Translate

Friday, August 29, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பிரிய சினேகன்




பிரிய சினேகன்

பிரியம் என்பது பிரிக்க முடியாததாய்
சினேகன் என்பதோ சிலாகிக்கக் கூடியதாய்
இரண்டும்  இணைந்த பிரிய சினேகனே
வாழ்க நலமும் மகிழ்வும் இணைந்தேயென
இப்பிறந்த நன்னாளில் வாழ்த்துனோம் உமை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். .

போதாத பண்டிகை?





வீடுகளில் விழா கோலம்
விதவிதமாய் அலங்கரித்து 
கொண்டாடினர் மகிழ்வாக  
அகிலத்தை ஆளுகின்ற 
அன்னையவள் அகிலாண்டீஸ்வரி 
அகம் மகிழ்ந்து அருள் பாலிக்க,
அலங்கரித்தனர் .நிறைவாக.
ஆண்டவருக்கு பட்சணங்கள் 
அர்பணித்தனர் முன் வைத்து.
அள்ளித் தினித்தனர் (உண்டனர்)
அதன் சுவையை ரசித்தபடி.

வீட்டிலிருந்த பெண்களோ! 
புலர்ந்த வேளையிலே 
புத்தாடை அணிந்துக் கொண்டு, 
புதுப்பொன் பூட்டிக் கொண்டு 
புத்தொளியாய் முகம் மலர 
புதுப்பெண்ணாய் நடைப் பயில,
ஆனந்தமாய் அந்நாளோ 
அருமையாய் முடிந்தது.

பார்த்த இவன் கண்களோ 
புத்தாடை தனக்கில்லையே 
பாவமாய் தனை நினைத்து 
பரிதாபம் பட்டான் ஏக்கமுடன்.

ஆனதின் மறுநாளோ 
கூடினர் பெண்டீரே.
கூத்தாடினர் பெருமைகளை 
தொடர்பான நிகழ்வைத்தான்.
ஆஹா... என்றனர்,
ஆனந்தப்பட்டனர்,
அருமை என்றனர் - அது 
அன்றாட நிகழ்வுதான்.

ஆனாலும் வியர்த்தது 
ஆடவனொருவன் மூக்கிலே.
அல்லாடினான் அவனுமே 
ஆணுக்கோர் விழா 
தனியிலை என்றே. 
அண்டினான் சகலரை
தன் இனத்திற்கென்று 
கொண்டாடிட முடிவெடுத்து 
.

ஆலாபனைத் தொடங்கியது 
ஆலோசனையாய் அது.
அப்படியே செய்வோமென 
அதிரடியாய் முடித்தனர்.
அட்டகாசம் என்றனர் 
அனுபவம் ஏதுமின்றி.

அத்தானென வந்தாள் 
அழகான சட்டை உமக்கென
அளித்தாளே  உரசியபடி.
அன்பளிப்பாய் கருதிக் கொண்டு .
அருமையான மனையாளன்றோ
ஆனந்தத்தில் மூழ்கியவனாய்.. 
அப்பாவியாய் அவனும் தான் 
அவளிடம் வினவினானே 
இன்றெதற்கு எனக்கென்று?

ஆனந்தமாய் முகம் மலர 
அவளும் தான் உரைத்தாளே,
பத்து இலட்ச வைர நகைக்கு 
அன்பளிப்பு இதுவென்று.
அவளின்றி ஆவதில்லை 
அதிலும் துணையின்றி 
அடியிட்டுக் காட்டினார் 
அனுபவப்பட்ட பெரியவர்.

அலசிய பெண்டீரோ 
அன்பளிப்பாய் நாங்களே 
அள்ளிக் கொடுத்தனர் பெற்றோரே
ஆசை வேறோ தனியாக.

அனுதினமும் உமக்காக 
அவதிபடுவது நாங்களே!
ஆராதிக்க வேண்டாமோ 
அதிகமாய் மேலும்தான்.

அதிக உடுப்புகளோ 
அழகை இரசிக்கும் உமக்காக.  
அனுதினமா பொன்நகைகள் 
அத்தியாய் ஓரிரண்டு.

வருவாயோ உம்மிடமே 
வாங்கி தருவதாய் நீயிருக்க,
தடுப்பதாரோ  உனை - நீ 
புது உடுப்பு வாங்கிக் கொள்ள.

புத்தாடை அணிந்தபப்டி 
ஊர்வலமாய் என்னுடனே 
வந்தாலே மகிழ்ச்சித்தான் 
வருவாயோ தினமும் தான்.

ஆரம்பித்தனர் வரிசையாக 
ஆலவட்டமாய் தலை சுழல.
அகன்றால் போதுமென 
அவசரமாய் முடிச்சிட்டார் 
அமைதியாய் வாய் மூடி.

ஆட்டு உரலிலும், 
அம்மிக் கல்லிலும் 
அரைப்படும் நிலையில் 
பண்டிகைகளோ 
தினமும் உனக்கிருக்க,
மேலுமொன்று புதிதாய் 
தேவையா உனக்கு?
தனக்குள்ளே முனுமுனுத்தான் 
வேலையில்லா கிழவனிவன்.

  

Thursday, August 28, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - கவிஞர் வித்யாசாகர் குவைத்





கவிஞர் வித்யாசாகர் குவைத்

வாழ்கவே பல்லாண்டு 
இணையோடு ஒன்றிணைந்து. 
நலனோடு பெருவாழ்வும், 
இறையவன் அருளோடு 
மகிழ்வோடு குலம் செழிக்க 
மனம் நிறை வாழ்த்திது.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Wednesday, August 27, 2014

நல்வாழ்த்துக்கள் - Siva Shankar S



Siva Shankar S

பொருளோடு பொன்னும் 
நலனோடு வாழ்வும் 
மகிழ்வோடு உறவும் 
துணையாய் அருளும் 
நீக்கமற இருக்க,
பேரும் புகழுடன் 
தொழிலும் சிறக்க,
அன்புடன் வாழ்த்தினோம் 
அருமையாய் வளர.


ஆசிர்வாதங்கள்,
மாமா, அத்தை.

#எங்கள் சகோதரி மகன் சிவசங்கர், அவரது தொழிலை விரிவு செய்துள்ளமைக்காக.  

விடியலில் - ஹைக்கூ.

விடியலில் - ஹைக்கூ.

நீ!
எப்படியோ.
அப்படியே
நான். 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - கவிஞர் செல்லம்மா வித்யாசாகர்



எட்டட்டாய்
கணக்கிட்டாய்.
தகவலாக்கி
சுவையிட்டாய்.
வாழ்த்திட்டு
மகிழ்வித்தாய்.
இணைத்திட்டே
வாய்ப்பளித்தாய்.
 எங்களையும்
இணையாக.


வாழ்ந்திடவே
இணையொன்றாய்,
அருள வேண்டினோம்
இறைவனை தாள் பணிந்து.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் செல்லம்மா வித்யாசாகர்

https://www.facebook.com/photo.php?fbid=790625747668968&set=a.174529192611963.49915.100001646505553&type=1&theater&notif_t=photo_comment_tagged

Tuesday, August 26, 2014

கப்பலாய்



கடலளவு நினைவு 
காற்றிலே ஆட,
கரையும் நாளுடன் 
கலந்தே செல்ல,
காத்திருப்பெல்லாம் 
கலைந்து போக,
கவிழ்ந்த இருளிலும் - நான்  
காதலில் உருக,
கலக்கினாயோ நீ 
கனவிலும் வந்து

அல்லலில் மனம்



அவமதித்த செயல் 
அடிப்பட்ட காயம்.
ஆறாத புண்.
அழியா நினைவு.
.
அழகான நீ
ஆழ்த்தும் போதை.
அறியா மயக்கம்.
அணைக்கிறது தினம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Ramanathan Abirami





Ramanathan Abirami


ஒன்றோடு ஒன்றிணைந்து
தொட்டதே வயது
இன்று அறுபத்தேழில்.
நாடும் மனங்களும்
வாழ்த்தும் உள்ளங்களும்
இறை தந்த உறவாய்
சூழ்ந்துமைப் போற்ற
வாழ்கவென வாழ்த்தினோம்
நலமாய் மகிழ்வாய்
வாழ்க்கையைக் கடக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Monday, August 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Puthurajan Sritharan



Puthurajan Sritharan 

வைத்த அடியோ அறுபது.
வைத்தீஸ்வரன் அருளால்
வையகம் புகழ
வைப்பீர் அடிகளை நூறையும் தாண்டி.

நலனும் மகிழ்வும் இனிதே தொடர
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

அந்தரத்திலோர் நிமிடம்



அகால நேரத்திலும் 
அலைந்தது கண்கள் 
அளவுலாவியது நட்புடன் 
ஆனந்தமாய் முகநூளில். 
அயர்ந்த விழிகளால் 
அறுந்தது தொடர்பு.

ஆழ்ந்த உறக்கம் 
ஆட்கொண்ட பொழுதில் 
அய்யோ! அம்மா!!
ஆடுகிறது வீடு 
அலறியது குரல் 
அசைந்த புவியால்.

அதிர்ச்சியில் மனம் 
அலையலையாய் எண்ணங்கள் .
அலைந்தது பிரிந்து.
அழிவைத் தவிர்த்து 
ஆண்டவனே காத்தருளென 
அண்டியதோர் நினைவு

வீட்டை விட்டு 
வெளியேறி செல்ல 
வேண்டிய நிலையில் 
அல்லாடியபடி 
குடும்பமோ நிற்க,

எண்ணங்களில் ஒன்று 
அங்குமிங்கும் விரைந்தது தேடி..
காதொலிக் கருவியும்,
மூக்குக் கண்ணாடியும்,
கால்சராயுமென,
அத்துடன் சேர்த்து 
குளிருமே வெளியே 
குல்லா தேடியது 
அரக்கப்பரக்க.

தள்ளுவன்டியோ 
தயாராய் இருக்க,
அமரவே நானும் 
தள்ளாடியபடி நகர,
அடங்கியது புவி 
ஆட்டத்தை நிறுத்தி.

அமைதி நிலையை 
அடையா குடும்பம், 
நிகழ்வுகளின் கனம்  
நெஞ்சிலே நிலைக்க,
மௌனமாய் கலைந்தது 
மெதுவாய் நகர்ந்து.

அந்நியப்பட்டது உறக்கம் 
அலசியது எண்ணங்கள் 
ஆரம்பத்திலிருந்து.
அதற்கிடையே நேரமோ விரைய 
அரைக்குறையாய் உணர்வுகள்  
செயலிழக்கும் பொழுதில்,
அளவிலா வெளிச்சத்தை.  
அள்ளித் தெளித்தான் பகலவன்.
அகன்றது விழியிமைகள் 
அகலா நினைவுடன் 


#அமெரிக்காவில் கலிபோர்னியா நாப்பா என்னுமிடத்தில் 2014 ஆகஸ்ட் 24ம் தேதி  ஞாயிறு கிழமை விடியற்காலை 3.20 மணிக்கு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுபடி 6.1 புள்ளியும், 11 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. அங்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாங்களும் அதிர்வை உணர்ந்து அலறி புடைத்து எழுந்தோம். சிறிது நேரம் நீடித்தது. நன்கு உணரமுடிந்தது. 

Sunday, August 24, 2014

பூமி அதிர்ச்சி. - இன்றொரு தகவல்



அமெரிக்காவில் கலிபோர்னியா நாபா என்னுமிடத்தில் ஞாயிறு விடியற்காலை 3.10 மணிக்கு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுபடி 6.1 புள்ளியும், 11 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாங்களும் அதிர்வை உணர்ந்து அலறி புடித்து எழுந்தோம். சிறிது நேரம் நீடித்தது. நன்கு உணரமுடிந்தது.

காலையில் தொலைக்காட்சி செய்தி மூலம் பாதிப்புகளை அறிய முடிந்தது. 90க்கு மேலானோர் காயங்களும், முவ்வர் பலத்த காயமும் அடைந்ததுடன், வீடுகள், சாலைகள் பழுதடைந்துள்ளதை கண்டோம். மனம் வேதனையடைந்தது. 

. 25 ஆண்டுகளுக்கு பின் ஏற்ப்பட்ட  பெரிய புவியதிர்ச்சி. மீண்டும் ஒரு வாரத்திற்குள் புவியதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு என்பதும் செய்தி. இனியும் பாதிப்பு வராமலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து, நிவாரணம் அடையவும் இறைவனை பிரார்த்தித்தோம். நண்பர்களையும் உறவுகளையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, August 23, 2014

அ , ஆ, இ, ஈ.....



அவனோ ஆட்டுவிக்க,
ஆடுவதற்கு நானிருக்க,
இடையிலே நீ யாரோ,
ஈந்துவிட சொல்வதற்கு?  

எத்தனாய் உள்நுழைந்து 
ஏய்த்திட பார்க்கிறாயோ?
ஐயனின்றி, நான் 
உமைத் தொடர ,

ஊக்கம் அளிக்கும்  
ஒத்திடமாக வார்த்தைகள் 
ஓதும் உன் செயலுக்கு 
ஔதடமென கொள்வதோ? 
அஃதை யான் ஏற்பதோ?

#முன்னோக்கி குதித்து விட்டது  எ,ஏ, ஐ.

சரியாகா மனம்.



சந்தித்தது 
சரியானது.
சலங்கையின் 
சல்லாபம் 
சலிப்பில்லா 
சங்கீதமானது.

சந்தோசமாய் 
சங்கமமானது.
சரசமாடியது 
சர்வரோக நிவாரணியாய்.

சரித்திரமுமில்லை,
சருகுமில்லை,
சாதாரணமானது.
சந்தன சாந்திட்டு 
சகலவிடத்திலும் 
சஞ்சரித்தது.

சரியில்லாதது 
சங்கிலியிட்டு 
சந்தியிலிருத்தி 
சரித்திட முயன்றது.

சங்கடமானது .  
சம்மந்தமில்லா 
சாட்சிகளாலும் 
சகலமான 
சச்சரவுகளாலும்                  
சமரசமின்றி, 
சமாதானமுமின்றி,
சட்டரங்கமாய் 
சலசலத்தது.


சஞ்சலத்திலே
சரியாகா மனம்
சனி போனதும் 
சந்திக்காலத்தில் 
சாந்தமடைந்து 
சகஜமானது. 
. .  
.

