Translate

Thursday, July 31, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து - நிரஞ்ஜனா - ஆனந்தராஜ் அகஸ்ட்

எங்கள் மகள் நிரஞ்ஜனா - ஆனந்தராஜ் அகஸ்ட்  தம்பதியருக்கு ஆண் மகவு இன்று  காலை பிறந்துள்ளது. அவர்களை வாழ்த்தி.



என்னுயிரும் துடித்தது 
உன்னுயிர் பிறப்பெடுக்க,
வலியின் அலையோசை  
எம் நெஞ்சுக்குள் ஊடுருவ,
மதி மயங்கிய உறக்க நிலை  
எனை விட்டு தொலைந்ததம்மா.

அறியா நிலையினிலே 
அரற்றிய பொழுதினிலே 
ஆனந்தமாய் செய்தி வந்து
அமுதமாய் செவி தழுவ,
ஆண்டவனின் அருள் வடிவம் 
உணர்வுகளில் தவழ்ந்ததம்மா.

உரக்கத்தான் கூவிவிட 
தோற்குழிக்குள் சொல்லுறள,
மகிழ்விலே என் விழிகள் 
மின்னலுடன் போட்டியிட 
கூத்தாடிய எம்மனமோ 
தவித்ததம்மா தனியாக.

தாயும் சேயும் நலமாக,
குடும்பமுடன் மகிழ்வாக,
இறை தந்த செல்வங்களுடன்  
சகலமும் பெற்று நீங்கள் 
சந்தோசமாய் மனம் நிறைந்து 
சீராக வளர்ச்சிப் பெற
காணிக்கையாய் தாள் பணிந்தோம்  
இறைவனின் காலடியில்.


--=
அன்பும் ஆசிர்வாதங்களும் 
அப்பா.A.M. பத்ரி நாராயணன்  

Wednesday, July 30, 2014

முடிவு எது?




எண்களால் கூடி 
உயரத்தில் இருப்போம்.
எண்ணத்தால் இன்றும் 
குழந்தையென சொல்வோம்.
மாசும் மருவும்
அன்று நமக்கில்லை.
இன்றோ நாம் 
அப்படியொன்றும் இல்லை.
காயும் பழமும் - அன்று 
விளையாட்டாய் இருக்க,
கோபதாபங்களால் 
இ ன்று நாம் ஒதுங்கி செல்ல,
ஏக்கங்கள் அன்று 
நிலையின்றி இருக்க,
ஆசைகள் இன்றும் 
பெரிதாய் வாட்ட,
குழந்தை பருவமோ 
விளையாட்டாய் செல்ல,
முதிர்ந்த வயதிலோ 
சூதாட்டமாய் நடக்க,
பருவங்களை நினைத்தால் 
புதிர்களாய் தெரிய,
முன்னோக்கி பின்னோக்கி 
எண்ணங்கள் விரைய,
எண்ணிலா கேள்விகள் 
எழுந்து நமை ஆட்ட,
கிடைக்குமோ விடைகள் 
முடிவுக்கு முன்னே. 

வாழ்த்துக்கள் - E Muthezhilan Peter அவர்களின் பேரனுக்கு.

Frined of VG Santhosam 
https://www.facebook.com/photo.php?fbid=774384329279475&set=a.123476744370240.21549.100001237448465&type=1&theater

E Muthezhilan Peter வாழ்த்துக்கள் . அண்ணாச்சி அவர்களுக்கு என் பேரன் நாளை மறுநாள் சீனாவில் நடைபெறும் உலக ரோபோடிக் (14வது) போட்டியில் கலந்து கொள்ள கோதே பசிபிக் விமானத்தில் பயணிக்கிறான் அவனை வாழ்த்துங்களேன். ..................................... ... ............................................... ..................................................................




///தமிழனின் புகழ் 
தரணியெல்லாம் ஒலிக்கட்டும் 
தங்கள் தங்க பேரனும் 
தங்கமது வெல்லட்டும்.

ஆவலோடு நீரிருக்க, 
ஆண்டவரின் அருளினால் 
அளவிலா புகழோடு 
ஆனந்தமாய் திரும்பட்டும்.

தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள் உரியதாக்குக நண்பரே.///.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர்





மனத்தின் எண்ணங்கள்
தாளினிலே நிலைக்கொள்ள
கைக்கோளின் துணைக்கொண்டு
வசீகரமாய் பிறப்பெடுக்கும்.

வாசகரின் மனத்தையெல்லாம்
வசப்படுத்திக் கொள்ளையடிக்கும்
நண்பரே வாழ்த்தினோம் இன்று,
நலனுடன் புகழும் பெற்று வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பட்டுக்கோட்டையாரே.


கதாசிரியர்  பட்டுக்கோட்டை பிரபாகர்

Tuesday, July 29, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -சமுத்ராலா ருச்சிர்ராஜ் G/s Keyem Dharmalingam

Keyem Dharmalingam
அவர்களின்  
பிறந்தநாள் கொண்டாடிய பேரன் சமுத்ராலா ருச்சிர்ராஜ்க்கு, 





அறிவின் செயல்கள்
கொடிக் கட்டி பறக்க,
சிறுபிள்ளைக் குறும்புகள் 
அதனுடன் இருக்க,
நலமுடன் பொழுதுகள் 
மகிழ்வுடன் கழிய,
வாழ்த்தினேன் உன்னை
தாத்தாவாய் நானும்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - திரு .காசிபதி



பாவா.தேவரீர்.காசிபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.

பிறந்தநாள் என்றால் 
மகிழ்ச்சிகள் அதிகம்.
கணக்கிட்டுப் பார்க்க 
சொல்லித் தரவில்லை.
கூடட்டும் மகிழ்ச்சி 
குறைவிலா நலனுடன்
குடும்பமுடன் இணைந்து 
பல்லாண்டு வாழ,
நாங்கள் உமை வாழ்த்தினோம் 
பிரார்த்தித்து தானே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்,
பாவா.A M.பத்ரி நாராயணன் மற்றும் குடும்பம். 




ஓம் முருகா.....



காணும் கடவுள் முருகனுக்கு 
காவடி தூக்கிய - உன்னை 
கண்டதும் புகைப்படத்தில் 
விரிந்ததே புன்னகை எம் விழியில்.

விளையாட்டுப் பிள்ளையவன் 
விலக்கி வைப்பான் துன்பமெல்லாம்.
அவ்வைக்கும் அப்பனவன் 
அன்புக்கு அடிமையாவான்.

விழி விரித்த நேரமெல்லாம்,
கரங்குவித்த பொழுதெல்லாம்,
ஓங்கார வடிவனவன்   
ஒலிப்பானே குரலசைவில்.

''ஓம்" எனும் சொல்லிற்கு 
சீராக பொருளுரைத்தான்,
உலகாளும் ஐயனுக்கே 
உரைத்தானே செவிக்குள்ளே.

அறியாத மானுடர் நாம் 
அறியவே தாள் பணிவோம்.
ஆறுமுக கடவுளவனின் 
அளவிலா அருள் கிடைக்க.
அன்றாடம் துதித்திடுவோம் 
ஆனந்தமாய் வாழ்வதற்கு.
=======================

Monday, July 28, 2014

எளிது!



ஒவ்வொரு சொல்லும் 
புதுப்புது பாடம்.
பாடங்கள் அனைத்திலும் 
அர்த்தங்கள் புதிதாய்.

அணுவிலே தொடங்கி 
அந்தம் வரையும் 
அனுபவம் நிறைந்த 
அத்தியாயம் அதிகம்.

பூச்சி(ஜ்ஜி) யத்தில் தொடங்கி 
ஒன்பதில் முடிப்போம்.
பல கோடி எண்கள் 
உருப்பெற்று விரிவாய் 
மாறுப்பட்டு ஒலிக்குமே 
தன்னுள் கலந்து.

நிலைகள் ஆயிரம் 
நீக்கமற இருக்க,
கற்பதும் வாழ்வதும் 
நம்மிடம் மட்டுமே.




#பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. 

Sunday, July 27, 2014

எங்கே அவள்?



நேருக்கு நேர் 
குறுக்கிட்ட  பொழுது,
சந்தித்த விழிகள் 
ஒரு நொடியெனினும்,
சலனமற்ற பார்வையில் 
பாவையோ நோக்க,
சரணடைந்த நிலையில் 
ஒதுங்கினான்  அவனும்.
பாவையவளோ தன் 
வழி செல்ல,
தன்னிலை மறந்து 
தவித்து நின்றான்.

இடையது ஒன்றும் 
மெலிந்தது அல்ல.
பார்வைக்கு அவளோ 
அழகியுமல்ல.
ஒப்பனைகளில் ஏதும் 
கவர்ச்சியும் இல்லை.
இருப்பினும் அவன்  மனம் 
பறந்தது நாடி,
காதலென்ற மனமுடன் 
எல்லையைத் தாண்டி.

வாழ்தல் என்றால் 
இவளுடன் மட்டும்.
இறைவன் படைத்தான் 
எனக்காக மட்டும்.
நினைத்தவன் கண்களோ 
அலைந்தது தேடி.

இனிய இரவு வணக்கம்

இரவி இறங்கி இரவு வந்தது 
நட்பை நாடி நலம் அறிய?
விடியலை நோக்கி விரையுமே 
விந்தை உலகை காட்டவே.

இனிய நினைவுக;ளுடன் உறங்க
 இரவு வணக்கம் நட்புகளே.








பேபி.தியா 

பட்டுடையில் இன்று 
நீ பளபளக்க,
சிற்றுடையும் உனக்கு 
பாந்தமாய் இருக்க,
குடும்பத்து இளவரசி - நீ 
மகிழ்வுடன் திகழ,
வாழ்த்துக்கள் குவியும் 
நாளது இன்று. 
ஆசியும் வாழ்த்தும் 
சூழ்ந்துமைக் காக்க,
பீடுநடை போடு 
என்றுமே நீயும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தியா குட்டி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - சிவசங்கர்.






சிவசங்கர்.

வாழ்வின் படிகள் 
முன்னோக்கி செல்ல,
பள்ளங்கள் இருந்தால் 
பாலங்களால் இணைத்து,
கவனமுடன் நாளும் 
பயணம் செய்து,
நலமும் மகிழ்வும் 
கூடியிருந்து குழாவ,
பாசமுடன் வாழ்த்தினோம் 
பரவசத்தில் மிதக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 



# பாலங்கள்: குடும்பம், உறவு, நட்பு மற்றும்  தொழில்வழி அறிமுகங்கள் 

Friday, July 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - காமேஷ்

 பிறந்தநாள்  வாழ்த்து = காமேஷ்.


வாழ்வின் அர்த்தங்கள் 
ஆயிரமிருக்க,
அதில் பல நினைவுகள் 
ஒடிப் பிடித்து விளையாட.
பிறப்பின் விளிம்புகள் 
தொட்டு உமை இழுக்க,
ஒவ்வொரு படியாய் 
உம் காலடி உயர,
நலமுடன் நாளும் 
சிறப்புடன் காலமும்
செல்கவே வாழ்த்தினோம் 
இனிதான நாளாம் 
உம் பிறந்தநாள் இன்றிதில்.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் காமேஷ்.


--
அன்புடன்
அப்பா.A.M.பத்ரி நாராயணன்.
அம்மா.ராஜராஜேஸ்வரி.B 

Thursday, July 24, 2014

கடத்தலா, விபத்தா? -யோசனை

அல்ஜீரிய நாட்டு விமானம் நடுவானில் மாயம்.. கடத்தலா, விபத்தா? சில மாதங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. இதுவரை அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அல்ஜீரிய விமானம் திடீரென மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


# புதிதாய் ஒன்றும் செய்யலாம். விமானத்துடனான தொடர்புடன், விமான கருப்புப்பெட்டியுடனும் தொடர்பு இருக்கும்படியான வசதியை செய்யலாம் அல்லது கண்டு பிடித்து செயல்படுத்தலாம். அதனால் விமானத்துடனான தொடர்பு  துண்டிக்கப்பட்டாலும், கருப்புப்பெட்டி உடனடியாக கைக்கொடுக்கும். எமது கருத்தை யாரேனும் கவனத்தில் கொள்வார்களா?  

Wednesday, July 23, 2014

அச்சச்சோ.... - குறுங்கவிதை


ஏதேதோ சொல்ல வந்தேன் 
எண்ணங்களில் மூழ்கிப்போனேன்.
ஏட்டிலே பார்த்த போது 
எழுத்துக்களைக் காணவில்லை.

மதிய வணக்கம் நட்புகளே!

இப்படியுமா...


உறங்கும் நேரத்திலும் 
உறங்காமல் இருந்தது.
விடியும் காலத்திலே  
விழிக்க வைத்தது 
காலை முதல் மாலை வரை
கடனென கழிந்தது.
மாலை பொழுதிலும் 
மல்லுக் கட்டியது.
ஓடிய நேரத்திலும் 
ஒட்டியே வந்தது.
இப்படியிப்படி என .
இழுத்துச் சென்றது.
மயங்கா என்னை 
மயக்க வைத்தது.
உணவையும் உணர்வையும் 
உதற செய்தது.
இயங்கிய என்னை, (ஏனோ) 
இயங்காமல் செய்தது.
புரியாத புதிராய் எனை 
புதைத்து விட்டது.
புல்லு முளைக்குமோ 
புதையுண்ட இடத்தில் 
பரிதாபம் வேண்டாமே 
பாவமாய் எண்ணி.

எங்கேயோ? - குறுங்கவிதை,




வெளியிலே பனி. 
உடலுக்கு கம்பிளி. 
புரண்டு படுத்தேன். 
உறக்கம் இன்றி..
இயக்கினேன் மின்விசிறி. 
புழுக்கமாய் இருப்பதாய்.

Tuesday, July 22, 2014

மனம் - குறுங்கவிதை



உளவறிய சென்றது, 
உணர்வுகளுக்கிடையே..... 
உண்ணும் நேரமா?
உறங்கும் நேரமா?


இனிய நற்பொழுது வணக்கம் நட்புகளே!

Monday, July 21, 2014

வளைகாப்பு வாழ்த்து மடல் - திருமதி.ஸ்ரீலதா காமேஷ்



திருமதி.ஸ்ரீலதா காமேஷ் வளைக்காப்பு வாழ்த்து.

முதலென்று முகமோ 
பூரிப்புடன் சொல்லி,
அபூர்வராகமாய் 
ஆலாபனை செய்யும்.

தாய்மையின் பெருமையோ 
தலை நிமிர்ந்து நிற்க,
அளவிலா ஆனந்தம் 
கண்களை சொக்க,
கனவுகளும் நினைவுகளும் 
கருவுடன் உறவாடி,
கணக்காய் நாட்களை 
கவுண்டவுன் செய்யும்.

பாசமுடன் கைகள் 
ஏந்தும் காலம்,
சீரான நாளில் 
சிறப்பாய் அமைய,
வாழ்த்தினோம் இன்று 
இறைவனை பணிந்து.


--
அன்புடன்,
அப்பா. A.M.பத்ரி நாராயணன்.
அம்மா.ராஜராஜேஸ்வரி 
Mr.ஆனந்தராஜி அகஸ்ட்,
Mrs.நிரஞ்சனா,

Baby சாதனா 

வளைகாப்பு வாழ்த்து மடல் - ஸ்ரீமதி.நிரஞ்ஜனா அகஸ்ட்




கருவறையின் கருவுக்கென
நிதம் நிதம் யோசனைகள்.
கணக்கிலா ஆசைகள் 
வண்ணங்களாய் அசைப்போட,
நீங்கா நினைவுகள் 
மனதினை தடவிப் பார்க்க, 
காணும் பிம்பங்களோ  
கனவிலும் காட்சித் தர,
கனவுகளும் நிசமாகி, பொன்குஞ்சை
கையணைக்கும் நாளதில்,
பொங்குமது நெஞ்சமம்மா 
பூம்புனலாய் ஆர்பரித்து.
நலமாக ஈன்றெடுத்து 
சிறப்புடன் வளர்த்தெடுக்க,
அளவில்லா ஆசையுடன் 
பாசமுடன் பிரார்த்திக்கிறோம். 

--
அன்புடன் 
அப்பா.A.M.பத்ரி நாராயணன்.
அம்மா.ராஜராஜேஸ்வரி.B  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ravi Sarangan




Ravi Sarangan

இம்மையிலும் மறுமையிலும்
இறையருள் *தாங்க.
இன்பமே வாழ்வில்
இன்று போலவே விளங்க,


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


*தாங்க = தாங்கிக் கொள்ள.

Sunday, July 20, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Thiagalakshmi Badri

Thiagalakshmi Badri 

வாழ்விலே இன்று
வசந்தத்தின் திருநாள்.
வர வேண்டும் தொடர்ந்து
வரம் தரும் இறையால்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகளே.

Thursday, July 17, 2014

இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன்.

வணக்கம் என் இனிய நட்புகளே...
மருத்துவ சோதனைகள் முடிந்து விட்டன.
நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன்.
ஆனாலும் இன்னும் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு நாள் கூட விடாமல் அதனை எதிர்க்கும் மாத்திரை சாப்பிட வேண்டும்.
”சந்தோஷம் இது சந்தோஷம்..பொன் ஊஞ்சலில் இன்ப சங்கீதம்
வானத்தில் சிறகின்றி தனியாய் பறந்து திரியும் சந்தோஷம்..


நான் எவ்வித பாதிப்பும் இன்றி..நல்லா இருக்கேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது நண்பர்களே..
ஏன் தெரியுமா?
புற்று நோய் வந்து 3,4 ம் ஆண்டுகளில் இது நுரையீரல்/கல்லீரல்/எலும்பைத் தாக்கும்.இது இல்லாமல் இருப்பது கடினம்..
அந்த பயத்துடனே..அது மீண்டும் எப்ப வந்து தாக்குமோ என்ற அச்சத்துடனேயே புற்று நோய் சிகிச்சை முடிந்தவர்கள் இருப்பார்கள்.
எனது சில நண்பர்கள் அப்படியே இந்த உலகை விட்டு போயே போய்விட்டவர்களும் உண்டு//
அதனால்தான் எனது டாக்டர்கள் அனைவரும் do not think of negatively.. that will create problem எதுவ்ம் வராது நன்றாக இருப்பேன் என நம்பிக்கையுடன் எண்ணுங்கள் என்றனர்.
மேலும் உங்கள் தன்னம்பிக்கைதான் எங்களின் மருந்தைவிட அதிகம் உங்களிடம் செயல் புரிந்தள்ளது.
..உங்களின் இன்றைய உடல் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது உங்களின் தன்னம்பிக்கைதான்” என்றார்
"Be active at all times. Do not allow your mind to think about unnecessary fears and activities... your positive thinking will lead to improve your immunity and make a preventive measure to disease "என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினர்.
நேற்று நான் கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்று வழக்கமாக 3 மாதத்துக்குப் பின் செய்யும் சோதனைகளை 5 மாதங்கள் கழித்து செய்துகொண்டேன்.
இதனால் என்னுடைய டாக்டர் கார்த்திகேஷுக்கு வருத்தம் தான்.
என்னால் என் பணிப்பளுவுடன் இணைத்து சரியான நேரத்துக்குப் போகமுடியவில்லை.
ஆனால் நேற்றைக்கு மருத்துவ சென்று 3 சோதனைகள் முடித்தாகி விட்டது. ஒன்றுதான் பாக்கி இருக்கிறது.அதுதான் Bone scan. அதனைஅடுத்த மாதம்தான் செய்ய வேண்டும்.
டாக்டர் நான் ரொம்ப நன்றாக இருக்கிறதாக physical test, abdominal scan, X-ray and mammogram எல்லாம் பார்த்து சொல்லிவிட்டார். அத்துடன் இன்னும் 6 மாதம் கழித்து வந்தால்போதும் என்றும் டாக்டர் கார்த்திகேஷ் சொன்னார்.
என்னைப் பார்த்ததில் டாக்டருக்கும் ஒரே மகிழ்ச்சி.
படத்தைப் பாருங்கள் தெரியும்.

