Translate

Thursday, July 18, 2019

என்னவள்

பாலாக ஒளிவெள்ளம்
எங்கெங்கும் நிறைந்திருக்க,
பார்வையை நாற்புறமும்
ஓட்டிப் பார்க்க,
அவளை எங்கும் காணவில்லை.
விழிகளோடு மனமும்
சோர்ந்து தலை குனிய,
மின்னலாய் ஒளிக்கீற்று
என்னைத் தழுவிச் செல்ல,
புவியதிர்வாய் இடம் நோக்கி
விழி உயர்த்த,
நாணத்துடன்
கண் சிமிட்டி முறுவளித்தாள்
முகில்களுக்கு இடையே-
முகம் காட்டி....
என்னவள் நிலா.

இனிய மாலை வணக்கம் கவிஞர்களே.

✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏

சின்னக்கவிதைகள்

முழு நிலவு,
மேகத்தை இழுத்து,
முகத்தை மூடிக் கொண்டது.
நான் குளிப்பதைப் பார்த்து
"வெட்கத்தில்"




தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.


Sunday, July 14, 2019

ஹைக்கூ கவிதைகள்

எழுதாத ஒப்பந்தம் 
முழுமையாய் நிறைவேறினால் 
குடும்ப பந்தம் 




இல்லாத பாதையில் 
இயங்குகிறது இயந்திரம்  
மண்ணுக்குள் மண்புழு 





தவப்புதல்வன் 
பத்ரி நாராயணன் 

Thursday, July 11, 2019

ஹைக்கூ

1




1) விவசாயியின் ஆசை 
     அடைப்பட்டுப் போனது 
     நீர் வரத்து.


2) அவன் கண்ணீர் 
     வறண்டு போனது 
    நீர் நிலைகள் 


தவப்புதல்வன் 
பத்ரி நாராயணன் A M