Translate

Tuesday, March 31, 2015

விழாவிலே ஓர் அனுபவம் - இன்றொரு தகவல்



சென்ற மார்ச் 8ம் தேதி சேலத்தில் நடந்த மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழாவில், விழா குழுவினர் சார்பாக சீர்வரிசைகளுடன், தனிப்பட்டவர்களும் மணமக்களுக்கு நன்கொடையும், பரிசுகளும் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதுசமயம் என் இருக்கைக்கு பின் சிறிது தள்ளி ஒருவர் ஒரே மாதிரியான சில நூல்களை வைத்திருந்தார். பார்த்து விட்டு தருகிறேன் என சைகை மூலம் கேட்து வாங்கி, உள்ளடக்கத்தை பார்த்தபோது சிறு சிறு கதைகள் போல் தெரிந்தது. முதல் தலைப்பே ''கொசு''. விரைந்து கண்களை ஓட்டினேன்.

''கொசு''. சொல்வதுபோல் கதை. ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. பெண் கொசுக்களாகிய நாங்கள், எங்கள் இனப்பெருக்க முட்டை இடுவதற்காகவே, உங்கள் ரத்தத்தில் ஒரு துளியிலும் துளி அதற்கே இந்த அளறு அலறுகிறீர்கள். டெங்கு. சிக்கன்குனியா, பன்றி காய்ச்சல்,டைபாய்டு இப்படி பல பெயர்களில் உங்களுக்கு வரும் நோய்கள், உங்கள் இரத்தத்தில் உள்ள  தானே தவிர, எங்களிடம் எந்த கிருமியுமில்லை.

காற்றுக்காக ஓலை விசிறிகளை பயன்படுத்துவதை எல்லாம் விட்டு விட்டீர்கள். மின்சார பேட்டுகளையும்,  சுருள்களையும், மேட்டுகளையும், உங்களைப்போன்றே ஆண்டவன் படைத்த ஒரு உயிரினமான  எங்களை ஒழிப்பதற்காக பயன்படுத்துகிறீர்கள்.  காரணம் உங்கள் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. தேங்கியுள்ள சாக்கடை நீர், திறந்து வைத்துள்ள குடிநீர் உள்ளவரை உங்களால் எங்களை அழிக்க முடியாது. இப்படி மேலும் தொடர்ந்தது.

அதில் குட்டியாக ஒரு தகவல்: ஒரு குட்டிக்கொசு, தன்  தந்தையிடம் மகிழ்ச்சியாக வந்து, அப்பா... இன்று ஒரு வீட்டுக்கு போனேன். எனக்கு சரியான வரவேற்பு. நான் அங்கிருந்து வெளியேறும் வரை அனைவரும் கை தட்டிக் கொண்டேயிருந்தார்கள் என பெருமை பொங்க சொன்னது. அதற்கு தந்தை கொசு சொன்னது. அட மட செல்லமே, அவர்கள் உன்னை வரவேற்று கை தட்டவில்லை. அவர்களின் இராட்சக்கைகளால் உன்னை கொன்றுவிட பார்த்தனர். நல்ல வேளை உயிர் பிழைத்து வந்து விட்டாய் என கூறி அணைத்துக் கொண்டது.

#இது எப்படியிருக்கு நட்புகளே! குறுகிய நேரத்தில் விரைவாக வாசித்ததால், முழுமையாக கதையையோ, நூலின் பெயரையோ நினைவில் நிறுத்திக் கொள்ள முடியவில்லை.  பெயர் ''சாமி''
இனிசியலும் ஞாபகமில்லை..

#இக்குட்டி   கதை  என்ன சொல்லுது நட்புகளே.

Monday, March 30, 2015

என்று புரியுமோ !

காலமோ கடக்கிறது
எனை விட்டு பிரிந்து।

பேசுகிறாய் சில வார்த்தைகள்
அவசியத் தேவையினால்।


உயிரற்ற பார்வைகளாய் மோதுமே
நொடி சில மட்டுமே।

ரசிக்கிறேன் உன் உருவத்தை
மனத்தில் நிறைத்துக் கொள்ள।

வாயிருந்தும் பேச முடியவில்லை
போட்ட தடையினால்।

சேர வாய்ப்பில்லையோ
நினைத்தாலே பதறுகிறதே
உடலும் உள்ளமும்।

வினாக்களால்
மண்டையோ குடைகிறது
புரிய வைக்க தெரியாமல்।

உன் வாய் வார்த்தைகள்
எனக்கு
உற்சாகம் கொடுக்கும்।

உன் நெருக்கம்
வாழ்வில்
நம்பிக்கையைக் கொடுக்கும்।

நீ கைக்கொடுத்து என்னை
கோபுரத்துக்கு
கொண்டு செல்।

வெறுப்புக் கொண்டு
குப்பை மேட்டில்
போட்டு விடாதே।

பிராத்திக்கிறேன்
நாள் தோறும்
இறைவனிடம்,
உன் அன்பு கிடைக்க.

