Translate

Wednesday, August 31, 2016

போனதெங்கே? - 7


அலையலையாய் உன் நினைவு
அனைத்திலும் நம் உறவு
அள்ள அள்ள குறையா அன்பிருக்க
அதில் குறை வைத்து போனதெங்கே?


நதி ஓட்டம் அணை தடுக்க
எங்கள் வாழ்க்கை ஓட்டம் உன்னால் தேங்க
உனது வாழ்வு எதிலோ கலக்க - நீயும்
விதியென விடுப்பட்டு போனதெங்கே?

சிருஷ்டித்த நம் காலம்
சிந்தனையில் புரண்டோட,
சிந்திக்க எனை விட்டு
சிதையில் நீ போனதெங்கே?

ஒரு நாளில் கூடி விட்டு
மணி கணக்கில் இருந்து விட்டு
கலைந்த உறவுடனும் நட்புடனும்
மறைந்து நீயும் போனதெங்கே?

அன்று காக்கை கரையும் நேரத்தில்
முன்னோர்களை நினைத்திருப்பேன்
படையல் படைத்து நிற்கின்றேன்
பறந்து நீ போனதெங்கே?
==========================முடிவு

Tuesday, August 30, 2016

போனதெங்கே - 6


நான் சுமந்த சுமையுடன் நீ தோளில் சுமந்தாய்
தலையிலும் தோளிலும் முழு சுமை கொடுத்து
சுமையின் சிரமத்தை
உணர  செய்து
சுமையிறக்கி நீ மட்டும் போனதெங்கே?

உன் பாடு என் பாடு
பிரிக்கமுடியா நம் பாடு
உன்பாடென கூறாமல் - நீ
அத்தனையும் படுயென போனதெங்கே?


அலைக்கடலாய் எண்ணங்கள்
ஆர்பரிக்கிறது நெஞ்சத்தில்
மூச்சடைத்து  நான் தவிக்க
மூச்சை துறந்து போனதெங்கே? 

தழுவும் காற்றும் அனலென காய,
நடுநிசி பொழுதில் குளிர்நீர் தழுவ,
தழுவிய நீரிலும் ஆவி பறக்க,
தனிமையில் விட்டு போனதெங்கே?

Monday, August 29, 2016

போனதெங்கே - 5


எங்கெங்கும் உன் பிம்பங்கள் 
விழியசைவில் மறைகிறது 
உடமைகள் யாவும் உன் ஏக்கத்தில் 
அக்கவலையற்று போனதெங்கே?

விழி கூறும் செய்திகள் அற்று போக,
வின்னோக்கி இருக்கிறேன் திரும்புதல் காண,
விட்டமும் சட்டமும் உன் உழைப்பினைக் காட்ட,
அத்தனையும் விட்டு நீ போனதெங்கே?

சோற்றுக்கைகள் காய்ந்தபடி இருக்க,

மனத்தின் நினைவுகள் உன்னுடன் உலாவ,
ஏக்க மூச்சுகள் பெரிதாய் ஒலிக்க,
இத்தனையும் செய்ய விட்டு போனதெங்கே?

அதிர்ச்சி கொடுப்பாய் மறைந்து நின்று,
அதிர்ச்சி கொடுத்தாய் நிரந்தரமாய் இன்று.
அறிந்து நான் உறைந்து நிற்க, 
அது பொய்யென கூறாமல் போனதெங்கே?

Saturday, August 27, 2016

போனதெங்கே - 4


நீ ருசித்த உணவுகள்
என் நாக்கு மறந்தாலும்
நினைவோடு செய்கின்றேன்
சுவைக்க மறந்து போனதெங்கே?
உன் உணவு தட்டுகளில்
ஈ, எறும்புகள் மொய்த்திருக்க
தயங்குகிறேன் தட்டகற்ற
சேப்பாமல் இடையிலே போனதெங்கே?
உறக்கத்தை நான் மறந்தேன்
உறக்கத்தில் நீ விரைந்தாய்
அவசரமாய் யார் அழைத்தார்
அவருடன் போனதெங்கே?
குடும்பத்தின் நலனுக்காய்
ஆண்டுகள் சில நூறு கேட்டு நீயும், வாழத்தான் கூடாதோ?
எமை சோதித்து போனதெங்கே?

Thursday, August 25, 2016

போனதெங்கே? - 3







விரல்களை மடக்கி விரிக்கின்றேன்

விடுப்பட்ட கணக்காய் தவிக்கின்றேன்

உதவிக்கு நீயும் உடனின்றி
உதறி விட்டு போனதெங்கே?




