Translate

Showing posts with label என்று நீ. Show all posts
Showing posts with label என்று நீ. Show all posts

Friday, May 4, 2018

என்று நீ







போதுமென நினைக்கவில்லை. இப்
போதை போதுமென தோன்றவில்லை.
போகுமிடமாய் ஆனதே. பொழுது
போக்குமிடமாய் ஆனதே. 10

பொன்னான குடும்பமிருக்க, மனைவியை
பொம்மையாய் நினைத்துக் கொண்டாய்.
பெருமைதனை உணராமல்,
பெற்ற மக்களை நீ மறந்தாய் 20

நீ குடியிலே மூழ்கியிருக்க,
குடும்பத்தின் கண்ணீர் தண்ணீராய் பெருக்கெடுக்க
கண்மணியாய் வளர்ந்தவனோ,
உன் அடாத செயலால்
மூச்சினை துறந்தானே தூக்கில் தொங்கியபடி. 36

பெரும் பாவம் நீயடைந்தாய்
பெற்றவன் உன் நிலைக்காய்
தன்னுயிரை அவன் கொடுத்தான்.
திருந்துவாயென நினைத்து., 47

பேணியுனை தாய் வளர்த்தாள்.
பெற்றவள் போல் மனைவி நடந்தாள்.
பெருங்குடியில் நீ அமிழ்ந்து
பேரிழப்பை குடும்பமடைய
சீரழியும் நிலை செய்தாய். 62

மகனுயிருக்கு மதிப்புண்டோ? 🤔
திருந்தும் நிலையுண்டோ? 🤔
புதைகுழியில் உனை ஆழ்த்தும்
உயிர்க்கொல்லி கூட்டத்தை
உணர்ந்திட அறிவுண்டோ? 72 🤔


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏



#பெருங்குடியில் = பெரிய குடிகாரனாய்
#பெருங்குடியில் = பெருமை மிக்க குலம், என்ற பொருள் தான் முதன்மையானது.