”நீங்கள் வயதாகிவிட்டதாக எண்ணி, பணிகளை குறைக்க வேண்டாம். ஊர் சுற்றுவதை நிறுத்த் வேண்டாம். தேவையின்றி ஓய்வெடுக்க வேண்டாம். மற்றவர்கள் ரெஸ்ட் எடுங்கள் என்றாலும், உங்களால் முடிந்தால்..ஓடிக்கொண்டே இருங்கள்..அது தான் வாழ்வை நீட்டிக்கும் ஒரே காரணி ..அமிர்தம் ” என்றார்..
“வீட்டில் முடங்கி ரெஸ்ட் எடுத்தால், தானாகவே, சோர்வும், வயதான உணர்வும், பலவீனமும். ஏற்படும் ”என்றார்.
”நீங்கள் எப்போதும் போலவே இருங்கள்..யார் சொல்வதற்காகவும் பணிகளை குறைக்க வேண்டாம் ”என்றார்;
அவரும் கடின உழைப்பாளிதான்
. நேற்று காலை 9 மணிக்குபுற்று நோய் அறுவை சிகிச்சை அறைக்குச் சென்றவர் மாலை 6 .30 மணிக்குத்தான் புற நோயாளிகள் அறைக்கு வருகின்றார்.
இடையில் மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை.
ஏன் டாக்டர் இவ்வள்வு நேரம் என்று கேட்டால் ,,தொடர்ந்து காலை 9-மாலை 5.30 வரை சர்ஜரி. ”
”ஏன் டாக்டர் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து மதிய உணவு சாப்பிட்டிருக்க கூடாதா? “ என்றால்,
டாக்டர் சிரித்துக் கொண்டே,, ”சர்ஜரியை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்துவிட்டு வந்துதான் சாப்பிட வரவேண்டும் ”என்றார்..
கொஞ்சம் அமைதி, கொஞ்சம் நகைச்சுவை.. மென்மையான மருத்துவர்.
எப்போதும் உதட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பு..படம் பாருங்கள்..தெரியும். அவரின் அறையில் எடுத்தது.
புன்முறுவல்,&சிரிப்பு..இவை..பொதுவாக மருத்துவர்களுக்கு இல்லாத சொத்து
அவரை நினைத்து நெஞசம் பெருமிதம் கொள்கிறது..
நெஞ்சு சிலிர்க்கிறது..ரொம்ப நெகிழ்வாகவும் உள்ளது.
இவரைப் போன்ற மனிதம் மிக்க டாக்டர்களால்தான் உலகம் உய்விக்க்ப்படுகின்றது.
அடுத்த படம்.. Patrina எனக்கு 4 ஆண்டுகளாக mammogram எடுக்கும் சகோதரி..
எங்களின் பின்னால் mammogram எடுக்கும் பெரிய்யய கருவி.

நன்றி: திருமதி Mohana Somasundram சகோ.

திருமதி.மோகனா சோமசுந்தரம் அவர்களின், தன்னம்பிக்கை ஊட்டும் மேற்கண்ட பதிவுக்கு கருத்துக்களில் சில: 

N.Rathna Vel: நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன் = மிக்க மகிழ்ச்சி அம்மா திருமதி Mohana Somasundram. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எல்லோருக்கும் முன்னோடி நீங்கள்.


Saroja Saroja Nagaikavin Nagaikavin: மகிழும் மனம் குதித்தாடுகிறது உங்களைப்போலவே தன்னலமில்லா உழைப்பின் சிகரங்கள் நூறாண்டுக்கு மேலும் வாழணும் மேம் என் கண்களும் மனமும் கலங்குகின்றன.மகிழ்ச்சியால்.முடிந்தால் நானே வ்ந்து உங்களைச் சந்தித்து ஆசிபெற எண்ணியிருக்கிறேன் மேம்.கவினுடன் உங்களைப்பார்த்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மேம்

Arumugam Eswaran: வானம் கைக்கெட்டும் தூரம் தான்

Raghu Nathan சமூகத்திற்கு தங்கள் பணி மேலும் தொடர பாராட்டுக்கள்....Wishing you a healthy long life

Thangam Vallinayagam நோய் இருப்பினும் அதை நினைக்காமல் மற்றபணிகளில் உங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு வாழ்வது உண்மையில் பாராட்டுதலுக்குரியது.உங்கள் பணி தொடர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் .


Chola Nagarajan அன்புத் தோழி மோகனாவுக்கு, 
மிகவும் மகிழ்ச்சி. இனி உங்களுக்கு ஒன்றுமில்லை. கவலை மட்டும் எப்போதும் வேண்டாம். கேரளத்தில், மலையாள சினிமா சங்கத்தின் தலைவரும், பிரபல நகைச்சுவை நடிகரும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற
ு வென்ற சுயேச்சை உறுப்பினருமான மரியாதைக்குரிய இன்னொசென்ட் அவர்கள் இதேபோல நோய்வாய்ப்பட்டு, போராடி வெற்றி கண்டவர். அவரது வாழ்க்கை வலி பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதுபோல, உங்களுடைய பணிகளும் சிறக்க, அமைதியும், ஆரோக்கியமுமான வாழ்க்கை உங்களுக்கு அமையும் என நம்புங்கள். நாங்களெல்லோரும் உங்களுடனேயே இருப்போம் தோழி!

Kumaraguruparan Ramakrishnan தோழர் மோகனா, தங்கள் தன்னம்பிக்கை கண்டு உண்மையாகவே மனம் நெகிழ்கிறது...இதர நண்பர்களுக்கும் இந்த செய்தியைக் கொண்டு போக வேண்டும்... வாழ்த்துகள் தோழர்...

Dhavappudhalvan Badrinarayanan A M எத்துனைய பெரிய உடல்நலக் கோளாறுகள் தோன்றினாலும், மனத்தைத் தளரவிடக் கூடாது என்பதற்கு, மற்றவர்களுக்கு நீங்களும் ஓர் உதாரணம் சகோ. வருகின்ற நாட்கள் அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் சகோ.

Thursday, July 10, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுபடி

சென்ற ஏப்ரல் மாதம் எங்கள் திருமண நாளை ஒட்டி, சேலம் சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ அண்ணபூர்ணா ஹோட்டலில் (உணவகத்தில்)  எமது மாமியார், சகோதரிகள், மற்றொரு சகோதரியின் மகள், புதுமண தம்பதிகளான எங்கள் சிறிய மகளுடன் மருமகனும்.

# வாழ்த்துக்குறிய செய்தி:-  இந்த ஸ்ரீ அண்ணபூர்ணா ஓட்டலில்,   விழி பார்வையற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் எந்த நேர  உணவுவாக இருப்பினும், கட்டணத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளார்கள். யான் எடுத்துக் கொண்ட ஸ்பெஷல் ரவா தோசைக்கு ரூ.50 தள்ளுபடி கிடைத்தது.


Displaying 20140417_210418.jpg

Displaying 20140417_210501.jpg

Monday, July 7, 2014

குறுங்கவிதை - வாழ்க்கையே....

வாழ்க்கையே....  


நாடகமாய் திகழ்கையில் 
அதிலேது வேஷம் 
நிசமும் போலியும்.

Friday, July 4, 2014

ஆன்-லைன் வேலைகள் ( On -line Jobs )

இந்த விளம்பரம் எமது வலை முகவரிக்கு வந்தது. பணி வாய்ப்பு கிடைக்காதவர்களும், அதிக வருமானம் ஈட்ட வேண்டுமென நினைப்பவர்களுக்காகவும்,  கணினியில்  ஆன்-லைன் வேலைகள் ( On -line Jobs  ) எனும் இவ்விளம்பரத் தகவலை பதித்துள்ளேன்.


# விருப்பமுடையவர்கள் விசாரித்து பயனடையும்படி தெரிவித்துக் கொள்கிறேன். எமக்கும் இவ்விளம்பரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் நினைவிற்க் கொள்க.