பிளஸ் 2 தேர்வில்
சாதனை புரிந்துள்ள கீழ்காணும் மாற்றுத்திறனாளிகளை வாழ்த்துவோம்.
1)
ஈரோடு
மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்த நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி கோகிலபிரியா, வணிகவியல் பாடப்பிரிவில்
படித்து, மொத்தம் 1167 மதிப்பெண்கள் பெற்று, பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்
பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நிழலுருவமாய் தெரிந்த கண்பார்வை, பிறகு
முற்றிலும் போக, வகுப்பு தோழி சிவபார்வதி உறுதுணையாய் பாடங்களை படித்து உதவ, பிளஸ்
1 தோழி ஶ்ரீமதியும் உதவியாய் இருக்க, சிறப்பாக படித்து தேர்வெழுத முடிந்தது. பள்ளி
நிற்வாகமும், ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். வகுப்பு தோழி சிவபார்வதி மொத்தம்
1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிட தக்கது. கோகிலபிரியா, ஐ.ஏ.எஸ்.
தேர்வெழுதி, கலெக்டர் ஆவதே இலட்சியமென தெரிவித்துள்ளார்.
2)
கரூர்
மாவட்டம் லாலாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி
மாணவர் கதிரவன் மொத்தம் 1134 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
கல்லூரி படிப்பில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து பி.எட். படித்து ஆசிரியராகி நல்ல மாணவர்களை
உருவாக்குவதே இலட்சியமென தெரிவித்துள்ளார்
3)
நாமக்கல்
தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த விழி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்
கோபிநாத் மொத்தம் 926 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நாமக்கல்
மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பி.காம். முடித்து ஐ.ஏ.எஸ் ஆவதே குறிக்கோளென
தெரிவித்துள்ளார்.
4)
நாமக்கல்
மாவட்டம் பெரியமணலி மேல்நிலைப்பள்ளியில் படித்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி
மாணவி இந்து. இவர் தொழிற்கல்வி வேளாண்மை செயல்முறைகள் பாடப்பிரிவில் பயின்று, மொத்தம்
1098 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடம்
பெற்றுள்ளார். சிறு வயது முதலே தாத்தா, பாட்டி தான் வளர்த்துள்ளனர். பி.எஸ்சி., வேளாண்மை
படித்து முடித்து, தொடர்ந்து ஐ.ஏ.எஸ் ஆவதே எனது கனவென தெரிவித்துள்ளார்.
5)
சேலம்
வாழப்பாடி வெள்ளாள குண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி
மாணவி கீர்த்தனா, வணிகவியல் பாடப்பிரிவில் படித்து, மொத்தம் 1098 மதிப்பெண்கள் பெற்று,
மாற்றுத்திறனாளிகள் வரிசையில் சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment