Translate

Saturday, June 7, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 1



எமையும் தாங்கி,
வாரிசுகளையும் தாங்கி,
பொறுப்பையும் தாங்கி,
உலக சாதனைக் கவியரங்கத்தில்,
யாம் கவி வாசிக்க,
ஒலி வாங்கியையும் (மைக்கையும்)
தாங்கிக் கொண்டிருக்கிறார்
எமது மனைவி திருமதி.ராஜராஜேஸ்வரி.


அதில் யாம் வாசித்த முதல் கவிதை.

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால், உதித்தது ஒன்று.

உறவற்று போனாலும், உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்,

உறுதியென நினைத்து.

உயர்த்தும் உறுதியில் பள்ளியில் சேர்த்தாய்.

உதித்திருந்த மலரும்,

உயர்வளிக்குமிடத்திலே,

உதிரும் நிலையானதே.

உதித்தவன் உயிருடன் உன்னுயிரும் துடிக்க,

ஈன்றதை பறிகொடுக்கும் நிலையிலே,

உன்னுடைய சோகமோ உயர்வாயிருக்க,

உள்ளத்தின் நினைவுகளோ பறந்தே அலைய,

உணர்ச்சிகளுக்கிடையே உறுதியை பூண்டாய்.

உன்னுடைய உள்ளமோ விரிந்தே கிடக்க,

ஊனமுற்றோரின், ஊனத்தைக் களைய,

உடல்தானம் செய்து உதவிட எண்ணி,

முடிவதை செய்தாய், விரைந்தே எடுத்தாய்.

மகனென்ற உறவு இல்லாமல் போகலாம்.

உன்னுடைய *செயல்கள்

தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய எண்ணங்களுக்கு....

தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.

ஆறுதல் சொல்ல முடியவில்லை.

தலை வணங்குகிறோம்

உனது முடிவுக்கும் உறுதிக்கும்.

No comments: