வாய் ருசித்த பண்டங்கள்
வரிசையில் வீற்றிருக்கும்,
நாசி வழி மணம் நுழைந்து
நாக்கினிலே ஊற்றெடுக்கும்,
விலங்கிடா கைகளும்
தடுமாறிக் கைப் பிசையும்.
விருப்பமில்லா முனிவராக
தவம் செய்ய நேர்ந்து விடும்.
ஐய்யகோ என்னவென்பேன்
மூப்புடன் கைக்கோர்தத
நோய்களை....
எப்படிதான் வேரருப்பேன்
ஆசைகளையும் நோய்களையும்.
#ஐயா இரா.கி.அவர்களே , தாங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறையை பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment