Translate

Sunday, January 31, 2016

ஸ்ரீயா, ப்ரணவ் வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

2015
ஸ்ரீயா, ப்ரணவ் Achievement Award வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

செயற்கரிய செயல் புரிந்த செல்வங்களே!
விருதுகள் பெற்றீர் பெருமையுடன்,
செய்தியைக் கேட்டறிந்தோம் செல்லிலே
விருதுகள் வந்தது விரைவாக,
மனமும் மகிழ்ந்தது மலையாக.
பாங்காய் வழி நடத்தும்(த)
பெற்றோர் பெற்றீர்.
பவ்யமாய் பல கலைகள்
கற்பீர் (திறனாக )
வென்றிடுவீர் வெற்றிக்கனிகள் –
- பார் போற்ற.
வென்றிடுவீர் பரிசுகள் -
-அனேகம்.
நலமுடனும் வளமுடனும்
வாழ்க பல்லாண்டு

வளர்க புகழுடன் (நிலையாக)   

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து - 2015 - JP வாழ்த்துக்கள்

2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து.

பயர்நத்தம் சுட்டாலு அந்தரிகி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிந்தனைகள் சிறகடிக்க
சிதறியதே வார்த்தைகள்.
காலங்கள் கானல் நீரானதே.
கானலும் வேணி(னி)லாக
அழைக்கின்றேன் புத்தாண்டை.
கற்பகமாய், காமதேனுவாய்
காணவே விளைகின்றேன். – வாழ்வில்
பொங்கி வரும் கடலலையின்
வெண்நுரையாய் என்றும் பொங்கவே!
நல் புத்தாண்டும் புலர்கவே!
புவியெல்லாம் மலர்கவே!
செம்மை செழிக்கவே!
வாழ்வாங்கு வாழ
வாழ்வும் வளர்கவே!,
வைகுந்தனின் வரம் வேண்டி

வருடினேன் அவன் பாதமே!  

ஓரமாய்



திட்டங்கள் தவிடாக,
செயல்கள் திசைமாற,
உன் போக்கு(கே) முதலாக,
பிடிமானம் தவறவிட்டு
சறுக்கியதே சாக்கென
புலம்புவதில் அர்த்தமென்ன.

ஓடும் நீரினிலே
ஓடம் நிற்பதில்லை.
ஓரத்தில் நிறுத்தி,
ஒன்பது முடிச்சிட்டால்
ஓயாத நீரதுவும்
ஒதுங்கி செல்லும் தன் வழியில்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு துருவ நட்சத்திரம்

http://www.hefty.co/paul-smith/


Friday, January 29, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

சுதா & அல்லுடு ரகுநாத் 

WISH YOU HAPPY 20th   ANNIVARSARRY

கடந்த காலம் கற்பனையாகட்டும்.
கனவுகள் (யாவும் ) நனவாகட்டும்.
நிகழ்காலம் நிஜமாகட்டும்.
நிறைசெல்வம் நிலைத்திட
நிமலனடி போற்றி.
எதிர்காலம் என்றும் ஏற்புடையதாக, (ஏற்றமுடையதாக)
எல்லையில்லா ஆனந்தம் எதிர்கொள்ள (நிலைத்திருக்க)

எம்பெருமாள் அருள் வேண்டி என் நல்லாசிகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

சரஸ்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்து.

அறுபதை அணைத்த ஆரணங்கே
ஆயுளும் ஆனந்தமும்
ஆண்டவன் அருளாவே
அன்பு அக்காவின் ஆசிகள்.

மரகத பதுமையே!, மணி விழாவில்
பதம் பதித்த மாணிக்க மணிவிளக்கே!!
பாக்கியம் பெற்ற பண்மணி சதங்கையே!!!
லட்சுமி கடாக்ஷமுடன்
மங்களம் நிறைந்த மண வாழ்வில்
நான்கெழுத்து வாரிசு சுபஹரும்
மூன்றெழுத்து மகனுறை மகளுடன்,
இரண்டெழுத்து பேத்தி தியாவின்
திகட்டா பேச்சில் திளைத்து,
அந்நிய மண்ணில் தெள்ளமுதுடன் 
மாசிலா செல்வங்களோடு
ஆனந்தமே காணவும்,
மாண்புற வாழவும்,
மலையப்பன் அருள் வேண்டி

பிரார்த்திக்கும் அன்பு சகோதரி. 


Tuesday, January 26, 2016

வாழ்த்துக்கள் தெரிவிப்போம்


இன்று ( 26/01/2016 ) செவ்வாய்கிழமை மாலை சேலம் அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில்அரிமா மாவட்டம் 324 பி2 வின் கீழுள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 149 சங்கங்கள் சேர்ந்து ‘’மெகா சேவை திட்டம்’’ என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.1 ½  கோடி மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், செயற்கை கால்கள், ஊன்றுகோல்கள், கண் கண்ணாடிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.


#விழா சிறக்கவும், அரிமா சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். குடும்ப சூழ்நிலையால் எம்மால் விழாவில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

Wednesday, January 20, 2016

தளராத மாற்றுத்திறனாளி – இன்றொரு தகவல்



இன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டு இருந்தபோது, மனது பழைய நினைவுகளில் ஒன்றுக்கு தாவிவிட்டது. சுமார் 9 வருடங்களுக்கு முன் சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் மேடுபள்ள சாலையில் கால்கள் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் சுமார் 16 வயதுள்ளவன், மூன்று சக்கர வண்டியில், ஒரு சிறிய மூட்டையை வைத்துக் கொண்டு, சிரமத்துடன் வந்துக்கொண்டு இருந்தான்.

அவனை விசாரித்தபோது, கோலமாவு விற்பனை செய்வதாக கூறினான். வருமானம் குறைவுதான். குடும்பம் ஏழ்மையில் இருப்பதால், தானும் பாரமாக இருக்க விரும்பாமல், என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டி குடும்பத்திற்கு கொடுப்பதாக கூறினான். மனம் கனத்து விட்டது. ஒரு பக்கம் அவனை நினைத்து பெருமையும் அடைந்தேன். பச்சாதாபமாக பேசி, தன்னிரக்கம் அடைய செய்யக்கூடாதென நினைத்து, பாராட்டியதுடன், விற்பனையை அதிகரிக்க சில யோசனைகளையும் தெரிவித்தேன்.

1) எத்தனையோ விழாக்களுக்கு வண்ணக் கோலப்பொடி தேவையுள்ளதால், அதை இத்துடன் சேர்த்து விற்கலாம். பாரம் ஒன்றும் அதிகமில்லை. பாக்கெட்டுகளில் உள்ளதையோ, மொத்தமாக வாங்கி, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்கலாம்.

2) கோலப்பொடி தினமும் எல்லோரும் வாங்கபோவதில்லை. எனவே மாற்று விற்பனையாக நல்ல தரமான லோக்கல் பெனாயில், சேம்பு, சோப்புத்தூள், ஆசிட் போன்றவற்றை வாங்கியோ, தயாரித்தோ விற்கலாம்.

3) ஒரு பகுதியில் (ஏரியாவில்) ஒரு நாள் கோலப்பொடி, மறுநாள் மாற்றுப் பொருட்கள் என விற்பனை செய்தால் வருமானம் கூடும்.

4) முக்கியமாக பொருட்களாக இருந்தாலும், மற்றவர்கள் விற்பதை விட நாம் தரமானதாக விற்க வேண்டும்.

5) வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு, கடைகளில் விற்பதை விட சிறிது குறைவாக விற்றால், உன்னிடம் தவறாமல் வாங்குவார்கள்.

6) பொருட்கள் மொத்தமாக வாங்கி பேக் செய்தாலும், பெனாயில், சேம்பு தயாரித்தாலும், கடைகளுக்கும் போடலாம்.

7) மிக முக்கியமானது: வருகின்ற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, வங்கியில் சேமிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை தேவைக்கு ஏற்ப தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மற்றதைதான் குடும்ப செலவு செய்ய வேண்டும். அதிலும் அனாவசிய, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். நல்ல உடல் நிலையுடையவர்களே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, குடும்பம், உடல் நிலை சீர்கெட்டு அவதிபடுகிறார்கள். அதனால் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருந்தால், தற்போதுள்ள சிரமம் கூடுதலாகாமல் இருக்குமென அந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, நீண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விட்டு, தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள சொல்லி விடைப்பெற்றேன்.

8) அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் ஸ்கூட்டர்கள் அரசு சார்பில் வழங்கப்படாததால், அதைக்குறித்து அவனுக்கு சொல்லவில்லை.

மற்றொரு சமயம் அந்த மாற்றுத்திறனாளி சிறுவன், எனை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தது, எமக்கு ஆனந்தம் அளித்தது. எதற்காக இன்று அவனைப்பற்றி இவ்வளவு என நினைக்கிறீர்களா?

#சமிப சென்னை பெருவெள்ளத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் நிலை என்னவோ? ஏனென்றால் அவனிருக்கும் குடிசை பகுதி அப்படி.

அட, போயா.. போயா.... – இன்றொரு தகவல்.


இந்த பொங்கல் திருநாளுக்கு முன், ஒரு தகவல் அல்லது புகார் என்றும் எடுத்துகொள்ளலாம். அது சம்மந்தமாக வட்டாச்சியரை (தாசில்தார்) சந்திக்க சென்றேன். தாசில்தார் அலுவலக கட்டடத்தின் கேட்டில் வழி மறித்துக்கொண்டு ஒருவர், வருவோரையெல்லாம் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டு, கட்டடத்தின் வெளியிலுள்ள அலுவலக அறைகளுக்கு துரத்திக் கொண்டு இருந்தார். அதேபோல் என்னையும் கேட்டு, இங்கேயே இருங்கள் என கூறி விட்டார்.
தாசில்தார் அறைக்கு செல்ல வேண்டுமென கேட்டதற்கு, வெளியில் வரும்போது உங்கள் கோரிக்கையை கூறுங்களேன அனுமதிக்க மறுத்து விட்டார். அமைச்சர்கள் அலுவலகங்களில் தான் இந்த கெடுபிடி என்றால், இங்கேயும் வந்துவிட்டதா இச்சீர்கேடு என நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். தாசில்தார் வெளியே வர, நான் ஐயாவென, அவர் கண்டுக்கொள்ளாமல் செல்ல, அவர் காருக்கு அருகில் மற்றொருவருடன் நின்று பேசும் சமயத்தில், எனது கோரிக்கையை கூற ஆரம்பிக்கும் முன்பாகவே, கணினியும் தோற்கும் வேகத்தில், அட, போயா.. போயா.... என்கிட்டே கிடையாது என கூறியபடியே சென்றுவிட்டார்.
பல அலுவலக அரசு பணியாளர்கள் கூடியிருந்த வெளி இடத்தில் நானொரு ஒரு குடிமகன், ஒரு மாற்றுத்திறனாளி என்ற நினைவுக்கூட தோன்றாமல்,  அத்தாசில்தார் நடந்துக் கொண்ட அவமரியாதையான அச்செயலால், ஒரு நிமிடம்  திகைத்து விட்டேன். அச்சூழ்நிலையில் அங்கிருந்த ஒரு அரசு பணியாளர், மனம் வெதும்பி, என்ன மனுஷன் அவர் என கூறிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தொடர்புக் கொள்ளுங்கள் என கூறி, தொலைப்பேசி எண் ஒன்று கொடுத்தார்.

அங்கு நடந்த கூத்தை என்ன சொல்ல? என் அழைப்பை ஏற்றவர், எடுத்த எடுப்பிலேயே யாரிடம் பேசுகிறீர்கள் தெரியுமாவென கேட்க, ( அன்பே வா திரைப்படத்தில், எம்.ஜி.யார் போனில் நாகேஷிடம் நான் யார் தெரியுமா என கேட்க, என்னய்யா போனில் படமா காட்டுறாங்க என நாகேஷ் சொல்வதை நினைத்துக் கொண்டு)  நானும் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேச வேண்டுமென கூற, அது நானில்லை என்றபடி, நான் அடுத்தது என்ன கூற அல்லது கேட்கிறேன் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் இணைப்பை துண்டித்து விட்டார். இவர்களை போன்றவர்களை என்வென்று கூற?  

