Translate

Thursday, May 19, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வார்த்தைகள் பாராட்டி
வந்து உனை தாலாட்ட,
மகிழ்விலே நீராடி
நலமுடன் நீ வாழ,
இறை தந்த செல்வங்கள்
இன்பத்தை அள்ளித் தர,
முழுமையாய் இவ்வருடம்
களிப்பாக களிந்திடவும்,
நாங்களும் வாழ்த்தினோம்
வாழ்வை புதுப்பிக்கும் இந்நாளில்.
சந்தோசமைன புட்டின ரோஜுலு
ஆசிர்வாதமு.

பாவகாரு & அக்க.

2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ரிஷப் ஆதர்ஷ்

முளையிட்ட விதையாக,
மூன்றிலை தோன்றிருக்க,
முழு மூச்சாய் வேரூன்றி
முன்னிலையில் நீ விற்றிருக்க,
முக்கண்ணன் அருள் பார்வை
முழுமையாக உனக்கு கிடைக்க
மூழ்கியே வாழ்த்தினோம்
முடியறியோன் அடி பணிந்து.

புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு ரிஷப் ஆதர்ஷ்

அய்ய & அம்மிய
2016






Wednesday, May 18, 2016

பிளஸ் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் சாதனை



பிளஸ் 2 தேர்வில் சாதனை புரிந்துள்ள கீழ்காணும் மாற்றுத்திறனாளிகளை வாழ்த்துவோம்.

1)   ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்த நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி கோகிலபிரியா, வணிகவியல் பாடப்பிரிவில் படித்து, மொத்தம் 1167 மதிப்பெண்கள் பெற்று, பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நிழலுருவமாய் தெரிந்த கண்பார்வை, பிறகு முற்றிலும் போக, வகுப்பு தோழி சிவபார்வதி உறுதுணையாய் பாடங்களை படித்து உதவ, பிளஸ் 1 தோழி ஶ்ரீமதியும் உதவியாய் இருக்க, சிறப்பாக படித்து தேர்வெழுத முடிந்தது. பள்ளி நிற்வாகமும், ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். வகுப்பு தோழி சிவபார்வதி மொத்தம் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிட தக்கது. கோகிலபிரியா, ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி, கலெக்டர் ஆவதே இலட்சியமென தெரிவித்துள்ளார்.   

2)   கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் கதிரவன் மொத்தம் 1134 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து பி.எட். படித்து ஆசிரியராகி நல்ல மாணவர்களை உருவாக்குவதே இலட்சியமென தெரிவித்துள்ளார்
3)   நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் கோபிநாத் மொத்தம் 926 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பி.காம். முடித்து ஐ.ஏ.எஸ் ஆவதே குறிக்கோளென தெரிவித்துள்ளார்.
4)   நாமக்கல் மாவட்டம் பெரியமணலி மேல்நிலைப்பள்ளியில் படித்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவி இந்து. இவர் தொழிற்கல்வி வேளாண்மை செயல்முறைகள் பாடப்பிரிவில் பயின்று, மொத்தம் 1098 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சிறு வயது முதலே தாத்தா, பாட்டி தான் வளர்த்துள்ளனர். பி.எஸ்சி., வேளாண்மை படித்து முடித்து, தொடர்ந்து ஐ.ஏ.எஸ் ஆவதே எனது கனவென தெரிவித்துள்ளார்.

5)   சேலம் வாழப்பாடி வெள்ளாள குண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி கீர்த்தனா, வணிகவியல் பாடப்பிரிவில் படித்து, மொத்தம் 1098 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.   

நல்லாசிகள்

உன் விரல்களின் ஓட்டத்தில்
இசைக்கோர்வைகள் பிறப்பெடுக்க,
நடனமிடும் ஒலியலைகள்
செவிகளுக்கு விருந்தளிக்க,
அப்பப்பா.. மனம் குதிக்கிறது
ஆனந்தத்தில் கூத்தாடி.
நல்லாசிகள் சுதன் பேரனே,
இசையிலும் மேன்மையடைய.

