Translate

Showing posts with label மார்கழி கோலம். Show all posts
Showing posts with label மார்கழி கோலம். Show all posts

Tuesday, December 26, 2017

மார்கழி கோலம்




25\12\2017

பூவையரிடும் பூக்கோலம் 

புலரும் நேரத்தில் புதுக்கோலம்
மலரும் மாலையாய் மாக்கோலம்.
மாவினாலிட்ட மலர் கோலம்.

புவிக்கு அழகு செய்த இக்கோலம்
பூச்சூடி பார்த்திட்ட இவ்விரல் கோலம்.
விழிகளுக்கு விருந்தாய் பெருங்கோலம்
விரிந்து எங்கும் கிடந்தது பெருமாக்கோலம் 

#தையல்களிட்ட கோலம்
மனத்தில் தைத்திட்ட கோலம்.
தையலாய் இணைந்திட்ட கோலம்
தையற்கலைஞராய் மாற்றிய கோலம்.



காலத்தினால் மாறியது மாக்கோலம்
கல்மாவாய் மாறியது இக்கோலம்.
உயிர்களுக்கு உணவாய் மாக்கோலம்
உணர்வற்று போனதால் கல்மாக்கோலம்

ஆக்கம்:- 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

#தையல் = பெண்