Translate

Saturday, March 14, 2009

ஸ்ரீ அங்காளம்மன் பாடல் ----2

அம்மா.. அம்மா.... அங்காளம்மா !
உன்னருளை நாடி வந்தோம் அங்காளம்மா !!  ( அம் )

பிறவிகளை கொடுப்பதும் நீயே அம்மா !
பிறந்ததை வளர்ப்பதும் நீயே அம்மா !!

வளர்வதை வழி நடத்தும் தாயே அம்மா !
வளர்ந்ததை வாழ வைப்பது(ம்) நீயே அம்மா !!  (அம் )

குறைகளை களைந்து போக செய்வாயம்மா !
நற்குணங்களையே வரமாக தருவாயம்மா !!

கொடும் சூரரை வதைப்பதும் நீயே அம்மா !
பணிந்தாரை காப்பதும் நீயே அம்மா !!                  ( அம் )

கொண்டாடி உமை சூழ்ந்தோம் அங்காளம்மா !
கொடுப்பதில் நிகரில்லை நீயே அம்மா !!

உன் புகழை பலவாறாய் சொன்னோம் அம்மா !
நினைவிலே நிறுத்திக் கொள்ள தானே அம்மா !!  ( அம் )

பிறவியென்னும் பெருங்கடலை அங்காளம்மா !
நீந்தி கடக்க உதவிகளை செய்வாய் அம்மா !!

தத்தளிக்கும் நிலையிலே நீயே அம்மா !
கை கொடுத்து கரை சேர்ப்பாய் அங்காளம்மா !!     ( அம் )



பின் குறிப்பு :: 
                       வணக்கம். ஸ்ரீ அங்காளம்மன் தாய் அருளால் எழுதப்பட்டுள்ள இப்பஜனைப் பாடல் சாதாரணமாகவோ விரைவாகவோ கைத்தாளம் போட்டு ( கைகளைக் கொட்டி ) தனியாகவோ கோஷ்டி காணமாகவோ பாடக்கூடிய வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. குறைகளிருப்பின் மன்னித்தருள்க. மகிழ்வு கிட்டினால் ஸ்ரீ அங்காளம்மன் தாயிடம் சமர்ப்பியுங்கள். உங்களனைவருக்கும் எல்லா நலன்களும் வழங்க ஸ்ரீ அங்காளம்மன் தாயை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

-தவப்புதல்வன்.

ஸ்ரீ அங்காளம்மன் பாடல் ----

உலகம் புகழும் தெய்வம் எங்கள் அங்காளம்மாவே !
செவிக் குளிர பாடிடுவோம் கேளுங்கள் அதையே !!

எங்களின் குலதெய்வம் என்றும் நீயே !
உன்னையே பணிந்திருப்போம் அங்காளம்மாவே !!

நின்னருள் வேண்டியே அங்காளம்மாவே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மாவே !!  ( உல )


நின்னருளே எமக்கெங்கும் கவசமம்மா!
நீச்சமடைய செய்யுமது பகையையம்மா !!

நினைவுகள் என்றுமே உன்னிடமம்மா !
நல்லதை நிறைவேற்றி வாழ வைப்பாயே !!                 ( உல )

அலங்கார பூஜிதையே அங்காளம்மாவே !
மங்களங்கள் பல வழங்கும் அங்காளம்மாவே !!

இணைப்பிரியா தம்பதியாய் வாழ்ந்திட தாயே !
அனுகிரஹம் வேண்டினோம் அங்காளம்மாவே !!           ( உல )

நலமுடனே வாழ்ந்திடவே அங்காளம்மாவே !
உம்மையே தொழுது நின்றோம் அங்காளம்மாவே !!

கஷ்டங்களை நீக்கியே அங்காளம்மாவே !
கருணைமழை பொழிந்திடுவாய் அங்காளம்மாவே !!       ( உல )

துன்பங்கள் மறைந்திட அங்காளம்மாவே !
இன்பத்தையே எமக்களித்து உடனிருப்பாயே !!

மக்கள் நலம் வேண்டியே அங்காளம்மாவே !
உம்மையே நாடி நின்றோம் அங்காளம்மாவே !!             ( உல )

மகளுக்கு மணம் முடிக்க அங்காளம்மாவே !
மங்களாசி அருளிடுவாய் அங்காளம்மாவே !!