பாசமுடன், 

தாத்தா,
பாட்டி.  

அதிகாரமில்லையா? - செய்தி கட்டுரை

தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பொறுப்பேற்றுள்ள நீதிபதி எச்.எல்.தத்து அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
அவர் ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருப்பதைக் கேளுங்கள்;-
சில வருடங்களுக்கு முன், சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லத்திறகு சென்றதாகவும், அங்கு 49 பேர் ஒரே ‘’டூத் பிரஷை’’யே பயன்படுத்தும் அவல நிலை இருந்ததாகவும், இது போன்ற நிலை குறிப்பிட்ட மாநிலத்திலில்லாமல், நாடு முழுவதும் இதுபோன்றே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் செயல்படுவதாகவும், அரசாங்கத்தினால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதிகாரிகள் ஊழியர்களின் பேராசை, இலஞ்சம், ஊழலால் இது போன்ற அவலநிலை என்றும், தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பதவியேற்றுள்ள நிலையில், இது போன்ற இல்லங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவு இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-நாளிதழ் செய்தி.
#ஐயா, கீழ்காணும் எங்கள் சந்தேகங்களை தய்யை கூர்ந்து தீர்த்து வைப்பீர்களா?
1) தாங்கள் சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, இது குறித்து நடவடிக்கை எடுத்திருக்க முடியாதா? அல்லது அதிகாரமில்லையா? அல்லது உரிமையில்லையா?
2) அப்போதைய தேசிய மனித உரிமை ஆணைய தலைவருக்கு, இது குறித்து தாங்கள் புகார் கொடுக்கவில்லையா?
3) அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய, இலஞ்சம், ஊழலில் திளைத்த அதே அதிகாரிகளும் ஊழியர்களும் தானே, தற்போது தங்கள் தலைமையின் கீழும்?
4) ஒரு சாதாரண அரசியல்வாதி போல, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பொறுப்பேற்றபின் ஊடகங்களில் தாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சி தருமென தாங்கள் கருதுகிறீர்களா?


Tuesday, May 17, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ஏதேதோ நினைவுகள்
எங்கெங்கோ செல்கிறது.
ஏற்றமிகு வழியெல்லாம்
உன் முன்னே நிற்கிறது.
மகிழ்வின் தருணங்கள்
விரைவில் பூ பிடிக்க,
வேகமெடுத்த வேங்கையாய்
நற்குறி நோக்கி நீ பறக்க,
அம்பிகையின் அருள் வேண்டி
பிரார்த்தித்தோம் உனக்காக.

இனிய பிறந்தநாள் நல்லாசிகள்.






இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வழக்கமான பணிகளில்
வழியெங்கும் உன் பேச்சு.
வாழ்வெல்லாம் மகிழ்ந்திருக்க,
வளமுடன் நலமாய் நீயிருக்க.
வணங்கும் கடவுளவர்
வாரியணைத்து உனைக்காக்க.
வாழ்த்துக்கள் உமக்காய் - பாசமுடன்
வந்ததே எம் மூச்சு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

ஒற்றை மின்விளக்கு - சிறு கவிதை

தொலைவில்
தேர்தல் மேடை மின்னலங்காரம்,
சூரிய ஒளியும் தோற்க,
இவன் வீட்டு
ஒற்றை மின்விளக்கு
துடித்துக் கொண்டிருந்தது
உயிர் பிரியும் நிலைப்போல.