செல்ல கொஞ்சல்கள் பகிர்ந்ததினால்
செல்லங்கள் செழிக்கும் நிலைக்கண்டோம்
அவை வதங்கி போகும் நிலையில்
உரமான நீ போனதெங்கே?


கிளை விடும் நேரத்தில்

வேர் அழுகி போனது போல், (ஆணிவேர் அறுந்தது போல)

உறவு செழிக்கும் நேரத்தில்

அறுந்து நீ போனதெங்கே?



சூறைக்காற்றில் ஓட்டை விழுந்து

மூழ்கும் நிலை கப்பல் போல்
குடும்பத்தை இயக்கும் மாலுமி நீ

சுக்கானை விட்டு போனதெங்கே?

Wednesday, August 24, 2016

உளரல்




சொத்துக்கள் நீயானால்
என் சுகமனைத்தும் நீ தானே!
பூசனிக்கொடியில் விளைந்த பப்பாளி
அன்பில் நீ பெருவெள்ளம்
அடைக்கவியலா ஊற்றுக்கண்
எத்தனையோ வார்த்தைகள் எடுத்தியம்ப,
எதிலும் ஈடாகா உன் பிறப்பு
எனக்கென வாய்த்தது இறைவரம்
சொர்க்கத்தின் திறப்பு உன் வசம்
என்றும் மாற என் வாசம்
நினைவுகளின் ஓட்டம் சீரின்றி
பரந்து விரிகிறது காட்டறாய்
போதையில் நானிருக்க,
ஊற்றி கொடுக்க நீருக்க
தெளியாது இது விடிந்தாலும்
கற்று கொடு உடனிருந்து

Monday, August 22, 2016

போனதெங்கே? - 2



ஓரப்பார்வை நான் பார்க்க - உன்
கள்ளப்பார்வையில் களிப்பிருக்கும்
பார்வையை முழுதாய் பறித்தது போல்
காரிருளில் மறைந்து  நீ போனதெங்கே?

உன் இதயத்துடிப்பை என் செவிமடுக்க
என் கூந்தல் மணத்தை நீ நுகர்ந்தாய்.
விரல்களின் விளையாட்டில் நான் சொக்க,
விளையாட மறந்து போனதெங்கே?

உணர்வுகளின் வேக முத்துக்கள்
உடலெங்கும் பூத்து தித்திக்க
களிநடனம் ஆடிய நாட்களை
கனவுகளாக்கி போனதெங்கே?

ஒன்றுக்குள் ஒன்றாய் குடியிருந்தோம்
ஓராயிரம் இரவுகள் களித்திருந்தோம்
குறை உனக்கு ஏதேனும் வைத்தேனோ
வாழ்வை முடித்து போனதெங்கே?

வாழ்த்துகள்

ஓடும் விழிகள் 
ஒரு கதை சொல்ல.
நாடிய நட்பும் 
அதை அறிந்து கொள்ள
சமிக்கை செய்தது 
ஆவலுடன் மெல்ல.

மெல்லிய புன்னகை 
இதழினில் விரிந்து
இனிய பொழுதினில் 
மகிழ்வுகள் பெருக
நல்வரவு கூறி
நகைத்தது இதமாய்.


அன்பு வணக்கமுடன் வாழ்த்துகள் 
நட்புகளே.🌹

Wednesday, August 17, 2016

போனதெங்கே? - 1



கட்டி அணைக்கிறேன்
கனவுகளில் உன்னை நான்.
 கட்டிய மணாளா
கரைந்து நீ போனதெங்கே?

தனிப்பட்டு குடும்பம் 
தள்ளாடி நிற்க 
தவிக்க விட்டு நீ
தனியாய் போனதெங்கே?

அப்பாவெனும் குழந்தைகளுடன்
அபலையாய் நான் துடிக்க, 
அத்தனையும் துறந்து விட்டு
அமைதியாய் போனதெங்கே?

அலையலையாய் விழிநீரும் 
அருவியாய் வழிந்தோட,
அள்ளி அணைத்து அகற்றி விட
ஆறுதலாய் நீயின்றி போனதெங்கே?

