Translate

Showing posts with label குறிகள். Show all posts
Showing posts with label குறிகள். Show all posts

Tuesday, October 3, 2017

குறிகள்



காதலில் அவன்
கல்யாணத்தில் அவள்.
கன்னத்தில் முத்தமிட அவன்
கழுத்திலே தாலியிட அவள்.
காம காரியத்தில் அவன்
காத்துக் கொள்வதில் அவள்.

கனிய வைப்பதில் அவன்
காலத்திற்காய் அவள்.
கரைத்து விட அவன்
கருங்கல்லாய் அவள்.
கல்லானாலும் வடிவு என்றான்
கற்றவன் இறைவனென்றாள்.

கள்ளத்தில் அவனிருக்க
கருத்தாய் அவளிருக்க,
காலம் அழகு என்றான்
காலத்தை ரசியென்றாள்
காலமே கோலமென்றான்
கலைந்து போனால் கோரமென்றாள்.

கவைக்கு உதவாதென அவனினைத்தான்
கரைப்படக்கூடாதென அவள் நினைத்தாள்
கழட்டிவிட  நேரம் பார்த்தான்.
கழட்டிக்கொள்ள கணக்குகளிட்டாள்.
காற்றாய் அவன் பறந்தான்
கற்றவளாய் அவளிருந்தாள்


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.