மகளுக்கு மணம் முடிக்க அங்காளம்மாவே !
எங்களுக்கு வரந்தருவாய்அங்காளம்மாவே !!                   ( உல )

மகளுக்கு மணம் முடித்து அங்காளம்மாவே !
மகிழ்ச்சியாய் வாழ வைப்பாய் அங்காளம்மாவே !!

என்றும் உனது புகழ்பாட அங்காளம்மாவே !
எமக்கருளை புரிவாயே அங்காளம்மாவே !!                        ( உல )





பின் குறிப்பு-
          வணக்கம். எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்கள் ''ஸ்ரீ அங்காளம்மன் தாய்''  பற்றி எழுதிய பாடலை யான் திருத்தி எழுத முயற்சித்தது. தவறோ, குறையோ இருப்பின் மன்னிக்க. எல்லா புகழும் எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்களுக்கே. அனைவரும் நலமுடன் வாழ ஸ்ரீ அங்காளம்மன் தாயை பிரார்த்திப்போம். நன்றி.

தவப்புதல்வன்








ஸ்ரீ அங்காளம்மன் பாடல்

ஜெகம் புகழும் ரூபலாவண்ய அங்காளம்மன் தாயே!
செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் தாயே !!

ஆதர்ஷ தம்பதியாய் வாழ்ந்திட தாயே !
அனுகிரஹம் வேண்டினோம் அங்காளம்மன் தாயே !!

மக்கள் நலம் கருதியே வாழ வைக்கும் தாயே !
எங்கள் குலதெய்வம் நீயே அங்காளம்மன் தாயே !!

மஞ்சள் குங்கும அலங்கார பூஜிதயே தாயே !
மங்களங்கள் வாரி வழங்கும் அங்காளம்மன் தாயே !!

கஷ்டங்களை நீக்கிடவே அங்காளம்மன் தாயே !
கருணா கடாக்ஷியாக வந்திடுவாய் அங்காளம்மன் தாயே !!

நினைத்ததை நிறைவேற்றிடவே அங்காளம்மன் தாயே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மன் தாயே !!

நோய்நொடி இன்றி வாழ்ந்திடவே அங்காளம்மன் தாயே !
நித்தம் நித்தம் தொழுது நின்றோம் அங்காளம்மன் தாயே !!

மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மங்களாசி கூறிடுவாய் அங்காளம்மன் தாயே !!

மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மனமுவந்து வந்தருள்வாய் அங்காளம்மன் தாயே !!


மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மனமிரங்கி, மனமகிழ்ந்து, மங்களாசி கூறி
மகிழ்ச்சியாய் வாழ வைப்பாய் அங்காளம்மன் தாயே !!

வானும் விண்ணும் உள்ளளவும் உந்தனருள் தாயே !
என்றென்றும் அருளிடும் அங்காளம்மன் தாயே !! ( ஜெ )
 

இயற்றியது ;
                  எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்கள்.

Friday, March 13, 2009

பேசுங்கள்...! பேசுங்கள்...!!

* தாயிடம் அன்பாகப் பேசுங்கள் !

* தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள் !

* ஆசிரியரிடம் அடக்கத்தோடு பேசுங்கள் !

* மனைவியிடம் உண்மையைப் பேசுங்கள் !

* சகோதரரிடம் அளவோடு பேசுங்கள் !

* குழந்தைகளிடம் ஆர்வமாகப் பேசுங்கள் !

* நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள் !

* வாடிக்கையாளரிடம் நேர்மையாகப் பேசுங்கள் !

* அதிகாரிகளிடம் பணிவாகப் பேசுங்கள் !

* தொழிலாளியிடம் மனிதநேயத்தோடு பேசுங்கள் !

* அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாகப் பேசுங்கள் !

* கடவுளிடம் மௌனமாகப் பேசுங்கள் !

* பேசுங்கள் !  பேசுங்கள் !  ஆனால் ?

 புரிந்து பேசுங்கள்.  புரியும்படி பேசுங்கள்.