Tuesday, August 16, 2016

தாக்கம்



உமை ஒற்றி, எமை பெற்றீர் .
ஈடுகள் பல கொடுத்தீர்.
உதித்ததினால் உறவு
மறித்திடினும் உணருமோ?
வாழ்வின் அனுபவங்கள்
உயரம் சென்றிடினும்
மயக்க நிலையினில்
பகட்டுகள் ஒட்டிடுமோ?
ஏக்கத்தின் ஒரு பக்கம்
உந்தி சென்றாலும்,
எண்ணத்தின் மறு பக்கம்
துகள்களாய் கிழிகிறது.( பறக்கிறது)

வழி



உலகெங்கும் உன் திருக்கோலம்
எம் உணர்வுகளில் திருநடனம்
வாழ்க்கைக்கு நீயொரு விரிவாக்கம்.
என்றைக்கும் விடையில்லை புதிராகும்.
படைத்தவன் என்றொருவன் அங்கிருக்க,
படிப்புகள் உன் வழி அறிய செய்தான்.
நேற்றும் நாளையும் கனக்கிருக்க,
அவசர முடிவு(களு)க்கு, வழி எங்கிருக்கும்?

எனக்கானவனே

 

ஒன்றோடு ஒன்றாய் உறவினில்
கலந்தாய்.
உயிருக்கு மேலாய் காதலைப் பொழிந்தாய்.
பாசத்திற்கு உருவேனெ நீயே திகழ்ந்தாய்.
இதழின் மழையில் சிக்கி நான் தவித்தேன்.
நனையாதயிடமில்லை உச்சி முதல் பதம் வரை.
ஒரு முறையா, இரு முறையா நான் நனைய.
கணக்கும் தவறிழைத்தன எண்ணிக்கையில்
-பிழை செய்து
ஓஓஓஓஓஓஓஓஓ.......
எண்ணிக்கையும் தவறிழைத்தன கணக்கில்-பிழை செய்து.
காதலியாய் நானிருக்க கடும் தவம் புரிந்தேனோ?காதலால் எனைக்கவர, மன்மதனை வென்றவனே.
உள்ளத்தில் எனை கலந்து
உயிரோடு இணைத்துக் கொண்டாய்.
உனக்கு நான், எனைக்கொடுத்து
உலகையே சிறை பிடித்தோம்.

Sunday, August 14, 2016

இனிய இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

விடியலோ இன்று விடிந்து விட,
செயல்களும் உடனே தொடங்கி விட,
மனத்தில் நினைவுகள் அசைப்போட, 
உற்சாகம் உடனிணைந்து அலையாட,
உருவமைத்து கொண்டாட,
உறுதி பூணுவோம் இந்நாளில்.

இனிய இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

Wednesday, August 10, 2016

மாரடைப்பு - புது தகவல்




மாரடைப்பு எதனால் வருகிறது என பல விஞ்ஞான பூர்வமான பல தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதில் மாரடைப்பு மரணங்கள், உறக்கத்தில் தான் அதிக அளவில்  ஏற்படுகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது,
மாரடைப்பு மரணம் உறக்கத்தில் ஏற்படக்கூடிய காரணங்களில் குறட்டையும் ஒன்று அறிந்தால் வியப்படைவீர்கள்,

குறட்டை எப்படி ஏற்படுகிறது
நாம் பேசுவதும், பாடுவதும், ஒலியெழுப்புவதும் குரல்நாண்கள் தான், அதற்கு துணையானது சிறு நாக்கு எனப்படும் உள்நாக்கு, குறட்டை என்பது மூக்கின் வழியாக காற்று சென்று வராமல், வாயின் வழியாக சென்று வரும்போது தொண்டையில் உள்ள குரல் நாண்கள் அதிர்வினால் குறட்டை ஓசை வெளிப்படுகிறது, அமர்ந்திருக்கும்போது மேலிருந்து தொங்கும் சதையால் ஆனா உள்நாக்கு படுத்திருக்கும் நிலைக்கேற்ப துவண்டு கிடக்கிடக்கிறது, உறக்கத்தில் இல்லாத நேரங்களில் வாய் வழியாக சுவாசிக்கும்போது தொண்டை வரட்சி அடைந்தால், தன்னிச்சை செயலாக உமிழ்நீர் சுரந்து ஈரப்படுத்தி விடுகிறது, அல்லது நீர் பானங்கள் அருந்தும் உணர்வினை ஏற்படுத்துகிறது, ஆனால்
உறக்கத்தில் உமிழ்நீருக்கான தன்னிச்சை உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை, இருப்பினும் பல்வேறு வகையில் உள்ளுணர்வு தூண்டுதலால் நமக்கு சிறு நொடி விழிப்பு ஏற்படுத்தி, படுத்திருக்கும் நிலையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தும் நேரத்தில் உமிழ்நீர் தொண்டையை  நனைத்து விடும் அல்லது நீர் அருந்த வேண்டிய நிலை ஏற்படும், பின் மீண்டும் தொடரும் உறக்கம் ,
குறட்டைக்கான முக்கிய காரணிகள்
1) படுத்து உறங்கும் நிலை,
2) விழித்திருக்கும் நேரங்களில் வாய் மூடி மூக்கின் வழி சுவாசிக்காமை

