Translate

Wednesday, May 18, 2016

அதிகாரமில்லையா? - செய்தி கட்டுரை

தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பொறுப்பேற்றுள்ள நீதிபதி எச்.எல்.தத்து அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
அவர் ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருப்பதைக் கேளுங்கள்;-
சில வருடங்களுக்கு முன், சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லத்திறகு சென்றதாகவும், அங்கு 49 பேர் ஒரே ‘’டூத் பிரஷை’’யே பயன்படுத்தும் அவல நிலை இருந்ததாகவும், இது போன்ற நிலை குறிப்பிட்ட மாநிலத்திலில்லாமல், நாடு முழுவதும் இதுபோன்றே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் செயல்படுவதாகவும், அரசாங்கத்தினால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதிகாரிகள் ஊழியர்களின் பேராசை, இலஞ்சம், ஊழலால் இது போன்ற அவலநிலை என்றும், தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பதவியேற்றுள்ள நிலையில், இது போன்ற இல்லங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவு இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-நாளிதழ் செய்தி.
#ஐயா, கீழ்காணும் எங்கள் சந்தேகங்களை தய்யை கூர்ந்து தீர்த்து வைப்பீர்களா?
1) தாங்கள் சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, இது குறித்து நடவடிக்கை எடுத்திருக்க முடியாதா? அல்லது அதிகாரமில்லையா? அல்லது உரிமையில்லையா?
2) அப்போதைய தேசிய மனித உரிமை ஆணைய தலைவருக்கு, இது குறித்து தாங்கள் புகார் கொடுக்கவில்லையா?
3) அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய, இலஞ்சம், ஊழலில் திளைத்த அதே அதிகாரிகளும் ஊழியர்களும் தானே, தற்போது தங்கள் தலைமையின் கீழும்?
4) ஒரு சாதாரண அரசியல்வாதி போல, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக பொறுப்பேற்றபின் ஊடகங்களில் தாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சி தருமென தாங்கள் கருதுகிறீர்களா?


No comments: