Translate

Showing posts with label 2010 பொங்கல் வாழ்த்து. Show all posts
Showing posts with label 2010 பொங்கல் வாழ்த்து. Show all posts

Friday, January 15, 2010

இனிக்கட்டும் பொங்கல்.

செஞ்ஞாயிறு உதிக்க
செவ்வானம் ஒளிர,
செவ்விதழாய் மலர்ந்து
செந்தையும் பிறக்க,

செங்கரும்பு வளர்ந்து
இனிப்பைக் கொடுக்க,
செம்பால் பொங்கி,
பொங்கல் ஆகும்.

மங்கலங்கள் நடந்து
மகிழ்வுகள் ஆக,
நித்தமும் அதுவே
நிலைத்தே இருக்க,
இறைவனை தொழுது
இயன்றதை செய்வோம்.

இனிக்கட்டும் வாழ்வு

உயிரையும் காக்க
உண்டியும் நிறைய,
உண்ண உணவளிக்க
உழைக்கும் உழவருக்கும்,
உலகில் வாழும்
உற்றார் உறவினருக்கும்
உயிர்தேழுந்துள்ள
உயிரினங்களுக்கும்
உதவுகின்ற அனைத்துக்கும்,
உளமாற நன்றிகளை
உள்ளவரை நவில
உரைக்குமிந்த பொங்கல்
உய்யட்டும் சிறப்பாக.

உருவமாய் படைத்து
அருவமாய் இருக்கின்ற
ஆட்டுவிக்கின்ற இறைவனை
பாதம் தொழுது,
பணிந்தே வாழ்த்துகிறோம்,
இனிதாய் இருக்கட்டும் வாழ்வு
இனிய பொங்கலைப் போல.