Friday, August 22, 2014

மூழ்காதீர்... இன்றொரு தகவல்




இப்பொழுது மிக முக்கிய பொழுது போக்கு பாதையாக  கணினி வழி முகநூல் (Facebook ) அல்லல் பட்டு வருகிறது. சமிப காலமாக, தினந்தோறும் தங்கள் புகைப்படங்களை விதவிதமாக பதிவிட வேண்டுமென்ற ஆவல் அதிகரித்து வருகிறது.

ஒரு வாலிபன், தான் இரயில் வரும் நேரத்தில் திரிலிங்கான  தொடர்காட்சிகளையும், புகைப்படங்களையும் எடுத்து முகநூளில் வெளியிட ஆவல் கொண்டு, நண்பர்களிடம் புகைப்பட கருவியை கொடுத்து, இப்படியும் அப்படியுமாக போஸ் கொடுத்து, எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரயில் அருகில் வந்து விட்டதையும் கவனிக்க தவறியதால், இரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். அக்காட்சியும் புகைப்படத்தில் பதிந்திருந்தது.

மற்றொரு வலிபனுக்கோ, தான் தூக்கில் தொங்குவது போல, தன்னைத்தானே தொடர்காட்சி எடுத்துக் கொள்ள நினைத்து, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தன் அறையில், அறையையும் பூட்டி விட்டு,  கைப்பேசியை இயக்கி பொருத்தி விட்டு, தூக்கில் தொங்குவதுபோல் பாவனை கொடுக்க முயல, தவறுதலாகி, முடிச்சவிழ்க இயலாமல் உயிரிழந்தான். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்கள், தங்களிடமிருந்த சாவியால் வீட்டுக்கதவை திறந்து உள்ளே வந்து மகன் அறைக்கதவை திறக்க முடியாமல் உடைக்க, தூக்கில் தொங்கி இறந்திருப்பதும், கைப்பேசியில் காட்சிகள் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

அடுத்தது காதல் கொலை. பெங்களூரு வாலிபன் அங்கேயே கம்பனியில் நல்ல வேளையில் இருந்தான். அவனுக்கு முகநூளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் நண்பியானாள். அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தும்,  சாட்டில் பேசியதிலும் அவளிடம் மயங்கி காதலிக்க தொடங்கி விட்டான். அவன் சந்திக்க விரும்பிய போதெல்லாம், ஏதோ ஒரு காரணம் கூறி தவிர்க்க, சிறிது காலம்  இப்படியே செல்ல, ஒரு வழியாய் விலாசம் அறிந்துக் கொண்டு, விரைந்தான் அவளைக் காண. கண்டதும் அதிர்ந்தான். காரணம் அவள் 40 வயதிற்கு மேலான பெண்மணி. இவனோ 24 வயது காளை.  வந்ததே கோபம் அவனுக்கு, தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டையிட்டவன். கோபம் தாளாமல், அங்கிருந்த கத்தியை எடுத்து.... அவ்வளவுதான் அவள் கதையை முடித்து விட்டான். காரணம் அறியாமல் தடுமாறிய காவல்துறை, கணினியையும், கணிநித்தகவல்களையும் பொறுக்கியபோது தெரிந்தது விவகாரம்.

செய்தி: நாளிதழ்கள்        

ஹர்ஷினி & தக்ஷிதாவுக்கு வாழ்த்துக்கள்

பள்ளி விழாவில் பாரத நாட்டியம் ஆடிய, பரணிதரன் - சங்கீதா குழந்தைகள் (எங்கள் பேத்திகள்) ஹர்ஷினி & தக்ஷிதாவுக்கு வாழ்த்துக்கள்.

சலங்கைகள் சலசலக்க,
ஜாதிகளோ சரசமாட,
ஆலாபனையோ இணையூட,,
அரங்கமே ஆழந்திருக்க,
மெருகேறிய பாவனைகளுடன்,
சுழலட்டும் கால்கள் சக்கரமாய்.
சகலமும் பயின்று நீங்கள்  
வல்லமையுடன் திகழ,
சாஸ்திரங்கள் அங்கு 
சந்தோசமாய் தலையசைக்க,
சர்வகாலமும் நிலைக்கும்படி,
சாகசங்களாய் பதியட்டும்.

ஆசிர்வாதங்கள்  ஹர்ஷினி & தக்ஷிதா

Thursday, August 21, 2014

நல்வாழ்த்துக்கள்

எழுத்துகளை கூட்டுங்கள்
இனிதான தமிழ் வடிவில்.
வாழ்வும் அமையட்டும் இனிமையாக,
தமிழ் போலே.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.

ஏக்கத்திலே! - குறுங்கவிதைகள்


ஏனோ?


அறியாத சொல் தேடி 
அலுத்து போனேன் 
அறிந்த சொல்லை, - ஏனோ 
மறந்து போனேன்.

இல்லா உறவைத் 
தேடித் போனேன்.
இருக்கும் உறவை, - ஏனோ 
உதறிப் போனேன்.