-தவப்புதல்வன்

Saturday, May 14, 2016

பண்டங்கள்



வாய் ருசித்த பண்டங்கள்
வரிசையில் வீற்றிருக்கும்,
நாசி வழி மணம் நுழைந்து
நாக்கினிலே ஊற்றெடுக்கும்,
விலங்கிடா கைகளும்
தடுமாறிக் கைப் பிசையும்.
விருப்பமில்லா முனிவராக
தவம் செய்ய நேர்ந்து விடும்.
ஐய்யகோ என்னவென்பேன்
மூப்புடன் கைக்கோர்தத
நோய்களை....
எப்படிதான் வேரருப்பேன்
ஆசைகளையும் நோய்களையும்.

#ஐயா இரா.கி.அவர்களே , தாங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறையை பிரார்த்திக்கிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Vi Ji



எழுத்தில் சுவையிருக்க,
வாழ்வில் அதுவினிக்க,
நாளெல்லாம் மகிழ்வாக,
நலமுடன் நீரிருக்க,
வாழ்த்தினோம் அன்பாக,
உமக்கான இந்நாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவியரசி. 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

காதலால் இதயங்கள்
காலமெல்லாம் திளைத்திருக்க,
கடவுளின் கருணையால்
கட்டுண்டு மூழ்கிருக்க,
வாழ்க்கைப்படகு செல்லட்டும்
வழியெங்கும் மணம் பரப்பி.
தாமதமான திருமணநாள்
நல்வாழ்த்துக்கள் 

From: AMB & Family











இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

#வாழ்வெல்லாம் மகிழ்விலே
உன் விழிகளில் நீர் பூக்க,
கும்மியடி மகளே ! கும்மியடி !!

#உள்ளத்து மேகங்கள்
ஊர்வலமாய் கொடி பிடிக்க,
உறுதியாய் நில்லடி வீரமகளே!

#வீம்பு பிடிக்கும் வீராப்பு – உன்னிடம்
வீழ்ந்து கிடக்கட்டும் அடிமையாய்
வகுத்துக் கொள்ளடி அன்பு மகளே!

#ஆணவத்தை அடக்க வேண்டுமடி
மகளே ! - நீயும் புரிந்து நடக்க
கற்றுக் கொள்ளடி அன்பு மகளே!

#உலகையே கொள்ளையடி
சின்ன மகளே! – அது
அன்பினால் ஆகுமடி செல்லமகளே!

#இறையருளாலே நலமோடு,
மகிழ்வோடு நீ வாழ மகளே!
ஆசிகள் பல நூறு தங்கமகளே !

#இனிவரும் நாட்களேல்லாம்
மகளே ! - என்றுமது
உனதாகட்டும் அன்பு மகளே !

இனிய பிறந்தநாள் நல்லாசிகள் 
பாசமுடன், J <3 o:p="">
அப்பா, அம்மா.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

v  கலைகள் உனைப் படைக்க,
( பெற்றோர் )
v  கலைகளை நீ படைக்க,
( கல்வி, இசை, அலங்காரம் ……)
காட்சிகளாய் அத்தனையும்
கண்களை கவர்ந்திழுக்க,
கற்பவையெல்லாம் கற்தூணாய்
காலமனைத்தும் நிலைத்திருக்க,
வானில் வரும் தாரகையாய்
உலா வந்து பெருநிலையாய்,
சிறப்புகளை நீயடைந்து
நலமுடன் எந்நாளும்
ஆனந்தமாய் நீ வாழ - பிரியதர்ஷிணி

ஆசிர்வதித்தோம் இப்பிறந்த இந்நாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்




காலம் விரைவாக, மிக விரைவாக
செல்கிறது, வயதையும்
உடன் அழைத்துக் கொண்டு.
உறவுகளின் அணைப்பினிலே
நீ நலமாக,
கொஞ்ச வேண்டும்
புதிய தலைமுறைகளை மகிழ்வாக.
இறையருள் என்றும் உனக்கு நிலையாக
வருகின்ற அத்தனையும்,
நினைவுகளில் சிறப்பாக நீ கோர்க்க,
உன் பிறந்தநாளுக்காய்
நாங்கள் வாழ்த்தினோம் அன்பாக.

.AMB