Translate

Showing posts with label நட்புக்கோர் மின்னஞ்சல். Show all posts
Showing posts with label நட்புக்கோர் மின்னஞ்சல். Show all posts

Tuesday, January 16, 2018

நட்புக்கோர் மின்னஞ்சல்


கிழக்கும் மேற்குமாய்
கீழும் மேலுமாய்
கிண்டி பார்க்கிறேன்
கிளறித் தேடுகிறேன்
கீழ் வானம் சிவக்கிறது
கிழமைகள் தேய்கிறது
கிடைக்குமோ
கிடைக்காதோ
கிடந்து நான் துடிக்கின்றேன்.
கிட்டாதென வெட்டன மற என்றோர் முன்னோர்
கிட்ட இருக்கும் நண்பருக்கு
கிடைக்கும் இச்செய்தியென
கிடக்கின்றேன் வழி பார்த்து.


Chelliah நினைவெலாம்
நிலவொளிக்கவிதைகள்...
பார்ப்பதெலாம்
பாலருவிக்கவி வரிகள்...
கேட்பதெலாமும்
கோள்களிடும்
நன்சான்றோ...

காளமேகப்புலவர்
கண்டதில்லை
கவிமேகமோ
கண்டு
கொண்டேன்...
நன்றிகள் நட்பே


Dhavappudhalvan Badrinarayanan A M நவின்ற சொற்களில் 
நாவினிக்க,
நான் கண்டதோ

நட்பிற்கோர் துணையாக,
நாளும் பொழுதும் ஊக்குவிக்கும்
நண்பரான உமைதானே.
நாட்களெல்லாம் மகிழ்வளிக்க
நலனும் உடனுறைய,
நட்புறவு செழிக்கட்டும்
நம்மிடையே என்றென்றும்.
வாழ்க எமதினிய நண்பரே.
Chelliah மிக்க நன்றிகள் நட்பே