Translate

Showing posts with label அப்பாவியாய் நடிப்பவருண்டு.. Show all posts
Showing posts with label அப்பாவியாய் நடிப்பவருண்டு.. Show all posts

Sunday, December 10, 2017

அப்பாவியாய் நடிப்பவருண்டு.

எமதிந்த வாழ்வினிலே
எத்தனையோ பார்த்திருக்கேன்.
கேட்டது பலவிருக்கு
கேள்விகளாய் அதுவிருக்கு.
பதில்கள் சில கண்டதுண்டு
பாதியிலே பல நின்றதுண்டு.
அரைவேக்காட்டாய் பலவுண்டு
ஆள்வதற்கும் அளவுண்டு.
இடமறிந்து நீ நடந்தால்
இனிமையாய் கழியுமது.
விடுத்து விட்டு அடி வாங்கி
வீங்குகிற பயலுண்டு.
அத்தனையும் வாங்கிக் கொண்டு
அப்பாவியாய் நடிப்பவருண்டு.
அரைக்குறையாய் மேய்ந்து விட்டு
அகலக்கால் வைப்பவருண்டு.
பார்ப்பதெல்லாம் பச்சையென
பல்லிலிப்பவர் கோடி உண்டு.
மனத்திலுள்ள குப்பைகளை
மாலையிட நினைப்பவருண்டு.
சித்திரத்தில் மச்சசமிட்டு
சிறைப்பட்ட ஓவியனுண்டு.
சிலையழகை நீ ரசிக்க
சிற்பியாக தேவையில்லை
அத்தனையும் விரித்து சொல்ல
அனுபவங்கள் தேவையில்லை
கருத்திலே அழமிருப்பின்
காமமும் அழகாகும்
இன்னும இன்னும் பலவுண்டு
இங்கு அது மாளாது
அறிந்துக் கொள் தம்பியே
அனுபவத்திறகு காலமுண்டு

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகள் அனைவருக்கும்

நட்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்🙏