Translate

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, May 31, 2007

உங்களுடன் ஒரு அலசல்

ஆறு,கடற்கரை ஓரங்களில், மணற்பரப்பில் சிறுமணற்குழிகளைத் தோண்டி, சுவையான ஊற்றுநீர் எடுத்தும், குடித்தும் பார்த்திருப்பீர்கள். நீர் எடுக்க எடுக்க புது நீர் ஊறுவது போல,

தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. - 396 .

என்னும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றுப்படி, நமது உடலானது மணற்கேணிப் போல, குறிபிட்ட காலத்திற்கு, ஒரு முறை குறிப்பிட்ட அளவு இரத்தம் எடுக்க எடுக்க புது இரத்தம் ஊறிக்கொண்டே இருக்கும்.
புது இரத்தமானது நம்மை சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் வைத்திருக்கும். 16 வயதிலிருந்து 60 வயது வரை அனைவரும் 3 மாதததிற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். உடல் நிலை சரியில்லாதவர்களும் மருத்துவர் ஆலோசனைப்படி இரத்ததானம் செய்யலாம்.

'புத்துணர்வுடன் வாழுங்கள்'
'புத்துயிர் பெற உதவுங்கள்'

அதே போல் தான் உடல் மற்றும் கண் தானமும். இந்திய நாட்டில் வருடத்திற்கு 2 இலட்சம் பேர் கண்களை இழக்கிறார்களாம். கிடைப்பதோ, 20 ஆயிரம் ஜோடி கண்கள்தானாம். என்னடா ரொம்ப சீரியஸ் மேட்டராக எழுதுகிறாரே என நினைக்க வேண்டாம். மேட்டர் சீரியஸ் தானே. போக போக ஜாலியாக.

சரி தானே !

கண் தானம் [Donate your eyeis & body parts after life]

கண்களை வழங்க
வரிசையில் இருங்கள்.
கண்ணொளி இல்லாதோர்
உமக்குப் பின்னால்
இப்புவியைக் காண.

விழி இரண்டு திறக்கட்டும்,
நீங்கள் கண் மூடியபிறகு.
ஒளி பரவ விடுங்கள்,
கண்களைக் கொடுத்து.

மானிடருக்கு
மகிழ்வுடன் வழங்கி,
மண்ணுக்குப் போகும் கண்களை
மண்ணிலே விடுவீரே உலவ.

நீங்களே போன பின்
உங்களுக்கு எதற்கு கண்கள் ?
பொருள் சேர்த்த உடம்போடு,
புகழுடம்பையும் சேர்ப்பீர்-
கண்களையும் உடலையும்
தானமாக் கொடுத்து.

நீங்கள் பார்த்து பார்த்து
சேர்த்தைப் போல,
அவர்களும் சேர்க்கட்டும்
உங்கள் கண்வழிப் பார்த்து.

ஏழேழுத் தலைமுறை சொத்தை
உறவுக்கு கொடுங்கள்.
கண்களை பிறருக்குக கொடுங்கள்
ஏழேழுத் தலைமுறையை கண்டு மகிழ.

உங்கள் மறைவுக்கு பிறகும்,
உங்களை மறக்காமல் இருக்க,
உலகுக்கு கொடுத்து உதவுங்கள்
உங்கள் கண்களை.

பல நன்மைகளை
வீட்டுக்கு செய்த நீங்கள்,
பெரிய நன்மை செய்யுங்களேன்
நாட்டுக்கு கண்களைக் கொடுத்து.

நீங்கள்
காணாத காட்சிகளையும்,
உங்கள் கண்கள்
தொடர்ந்து காணட்டும்.
பொன் போல பாதுகாத்து
பொருப்பாகக் கொடுங்கள்.
நிலையாக இருக்க,
நினைவாகக் கொடுங்கள்.

Wednesday, May 30, 2007

இரத்த தானம் [Donate Blood while living]

இறைவனால் வழங்கப் பட்டதை
நீங்களும் வாழ்ந்துக் கொண்டு
பலருக்கு வழங்கலாம்- இரத்தத்தை.

இறைவனால் படைக்கப் பட்டதை
இறைவனால் படைக்கப் பட்டவர்களுக்கு
தானமாக கிடைத்ததை
தானமாகக் கொடுங்கள்.


வீனாக்காதீர்கள் எதையும்
கொடுங்கள்- உங்களுக்கு
உபயோகம் இல்லாததை
உபயோகம் உள்ளவர்களுக்கு.
அதில் அடங்கட்டும்
இரத்தமும் கண்களும்.

வாழும்போது இரத்தத்தையும்
வாழ்ந்த பிறகு- இருவருக்கு
உங்கள் கண்களையும்
பலருக்கு கொடுக்கலாம்
உடல் உறுப்புகளை
தானமாக ! தானமாக !!