட்டு விலங்கு அத்தனையும்

கண்டபடி ஒழிக்கின்றான்.

இயற்கையாய் இருப்பதெல்லாம்

இல்லாமல் செய்வதாலே,

செயற்கையாய் படைப்பதெல்லாம்

செயலிழந்து போகுதையா.






செல்வம் தேடிய பாதை



தேடிவந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதையா.
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
கண்ணாமூச்சி காட்டுதையா.
இன்று நாளை என்று சொல்லி
நாட்களெல்லாம் போகுதையா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்க சொல்லுதையா.
தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிழம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியை தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.
இன்று இன்று என்று செய்து
விரைவாய் முடிவு காண்போமே.
நினைத்ததை முடித்து நாம்
வெற்றியைப் பெறுவோமே.
வெற்றியை அடையும்போது
செல்வமது சேருமே.
செல்வமது சேரும்போது
வளங்களெல்லாம் கூடுமே.
வெற்றியில் குடும்பமதை
மகிழ்ச்சி அடைய செய்வோமே.
குடும்பத்துடன் சேர்ந்து நாம்
கலகலப்பாய் இருப்போமே.


வாழ்த்துக்கள் - Narayyanan Sb




Narayyanan Sb
2014 Apr 27

சுவைக் குன்றா பொருளோடு, 
வளரும் வாடிக்கையோடு, 
நலமோடு வாழ்கவே.

வாழ்த்துகள் - Pattabi Raman





Pattabi Raman 2014 Apr 27



பொருளும் கருத்தும் 
ஒன்றென இருக்க, 
புன்னகை முகமோ 
 பளின்று மிளிர, 
பயிலும் நடை 
நலமோடு துலங்க வாழ்த்துகள்.

Sunday, June 1, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gopalakrishnan Kanniah






Gopalakrishnan Kanniah


இளமை பொங்கும்
சுவையுடன் நாளும்
மகிழ்வுடன் மனமும்,
நலமுடன் திகழ,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.