பாவப்பட்ட....



பரந்த மரத்தில்
கிளையொன்று முறிய
அறியாமல் அவனும்
உடந்தையாய் ஆனான்.

உடைந்த கிளையோ
ஒன்று கூடவில்லை.
துளிரும் அவ்விடத்தில்
முளைக்கவும் இல்லை.

திசைகளோ மாறி
இடிகளோ தாக்க,
கருகிப்போனது
உறவின் நினைவு.

பாசமும் பந்தமும்
பாழ்பட்டு போக,
இருண்டு கிடக்குது
ஒளிக்கதிர்கள் அணைந்து.

அவன் மனது ஏனோ
வதைப்படுகிறது இன்று.
நிலையில்லா வாழ்வில்
அவன் செயல் குறித்து.

நல்லதை நினைத்தே
நாடினான் அன்று.
செயல்பட்ட விதமோ
சிறுமையை தந்ததே.

பார்க்கும் நேரத்தில்
குறுகிப் போகிறான்.
பாவப்பட்ட பிறப்பாய்

பரிதவித்து போகிறான்.

அஞ்சலி



அருமை அன்னையின் மறைவால்
அல்லல் படும் அன்பரை தோளணைத்து
ஆறுதல் கூறயியலாமல்,
வார்த்தைகள் சிலக் கொண்டு 
வருடிவிட நினைத்தேனே.
நினைவுகள் அலைபாய
காயம் பட்ட உம் மனத்தைத்தான்.

காலங்கள் கரைந்தோடும்,
காயங்கள் வடுக்களாகும்.
அவர் ஆத்மா சாந்தியடைந்து,
ஆசிகள் உமையடையும்.
ஆண்டவர் அருளிளாலே.
உம் வலிகளும் மெல்ல குறையும்.


நண்பரே, தங்கள் தாயார் மறைவினால் துயருற்றிருக்கும் உமக்கும், அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  

Monday, January 18, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ravi Sarangan 07/2011

Ravi Sarangan

ஸ்ரீ ராம அடியான் ரவிசாரங்கன் அவர்களை, அவர் இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

நீ அறியா உன்னழகை
நான் கண்டு கொண்டேன்.
*உருவமில்லா உன் அழகு*
ஒளி உமிழ கண்டேன்.
நட்பு என்ற வழியிலது
பாசம் பொழிவதை உணர்ந்தேன்.
நேசித்த உம் இதயமதை
வந்தணைப்பதை அறிந்தேன்.
என்றென்றும் வாழ்வுமக்கு
வசந்தமாய் கழிந்திடவே,
ஆண்டவனின் பார்வையால்
அவனருளை பெறுவீரென
மனந் திறந்து வாழ்த்தினோம்
அடியான் ரவிசாரங்கரே....
உம் இனிய இப்பிறந்த நன்னாளிலே.


*உருவமில்லா உன் அழகு*  என குறிக்கப்பட்டதற்கு காரணம், அச்சமயம் (2011ல் ) முகநூலில் அவர் உருவ புகைப்படத்தை வெளியிடாததே காரணம்.



இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Anandaradje Auguste & Niranjana Anand

Anandaradje Auguste 
Wish You Happy Anniversary to Ananth & Niranjana Anand

ஆனந்தத் திருக்கோலம்
ஆறாண்டுகள் கழிந்தாலும்
அலையலையாய் நினைவுகள் – வற்றாத 
ஆறாய் மகிழ்வுகள் பெருக்கெடுக்க,
அனைத்து நலன்களும்
அளவிலா வளங்களும்
ஆண்டவர் அருளாலே
ஆசிராய் நிலைத்திருக்க,
அழகான குடும்பமுடன் 
அருமையான வாழ்வுத் தொடர,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
பாசமுடன் உம் இருவரையும்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ஆனந்த், நிரஞ்சனா தம்பதியரே.

இவண்,
அப்பா, அம்மா

சோபி.