இல்லவேயில்லை...

இதயம் ஒரு நாள் 
இயங்கவே மறுநாள் 
மறந்தால் அந்நாள் 
காலடி மண்ணும் 
சொந்தமது இல்லை.


ஏக்கத்திலே!

இரவிலோ ஓர் நினைவு,
கனவிலோ புது கனவு,
விடிந்ததும் பல நினைவு.
ஏந்தி வருவதோ அம்மனம் 
ஏனிந்த (ஏ)மாற்றங்கள்?

#அம்மனம் = அந்த+மனம் 

துளிப்பா - - ஹைக்கூ....





ஆனந்தமோ ஆர்பரிக்கும்,
சோகமோ பிழிந்தெடுக்கும்,
நேரமதில் இரண்டிலுமே,
விழிநீரோ பெருக்கெடுக்கும்.






காசுக்காக சொல்லவில்லை - குறுங்கவிதை





என்னவளே!
என் கரம் பிடித்தவளே!!
 புன்னகையே
பெரிதாய் இருக்க,
பொன்நகை எதற்கு?
கள்வனவன்
களவாடி விட்டால்!
உன் புன்னகையும்
தொலைந்து விடும்
என்பதால் தான்.

மாற்று அனுபவங்கள் - இன்றொரு தகவல்.



"செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை"
1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த
செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.
2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?
3. அவசியம் 'நன்றி' தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும்
தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது.
"Manners and etiquettes are not only for Star Hotels. Applies to Cobblers too"
இது போன்ற மனித தன்மை மிக்க விஷயங்களை SHARE செய்வதில் தவறேதும் இல்லையே !!!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
----------------------------------------------------------------------------------------------------



இதில் எமக்கு சில மாற்று அனுபவங்களும் உண்டு. இருப்பினும் தொழில் புரிபவரும், வாடிக்கையாளர்களும் தொழிலுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

சில அனுபவங்களில் ஒன்று: ஒருமுறை எனது மகளின் துண்டித்துபோன  செருப்பை சரிசெய்வதற்காக சென்றிருந்தேன். செருப்பை வாங்கி பார்த்து விட்டு, இதை சரி செய்யமுடியாது, தூக்கிஎறிந்து விட்டு, புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ஐயா, இதைப்பாருங்கள், இதுவும் புது செருப்புதான் என்றேன். எதுவாகிருந்தாலும், இதுபோன்ற செருப்பை சரியாக்க முடியாது என்றார். 

அவரிடம் இன்னும் பணிவாக, உங்கள் ஊசியையும், நூலையும் என்னிடம் கொஞ்சம் தாருங்கள். நான் சரிசெய்து கொள்கிறேன், உங்களுக்குரிய கூலியையும் கொடுத்து விடுகிறேன் என்றதற்கு, முடியாது வேறிடம் சென்று சரி செய்துக் கொள்ளுங்கள் என்று விடாபிடியாக மறுத்தார்.

ஐயா, ஒவ்வொரு முறையும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறேன். உங்களுக்கு கொடுப்பதற்காக, ஒரு உடுப்பை வீட்டில் எடுத்து வைத்திருந்தும் மறந்து விடுகிறேன் எடுத்து வர என கூறி விட்டு, ஒரு பத்து ரூபாய் கொடுத்தேன், எதற்கென கேட்டார். உங்கள் பணிகளுக்கு இடையிலும் என்னிடம் விடாபிடியாக மறுத்து பேசியதற்கு என கூறி கொடுத்தேன். பெற்றுக் கொண்டவர், செருப்பை தைக்க முடியாததால் தான் இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றார். 

நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் சொல்வதை  நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே என்றபடி, மீண்டும் நூலையும் கேட்டபின் கொடுத்தார்.  நான் சரிசெய்து காட்டி, இப்படிதான் உங்களையே சரிசெய்ய சொன்னேன், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற எனது சொல்லுக்கு, இது நிலைக்காது. நாங்கள் இதுபோல் தைக்க மாட்டோமென்று மறுத்தாரே தவிர, அவருக்கு ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இணைப்புக் கொடுத்து, முடிப்பிட வேண்டிய சிறிய வேலை. அவர்களுக்கு  ஒரு நிமிட பணி, எனக்கு இரு நிமிடம் ஆயிற்று. 

அப்பாடா வேறு இடம் அலையாமல், ஒரு வழியாய் இங்கேயே வேலை முடிந்ததே என்ற நினைவுடன் வீ டு திரும்பியவன், சில நாட்களில் அவருக்கென வைத்திருந்த உடையை எடுத்து சென்று கொடுத்து விட்டேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - மருமகன் கமலேஷ் & பேத்தி சகானா

இறை தந்த உறவு இனிக்க,
பூத்த மலரிது மணக்க,
நட்களிது சுவைக்க,
மனங்களுமது மகிழ,
நலன்களோ நிலைக்க,
வளங்களோ பெருக,
மகிழ்வுகள் பொங்க,
வாழ்த்தினோம் உம் இருவரை,
பிறந்தநாளுக்கு என்றே.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
மருமகன் கமலேஷ் & பேத்தி ச(ஸ/ஷ)கானா.

