அம்மா.. அம்மா.... அங்காளம்மா !
உன்னருளை நாடி வந்தோம் அங்காளம்மா !! ( அம் )
பிறவிகளை கொடுப்பதும் நீயே அம்மா !
பிறந்ததை வளர்ப்பதும் நீயே அம்மா !!
வளர்வதை வழி நடத்தும் தாயே அம்மா !
வளர்ந்ததை வாழ வைப்பது(ம்) நீயே அம்மா !! (அம் )
குறைகளை களைந்து போக செய்வாயம்மா !
நற்குணங்களையே வரமாக தருவாயம்மா !!
கொடும் சூரரை வதைப்பதும் நீயே அம்மா !
பணிந்தாரை காப்பதும் நீயே அம்மா !! ( அம் )
கொண்டாடி உமை சூழ்ந்தோம் அங்காளம்மா !
கொடுப்பதில் நிகரில்லை நீயே அம்மா !!
உன் புகழை பலவாறாய் சொன்னோம் அம்மா !
நினைவிலே நிறுத்திக் கொள்ள தானே அம்மா !! ( அம் )
பிறவியென்னும் பெருங்கடலை அங்காளம்மா !
நீந்தி கடக்க உதவிகளை செய்வாய் அம்மா !!
தத்தளிக்கும் நிலையிலே நீயே அம்மா !
கை கொடுத்து கரை சேர்ப்பாய் அங்காளம்மா !! ( அம் )
பின் குறிப்பு ::
வணக்கம். ஸ்ரீ அங்காளம்மன் தாய் அருளால் எழுதப்பட்டுள்ள இப்பஜனைப் பாடல் சாதாரணமாகவோ விரைவாகவோ கைத்தாளம் போட்டு ( கைகளைக் கொட்டி ) தனியாகவோ கோஷ்டி காணமாகவோ பாடக்கூடிய வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. குறைகளிருப்பின் மன்னித்தருள்க. மகிழ்வு கிட்டினால் ஸ்ரீ அங்காளம்மன் தாயிடம் சமர்ப்பியுங்கள். உங்களனைவருக்கும் எல்லா நலன்களும் வழங்க ஸ்ரீ அங்காளம்மன் தாயை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
-தவப்புதல்வன்.
No comments:
Post a Comment