உலகம் புகழும் தெய்வம் எங்கள் அங்காளம்மாவே !
செவிக் குளிர பாடிடுவோம் கேளுங்கள் அதையே !!
எங்களின் குலதெய்வம் என்றும் நீயே !
உன்னையே பணிந்திருப்போம் அங்காளம்மாவே !!
நின்னருள் வேண்டியே அங்காளம்மாவே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மாவே !! ( உல )
நின்னருளே எமக்கெங்கும் கவசமம்மா!
நீச்சமடைய செய்யுமது பகையையம்மா !!
நினைவுகள் என்றுமே உன்னிடமம்மா !
நல்லதை நிறைவேற்றி வாழ வைப்பாயே !! ( உல )
அலங்கார பூஜிதையே அங்காளம்மாவே !
மங்களங்கள் பல வழங்கும் அங்காளம்மாவே !!
இணைப்பிரியா தம்பதியாய் வாழ்ந்திட தாயே !
அனுகிரஹம் வேண்டினோம் அங்காளம்மாவே !! ( உல )
நலமுடனே வாழ்ந்திடவே அங்காளம்மாவே !
உம்மையே தொழுது நின்றோம் அங்காளம்மாவே !!
கஷ்டங்களை நீக்கியே அங்காளம்மாவே !
கருணைமழை பொழிந்திடுவாய் அங்காளம்மாவே !! ( உல )
துன்பங்கள் மறைந்திட அங்காளம்மாவே !
இன்பத்தையே எமக்களித்து உடனிருப்பாயே !!
மக்கள் நலம் வேண்டியே அங்காளம்மாவே !
உம்மையே நாடி நின்றோம் அங்காளம்மாவே !! ( உல )
மகளுக்கு மணம் முடிக்க அங்காளம்மாவே !
மங்களாசி அருளிடுவாய் அங்காளம்மாவே !!
மகளுக்கு மணம் முடிக்க அங்காளம்மாவே !
எங்களுக்கு வரந்தருவாய்அங்காளம்மாவே !! ( உல )
மகளுக்கு மணம் முடித்து அங்காளம்மாவே !
மகிழ்ச்சியாய் வாழ வைப்பாய் அங்காளம்மாவே !!
என்றும் உனது புகழ்பாட அங்காளம்மாவே !
எமக்கருளை புரிவாயே அங்காளம்மாவே !! ( உல )
பின் குறிப்பு-
வணக்கம். எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்கள் ''ஸ்ரீ அங்காளம்மன் தாய்'' பற்றி எழுதிய பாடலை யான் திருத்தி எழுத முயற்சித்தது. தவறோ, குறையோ இருப்பின் மன்னிக்க. எல்லா புகழும் எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்களுக்கே. அனைவரும் நலமுடன் வாழ ஸ்ரீ அங்காளம்மன் தாயை பிரார்த்திப்போம். நன்றி.
தவப்புதல்வன்
No comments:
Post a Comment