குறட்டையினால் எப்படி மாரடைப்பு ஏற்படுகிறது 
அது சரி குறட்டைக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்? உணவுக்குழாயும், மூச்சுக்குழாயும் தொண்டை பகுதியில் இணைவது உங்கள் அனைவருக்கும் தெரியும், உறக்கத்தில் துவண்டு கிடக்கிடக்கும் தசையாலான உள்நாக்கு, தசையாலான மூச்சுக்குழாயுடன் உரசுவதாலும், மூச்சுக்காற்றினாலும் ஈரப்பதம் சிறிதுசிறிதாக குறைந்து தசைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும் போது நுரையீரலுக்கு செல்லும் காற்று குறைவதுடன் இதயத்திற்கு தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இதயத்துடிப்பு அதிகமாகி மாரடைப்பாக மாறுகிறது
நாம் தான் விழிப்பு ஏற்பட்டு தொண்டையை ஈரப்படுத்திக் கொள்கிறோமே! என்கிறீர்களா?
ஆமாம்,
1) இதுபோன்று தொடரும் நிலையில் இதயம் பலவீனம் அடைந்து ஒரு நாள் மாரடைப்புக்கு வழி வகுக்கிறது
மேலும்
2) போதைப்பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பவர்கள், எதிர்பாரா விதமாக அதிக போதை பொருளை ஒருநாள் உட்கொண்டால் கூட சுயநினைவில்லா மயக்கத்தினால், தன்னை மறந்த உறக்கத்தினால், விழிப்பேற்பட வழியின்றி
3)
தவிர்க்க முடியாத நிலையில் வாழ்ந்துக் கொண்டு குறட்டை விடுகின்ற சிலரை நான் இதில் குறிப்பிடவில்லை காரணம் தங்கள் நிலையை நினைத்து அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால் அவர்களைப்பற்றி குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன்,
 வேறு சில காரணிகள்
1) வெளிக்காற்றை சிறிதும் சுவாசிக்காமல் ஏசி அறைகளில் அடைந்து கிடத்தல்,
2) முகத்தை போர்வையால் முழுமையாக மூடி உறங்குதல்
3) வெளிக்காற்று உள்வரயியலா ஒருவர் உறங்கத்தக்க அறையில் அதிக நபர்கள் உறங்குதல் போன்றவை
சிறிதுசிறிதாக இதயத்தை பலவீன படுத்துவதுடன், அதன் மூலம் பல நோய்களையும் ஏற்படுத்தும்,
கடைசியாக குறட்டையை போக்க உறங்க செல்லும்போது கோலி, அல்லது வேறு பொருளை வாயில் அடக்கிக் கொள்ள சிலர் யோசனை தெரிவிக்கலாம், அதுபோல் செய்து விடாதீர்கள் அதுவே உயிருக்கு உலை வைத்துவிட கூடும், குறட்டையை போக்க அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் கிடையாது,  சரியான நிலையில் உறங்குதல், மூச்சு பயிற்சி, மூக்கு வழியாக மட்டுமே சுவாசித்தல் மூலமே
குறட்டை விடும் நிலையிலிருந்து விடுபட முடியும்
விழிக்கும்போது தொண்டை வறண்டிருந்தால் குறட்டை விடுகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம், ஆண், பெண் பேதமின்றி பெரும்பாலோர் குறட்டை விடுபவர்களே, கணவன் மனைவியாலோ, மனைவி கணவனாலோ, வாரிசுகளாலோ, உறவு, நட்புகளாலோ கேலி கிண்டலால் நொந்தவர்கள் பலர் இருப்பர், அவர்கள் குறட்டைக்கான காரணங்களிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் நண்பர்களே!

