ஜெகம் புகழும் ரூபலாவண்ய அங்காளம்மன் தாயே!
செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் தாயே !!
ஆதர்ஷ தம்பதியாய் வாழ்ந்திட தாயே !
அனுகிரஹம் வேண்டினோம் அங்காளம்மன் தாயே !!
மக்கள் நலம் கருதியே வாழ வைக்கும் தாயே !
எங்கள் குலதெய்வம் நீயே அங்காளம்மன் தாயே !!
மஞ்சள் குங்கும அலங்கார பூஜிதயே தாயே !
மங்களங்கள் வாரி வழங்கும் அங்காளம்மன் தாயே !!
கஷ்டங்களை நீக்கிடவே அங்காளம்மன் தாயே !
கருணா கடாக்ஷியாக வந்திடுவாய் அங்காளம்மன் தாயே !!
நினைத்ததை நிறைவேற்றிடவே அங்காளம்மன் தாயே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மன் தாயே !!
நோய்நொடி இன்றி வாழ்ந்திடவே அங்காளம்மன் தாயே !
நித்தம் நித்தம் தொழுது நின்றோம் அங்காளம்மன் தாயே !!
மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மங்களாசி கூறிடுவாய் அங்காளம்மன் தாயே !!
மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மனமுவந்து வந்தருள்வாய் அங்காளம்மன் தாயே !!
மகளுக்கு மணமுடிக்க அங்காளம்மன் தாயே !
மனமிரங்கி, மனமகிழ்ந்து, மங்களாசி கூறி
மகிழ்ச்சியாய் வாழ வைப்பாய் அங்காளம்மன் தாயே !!
வானும் விண்ணும் உள்ளளவும் உந்தனருள் தாயே !
என்றென்றும் அருளிடும் அங்காளம்மன் தாயே !! ( ஜெ )
இயற்றியது ;
எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்கள்.
No comments:
Post a Comment