May all your dreams today and tomorrow come true. Happy birthday, Grand daughter
 SAHANA nd
 Alludu Kamalesh

Wednesday, August 20, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சிவசங்கர் & பத்மஸ்ரீ.

கண்களோ மின்ன,
புன்னகையோ துள்ள,
மீண்டும்
புரட்டிப் பார்க்க ,
விரும்பியதோ?

''ஆரம்பத்திலிருந்து''

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
சிவசங்கர் &பத்மஸ்ரீ.


அன்புடன் ஆசிகள்,
மாமா & அத்தை.


Tuesday, August 19, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - புவனா ரமேஷ்


புருவங்கள் உயர,
பூவிழி நோக்க,
புதுமலராய் புவிதனில் 
பூத்த நாளிது.

புலரும் பொழுதுகள் 
புன்னகையுடன் மலரட்டும்.
புனையும் செயலெல்லாம் 
புதுமையை சொல்லட்டும்.

பூத்துக் குலுங்கட்டும் மகிழ்வுகள் 
பூவானமாய் சொரியட்டும் வாழ்த்துகள்.
புவனா, உன் 
பூங்கரம் பிடித்த ரமேஷுடன் சேர்ந்து 
நாங்களும் வாழ்த்தினோம்.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்   

இனிமையான தருணங்கள். -இன்றொரு தகவல்



வாழ்வின் முக்கியாமான தருணங்களை நிலைத்து நிற்க, பழங்காலங்களில் ஓவியங்களாய் வரைந்தார்கள், சிலைகளாய் செதுக்கினார்கள், அமைத்தார்கள். காலம் செல்லச்செல்ல புதுபுது கண்டுபிடிப்புகளினால் புகைப்பட வளர்ச்சி மிக பிரம்மாண்டமானதாக வளர்ந்துள்ளது, வளர்ந்தும் வருகிறது. இனிய தருணங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியது புகைப்படங்கள் தான்.

கேமரா என்னும் புகைப்பட சாதனம் சாதரணமான மக்கள் பயன்படுத்தயிலா வகையில் இருந்தது. புகைப்படம் எடுப்பதும், எடுத்ததை அச்சிட்டு படமாக சேமிப்பதும், புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் தவறுகளால் புகைப்படச் சுருள் வீணானது. செலவு கூடியதாகவும், சிரமத்தையும் அளித்தது.

டிஜிட்டல் (Digital - எண்முறை) கேமரா எனும் புகைப்பட கருவி வந்ததும் தேவையற்ற புகைப்படங்களை அதிலேயே நீக்கிவிடக்கூடிய வசதி வந்ததும், மேலும் விரிவடைந்தது. இருப்பினும் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும் வசதி வந்ததும் செல்போன் வைத்திருக்கும் சாதாரணமானவர்களும் புகைப்படம் எடுத்து மகிழும் அளவிற்கு வளர்ச்சி மிக விரிவடைந்தது.

நாம் விரும்பிய காட்சிகளை எடுத்து ரசித்து வந்தாலும், சில அற்புதமான காட்சிகளை படமெடுக்க விரும்பிய சில நொடிகளில் அக்காட்சி நழுவி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இனி இதுபோன்ற பிரச்சனையில்லை. நினைத்த மாத்திரத்தில் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையில் புளூடூத் கேமரா வந்துள்ளது.

சாதாரணமாக செல்போனில் புகைப்படம் எடுக்க, அதன் வசதியை திறந்து, பிறகுதான் உபயோகிக்க முடியும். ஆனால் புளூடூத் கேமராவில் ஒரே ஒரு பொத்தான் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அந்த பொத்தானை அழுத்தினால் போதும், புகைப்படம் எடுக்க தொடங்கி விடுகிறது.வீடியோ எடுக்க, புகைப்படம் பிடிக்க, கருவின் செயல்பாட்டை நிறுத்த அனைத்திற்கும், இந்த ஒரே சுட்சிதான்.

தினசரி 100 படங்கள் எடுப்பதாக கணக்கிட்டால், பேட்டரி 2 வருடங்களுக்கு நீடித்து உழைக்குமாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த புளூடூத் கருவி இயங்குமாம். இக்கேமராவை அமெரிக்காவை சேர்ந்த எச்.ஐ.எஸ்..ஒய். என்ற நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை 25 அமெரிக்க டாலர்கள். இது ஒரு நாளிதழ் செய்தி. விசாரித்துக் கொள்ளவும்..


#இப்புகைப்படன் மாதிரிக்காக மட்டுமே.