--
உங்கள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Tuesday, August 9, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சிவசங்கர்

இராகங்கள் இழைந்தோட
மனத்தில் நிறைந்தாட
வாழ்வின் பொருளனைத்தும்
எங்கும் கலந்திருக்க,
அனுபவத்தில் அறிந்துவிடும்.
வேகத்தில் நீயிருக்க,
ஆராதிக்கும் அவனருள்
அருகிருந்து உமை நடத்த,
வாழ்த்தினோம் இன்றுமை
சிறப்பான பெயரெடுக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

புட்டின ரோஜுலு ஆசிர்வாதமுலு சிவசங்கர் அல்லுடு.




கோவிந்தாவென



மக்களிடம் நன்கு அறிமுகமான ஒரு பிரபலமானவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு
நேற்று தின---- நாளிதழ் மூலமாக ரசிகர்கள், வாசகர்கள் வாழ்த்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது, இலட்சக்கணக்கானவர்கள் வாழ்த்துகளை அனுப்பியிருந்தனர், நாளிதழின் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்த்துகள் நேற்றைய நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது,

அதில் ஒரு வாசகரின் வாழ்த்தில் ' கோவிந்தாவென வாழ்க்கை' என்ற சொற்றொடரை வாசித்ததுமே கோபத்தின் உச்சியை அடைந்தவராய், 'கோவிந்தாவென போகவேண்டுமா என் வாழ்க்கை' என  நாளிதழை நார்நாராக கிழித்தவாராய் எழுதிய வாசகரையும், வெளியிட தேர்ந்தெடுத்த ஆசிரியரையும் அர்சனை செய்தபடி நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விழா நிகழ்சசிகைகளை புறக்கணித்து சென்று விட்டார்,

இது குறித்து நமது நிருபர் அந்த வாசகரை தொடர்பு கொண்டபோது, அவர் ''என் வாழ்த்தினை புரிந்து கொள்ளாதது துரதிஸ்டமே'',
' கோவிந்தாவென வாழ்க்கை
கோபுரமாய் உயரட்டும்'
திருப்பதி ஏழுமையான் செல்வ நிலை, தினசரி திருவிழா நிலைப்போல் வாழ்க்கை அமைய வேண்டுமென வாழ்த்தியிருக்கிறேன் பல இனிய அழகிய தமிழ் சொற்கள்  
அதற்குரிய பொருளிழந்து பொழிவற்று போய் விட்டன. அதற்கு உதாரணமாக ஒரு வார்த்தை  " உல்லாசமாய் இருந்தனர் " ஒரு குழு அல்லது இருவராவது தங்கள் நினைவுகள், நிகழ்வுகளை கதைத்தப்படி, விளையாடியபடி இருப்பது தான் சரியான விளக்கம். ஆனால் இன்றைய நிலை கள்ள காதலர்களுக்கும், தீயவழிகளில் பொருள் களவாடி, அதை நிதானமின்றி செலவழித்து பிடிபடும்போது 'உல்லாசமாக இருந்தார்கள் ' என இயம்பும் நிலையாகி விட்டது.
என் வாழ்த்தை வெளியிட்டமைக்கும், சர்ச்சைக்குரிய நிலைக்கு விளக்கம் கேட்டமைக்கும் தின--- நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என வாசகரும் வாழ்த்தின் படைப்பாளியுமான தவப்புதல்வன் என்கின்ற
A.M.பத்ரி நாராயணன் பேட்டியளித்தார்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சுதன்

செல்ல குறும்பில் மனம் மகிழ்ந்தோம்.
கொஞ்சும் குரலால் செவி குளிர்ந்தோம்.
உறவுக்கு நிறையாக நீயாட, குதுகளித்தோம்.
"தாத்தா, பாட்டி"வெனும் விளிப்பினிலே 
நாங்கள் மெய் மறந்தோம். 
நலமுடன் மகிழ்வாய் நீ வளர்ந்து,
உறவுக்கு ஆனந்தத்தை வாரி வழங்க,
இனிதான உனக்கான இந்நாளில், பேரனே!
பாசமுடன் வாழ்த்தினோம் நீ சிறக்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுதன் குட்டி செல்லம்.
Our dear grandson SUDHAN,
May God bless you.

--

நல்லாசிகள் வழங்கும், தாத்தா, பாட்டி

Wednesday, August 3, 2016

வாழ்த்துகள்

எல்லை கடக்கா நட்பு
எல்லையில் நின்று ரசிக்கிது.
எல்லையில்லா அன்பு
எல்லை கடந்து நிலைக்கிறது.

நாள்தோறும் நட்பு மலர் பூக்கட்டும்.
நாடு கடந்தும் மணம் பரவட்டும்.
நட்புக்கு நன்னாள் வாழ்த்துகள் .💐