Sunday, January 17, 2016

தனியாய் - குறுங்கதைகள்



வானம் பார்த்த பூமி
வரண்ட நிலம்
பனையும் பசுவும்
துணையுடனிருக்க,
தலைச்சுமை சுமந்து
மனச்சுமையுடன்
தளர்நடையாய்
 அவள்  (மட்டும்)

"தனியாய் "

====================

தன்னிச்சையாய்
திறந்து கொண்டது
வாய்.
நீ
கேக்
ஊட்டி விடுவாயென.

"உறக்கத்தில்"

===============================


# மேலே உள்ள ஓவியத்தை வரைந்ததுடன், இவ்வலைத்தளத்தில் அனுமதி அளித்த நண்பர் மதுரை திரு.  Radha Krishnan,  அவர்களுக்கு நன்றி.

Saturday, January 16, 2016

மனோகரன் அண்ணார் பிறந்தநாளுக்கு - JP வாழ்த்துக்கள்



ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்தம் நிலைக்கட்டும்.
அறுபதைக் கடந்த பின்னும்
அஷ்ட ஐஸ்வரியம் பெருகட்டும்.
எழுபதை தொட்டாலும்
ஏற்றமே இருக்கட்டும்.
மனம் போல் மனைவியுடன்
மங்களமாக ( வாழவும் )
மாளா ஆண்டுக(ளாய்)ள் மலர (திகழ)
மகேஷ(ச)னின் அருளுடன்
பகிர்ந்தேன் உமக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை.


*அடைப்புக்குறிக்குள் சிறிய திருத்தங்கள்.

சந்திராவதி அக்காவின் பிறந்தநாளுக்கு - JP கவிதைகள்



அக்கா Happy Birthday
சிங்காரத் தோப்பில்
சிறகடித்துப் பறக்கும்
சிங்கார சிட்டாய்,
சீரும் சிறப்பும்
சிகரமாய் தொட்ட,
சந்திராவதி சகோதரியே...
பற்பல யோகங்களும் பரிந்துயு(ரைக்கு)ம்
பார் போற்ற பல்லாண்டு, பல்லாண்டு,
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்,
அன்பருடன் அணைத்தே வாழ,
ஆண்டவரின் அருள் வேண்டி பிரார்த்தனைகள்.


ஸ்ரீ வாசவி பிரியா – 36ம் ஆண்டு பிறந்தநாள் - JP கவிதைகள்



பிரியமான பிரியாவே,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பாங்கியரின் பண்புகள்,*
உன் உலாவில்* பயணிக்க.
திறந்து வைத்த பெட்டகமாய், உன்
திறமைகள் பரிணமிக்க,
இருகாலங்களு(ளிலு)ம்
இன்பமும் இறையருளும் நிலைத்திட,
இன்ப விநாயகர் அருளுடனே, எனது
இனிய நல்லாசிகள்.

தன்வர்ஷ் பணியில் சேர்ந்ததற்கு - JP வாழ்த்துக்கள்


வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
செய்யும் தொழிலே தெய்வம்.
சோர்வின்றி செயலாற்றி,
செம்மையாய் பணிப்புரிந்து
செழிப்படைய,
செந்தில்நாதன் நலன் நல்க.

தன்வர்ஷ் உனக்கு நல்லாசிகள்.

Wednesday, January 13, 2016

இனிய பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்

WISH U HAPPY PONGAL TO DEAR RELATIVES AND ALL FRIENDS.
హ్యాపీ సంక్రాంతి. – Happy sankarandhi
விவசாயி வேர்த்துளியில்
பொங்கிய பொங்கலிது.
கடுமையான உழைப்பினை
போற்றும் பொங்கலிது.
ஒவ்வொரு வேர்த்துளியும்
அமுதமான உயிர்த்துளி.
வாழ்வுக்கு சான்றாக
உழைப்புகள் பலவுண்டு.
உயிர் நிலைக்க காரணியாய்
உணவும் இடம் பிடிக்கும்.
புவிமக்கள் பசியடங்க
விதையிட்ட விவசாயி.
அவர் உழைப்புக்கு மரியாதை
இன்று நாம் செய்திடுவோம்.
சுவையான பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள் மக்களே!