அறியாத பிள்ளை நான்
அறிந்துக் கொண்ட போது தான்,
தெரியாத உன்னைத் தான்
தெரிந்துக் கொண்டேன் நானும் தான்.
விடியும் பொழுதை நோக்கித் தான்
விழித்திருந்தேன் நானும் தான்.
விடிந்த பின்னே நீயும் தான்
விழி பதித்தாய் வழியில் தான்.
கண் பதியும் போதெல்லாம்
கண் அசைத்தாய் நீயும் தான்.
அசைகின்ற உன் கண் பார்த்து
அசைந்தது என் மனதும் தான்.
வாய் திறக்கா என்னைத் தான்
திறக்க வைத்தாய் நீயும் தான்.
பேச வைத்த உன்னிடம் தான்
மயங்கிப் போனேன் நானும் தான்.
எடுத்துக் கொடுத்தாய் அடிகளையே
எழுதி வைக்கச் சொல்லித்தான்.
எழுதி வைத்த அடிகலெல்லாம்
ஏட்டிலிருந்து சொல்லியது தான்.
பொழுது அமரும் நேரத்தில்
புரிந்துக் கொண்டேன் அனைத்தும் தான்.
விடியும் வரை காத்திருப்பேன்
புது விடியலைக் காணத்தான்.
-தவப்புதல்வன்.