Monday, August 18, 2014

அருவியாய்! - குறுங்கவிதை



வெளியே
சொல்லக்கூடாது!
வாயும்,
மூக்கும்
கண்களும் 
ஒன்று சேர்ந்தது.,
 

Sunday, August 17, 2014

எது இனிது? -குறுங்கவிதை



பங்குக் கொள்ளும் நாளினிதோ?
பாகிர்ந்தளிக்கும் நாளினிதோ?
பார் போற்றும் நாளினிதோ?
பார் இயக்கும் நாளினிதோ?

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே!


#பார் இயக்கும் = (Bar) இல்லைங்க.. (Par) உலகை வழி நடத்தும் ஹி.. ஹிஹி.. ஹிஹி... :) 

இது தானா?



பழையன கழித்து
புதியன புகுதல்
என்றேன்றார் அன்று.

நாட்டுச் சாரயத்திலிருந்து
கள்ளச்சாராயம்.

கள்ளச்சாராயத்திலிருந்து
கடைச்சாராயம்.

கடைச்சாராயத்திலிருந்து
அயல்நாட்டு சாராயம்.

ஓ.... இது தானோ?
பழையன கழித்து
புதியன புகுதல்

ஏங்கியே தவிக்கின்றேன்




எண்ணங்களின் அலைமோதல்
எழுத்துக்களில் வரவில்லை.
ஏனினும் உணரவில்லை
எண்ணற்றோர் தம் நிலையை

தனையிழந்து,
தனது சொத்தை அழித்து
தன் குடும்பமதை நடுத்தெருவில்
தள்ளிவிடும் நிலைக்கு என் சொல்வேன்.

கல்விதனை கற்கவில்லை எனினும்
காணாதோ கண்கள் தன் குடும்பத்தழகை.
காட்டாற்று சுழலென அறிந்தும்
கவிழ்கிறானே தன் நிலை மறந்து.

விளம்பரங்களுக்கு குறைவில்லை
வீதியெங்கும் வரிவரியாய்.
விதியென தீர்ப்பளித்து
வீழ்கின்றனரே தாரகனிடம்.


#தாரகனிடம் = எமனிடம்

#குடி குடியை கெடுக்கும்.
உயிரையும் குடிக்கும்.



SyLvia VeLanganni Sebastian:





Dhavappudhalvan Badrinarayanan A M அடுத்த ரவுண்டு போனா இந்த கணக்கு கூட தெரியாது.

SyLvia VeLanganni Sebastian ஹாஹாஹா தவா சார்..


இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

நாளும் பொழுதும்
நலம்பட வாழ,
நல்லருள் புரியும்
நாயகனவன்
நந்தகோபாலன்,
கிருஷ்ணனாய் அவதரித்த
கிழமையின்றில்
கீழோர் எவருமின்றி
மேன்மையடைய,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்.

இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Friday, August 15, 2014

''அதுவாய்'' - குறுங்கவிதை


அழகை 
ஆராதித்த 
அறிவற்றான் 
அழிக்கிறான் 
ஆத்திரத்தில் 







''அதுவாய்''

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Guhan Kannan






Guhan Kannan

கல்வியில் விளைந்த
கணினிவிசை  பணியுடன்
கற்பனையில் பிறக்கும்
கவிவடி திறனுடன்,
காலமெல்லாம் மகிழ்வாய்
நலமுடன் வாழ,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. 

நீயா? நானா? -



மயங்கிக் கிடந்த விழிகள் 

தழுவிக் கொண்ட இமைகள்.

விழிக்கச் சொன்ன உணர்வு 

விலகா சோம்பலில் உடல்,

முடங்கிக் கிடந்தது கால்கள்,

இழுத்து போர்த்தியது கைகள்,

தடுமாற்றம் கொண்டது மனம்,

தொடங்கியதங்கு போராட்டம்,

தொலைந்து போனது உறக்கம். 

இனிய காலை வணக்கம் நட்புகளே!

இனிய காலை வணக்கம்

நேற்று பிரார்த்தனை செய்துக் கொண்டேன்.
உங்கள் கனவில் பேய் வந்ததா?
வந்திருக்கணுமே?

இனிய காலை வணக்கம் நட்புகளே!

Thursday, August 14, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்




பரந்த உலகில் 
உன்   பாதம் படர்ந்ததும்
மகிழ்வுகள் யாவும்
பத்மாசனமிட்டு, 
என்றும் உமையே 
பரவசத்தில் ஆழ்த்த,
தாமரை மணியாய்  
உன்னொலி சிறக்க,
படைத்தவன் அன்றே 
முடிவினை செய்தான்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் "பத்மஸ்ரீ"

-- 
அன்புடன் ஆசிர்வாதங்கள் 
சித்தப்பா, சித்தியார்..

குழந்தைகளுக்கான சிறு கவிதைகள்.



லட்டுகள் 

குட்டி குட்டி லட்டுகள் 
குவிந்திருக்குது இங்கே/ அங்கே 
கும்மாளமிட்டு குழந்தைகள் 
குதிக்குதே மகிழ்விலே.
========================

மகிழ்விலே 

அளவில்லா மகிழ்விலே 
ஆடிப்பாடும் நிலையிலே 
அன்றைய பொழுது துவங்கவே 
அற்புதமாய் செயல்களோ 
அதிவிரைவாய் முடிந்ததே.
============================

நாங்கள் 

பள்ளியிலே நாங்கள்,
பாடங்களைக் கற்ப்போம்.
பகுத்தறிந்து செயல்களை 
பக்குவமாய் முடிப்போம்.

பல்கலைகள் பயின்று 
பண்பாய் நாங்கள் வளர்வோம் 
பாரதத்தின் பெருமையை 
பரவ செய்வோம் எங்குமே.
========================



#வருங்கால தலைமுறைகளான இன்றைய குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலையிலேயே நல்ல கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிய, தமிழ் நிலைக்க  செய்ய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். உங்கள் மற்றும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்களேன். 

சுதந்திரமாம் சுதந்திரம் - இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சுதந்திரமாம் சுதந்திரம் 

எல்லாவற்றிலும் சுதந்திரம் 
கட்டுபாடில்லா சுதந்திரம் 
கரைப்புரளும் சுதந்திரம் 
அருமையான சுதந்திரம் 
ஆனந்தத்தில் சுதந்திரம் 
ஆடிப்பாடும் சுதந்திரம் 

வாழ்வில் இந்த சுதந்திரம் 
நிலைப்பதோ நம் கைகளில் 
பழுதில்லா சுதந்திரம் 
பாரதத்தாயின் கைகளில், 
என்றுமிந்த சுதந்திரம் 
ஏந்திக் கொண்டிருக்கவே,
உழைக்க வேண்டும் அனைவரும் 
உறுதிக் கொண்ட முனைப்பிலே.
பங்கு போடும் நினைவுகளால் 
பாழ்படும் சுதந்திரம், 
கொள்ள வேண்டும் நினைவிலே 
நிலைத்திருக்க சுதந்திரம் 

ஒன்றிணையும் கைகளால் 
ஓங்கி வளரும் சுதந்திரம் 
புரிந்துக் கொண்டு செயல்படுவோம் 
உரிமையுடன்  வாழ்ந்திட.
பிரார்த்திப்போம் இறைவனை 
காக்கும் எண்ணம் நிலைக்கவே.



உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய மக்களுக்கும், நேற்றுக் கொண்டாடிய, நாளைக் கொண்டாடவிருக்கும் இதர நாட்டு மக்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 
உங்கள் அனைவரின் இல்லங்களிலும் சந்தோஷம், சத்யம், உறுதி நிலைக்கட்டும். வாழிய நலனே. ஜெய் ஹிந்த்.

Wednesday, August 13, 2014

அண்ணியார். விடோபாய் சதானந்தம் அவர்களின் 75ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து.




கழிந்ததோ வாழ்க்கை 
நான்கிலே மூன்று.
கணக்கிலா நினைவுகள் 
நகருமே நிதமும்.
கற்பனைக்கு எட்டா 
நடப்புகள் பலவும் 
காண வேண்டும் 
நலமுடன் இருந்து.

சொல்லிய கதைகள் 
பேத்திகள் மனத்தில் 
பதியுமே நாளும் 
கொண்டாடும் நினைவாய்.

தாண்டவமாடும் மகிழ்ச்சிகளாலும் 
தாள் பணியும் இறை பணியாலும்,
தாண்டியே போகட்டும் 
தளர்ச்சியும் முதிர்வும்.

பலமுடன் நலமாய் 
வருடங்களைத் தாண்டி,
பல்லாண்டுகள்   தொடர்ந்து 
சந்தோசமாய் வாழ,
பிரவாகிக்கும் மகிழ்வுடன் 
பிரார்த்தித்து வணங்கி 
அன்புடன் வாழ்த்தினோம் 
ஆனந்தமாய் உம்மை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணியாரே! 


அன்புடன் 
கொழுந்தனார் 
A.M.பத்ரி நாராயணன் 
மற்றும் குடும்பம்.

நாள் முழுதும் - குறுங்கவிதை





உமை தீண்ட வேண்டும் 
மௌனமாய் என் வார்த்தைகள்.
மகிழ்விலே திளைக்க வேண்டும்.

இனிய நாள் வாழ்த்துக்கள்  

Tuesday, August 12, 2014

மனம் - விடைத்தேடி




இருக்கிறதா?
இறுகிறதா ?
இறைக்கிறதா?
இறைஞ்சுகிறதா?
இரைக்கிரதா 
இருகுகிறதா?
இறுகுகிறதா?

இதுவும் ஒரு கேள்வித்தான்.
விடைத்தேடி வணக்கம் தொழமைகளே!