நீ பிரிந்தாய்
எனை அறிந்துக் கொள்ளாமல்।

என் உயிரும் பிரியட்டும்
நீ அறியாமல்।

உயிர் பிரியும்
நேரத்தில் தான் கிடைக்குமா
உன் அருள் பார்வை।

உயிர் போக்கவோ
எனக்கு விருப்பமில்லை।

மனச்சுமையால் தினறுகிறது
என் உயிர் மூச்சு.


செயற்கை பார்வை தரும் நவீன கருவி



செயற்கை பார்வை தரும் நவீன கருவி இந்தாண்டுக்குள் இந்தியாவில்

இடையிலே ஏன்

என் நினைவிலே நீயும்
நிலையாய் இருக்க,

படுத்துறங்கும் நேரம்
கதையொன்றைச் சொன்னாய்.

கேட்கும் தோரணையில்
"உம்"மதைக் கொட்டினேன்.

துளிகளாய் நேரம்
கடந்தே செல்ல,

விழிகளை உறக்கம்
கவ்விக் கொள்ள,

"உம்"மென்ற ஒலியும்
தேய்ந்து போக,

மின்வெட்டாய் அதுவும்
துண்டித்து போக,

விடிந்ததும் கேட்டேன்
இடையிலே ஏன், விட்டாயென...

வானிலே



வைகாசி வளர்பிறையில்
வந்துதித்த நிலவுது.
வானிலே ஊர்ந்தபடி
நிலமதை பார்த்தது.
அறிந்த நாள் முதல் - தனைக்காட்டி
அமுதூட்ட கேட்டது.
கட்டுண்ட காதலற்கு
பல நினைவு கொடுத்தது.
கவி படைக்க கவிஞனுக்கோ
கதைகள் நிறைய சொன்னது.

முதலில்



சுமந்து உரு கொடுத்தாள்
''இறைவியாக''

பாலூட்டி உயிர் வளர்த்தாள்
''தாயாக''

ஆரம்ப பாடமாய் அவளிருந்தாள்
''குருவாக''

Sunday, March 29, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - சிரஞ்சீவி அம்ருதேஷ் S/o Sri.Sankar Mani Iyer - ஸௌபாக்கியவதி மானசி



Sri.Sankar Mani Iyer அவர்களின் பெரிய மகன் சிரஞ்சீவி அம்ருதேஷ் - ஸௌபாக்கியவதி மானசி தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

அடையும் நலங்களெல்லாம்
இறைக் கோர்த்த  மலர்களாய்
வாடாமல்
என்றுமே செழிப்பாக நிலைத்திருக்க
பிரார்த்தித்து வாழ்த்தினோம் மகிழ்வாக.

இளம் தம்பதிகளுக்கு நல்லாசிகள் உரியதாக்குக நண்பரே.

அஞ்சலி - ஜெயராஜ்



ஜெயராஜ்

சேர்ந்த இடம் நற்கதியாய்,
அடையட்டும் சாந்தி நிரந்தரமாய்.
சொல்லிற்மாளா வருத்தங்கள்
பகிர்ந்தோம் நாங்களும் உடனிணைந்து.

-தவப்புதல்வன். 

Saturday, March 28, 2015

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு - மாற்றுத்திறனளிகளுக்கு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.


தேதி: ஜூன் 7ம் தேதி
தேர்வு நாடு முழுவதும் 50 இடங்களில் நடைப்பெறும்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ.
பிரிவினருக்கு ரூபாய் 1000/=

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனளிகளுக்கு 800/=


+2 தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்ய இணையதளம்:

www.jipmer.edu.in

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்

கடைசி நாள்: மே 4ம் தேதி

கட்டணம் செலுத்தும் முறை:
நெட் பேங்கிங்,
கிரிடிட்கார்டு,
டெபிட் கார்டு
மட்டுமே

மேலும் விபரங்களுக்கு:
1800 266 0371
கட்டணமில்லா எண்

விடியுமோ





தவமிருந்த காலமெல்லாம்

மலையேறி போச்சுதையா.

தண்ணீரைத் தேடி - என்

கண்களும் பூத்ததையா.

மரத்தின் உச்சியிலே - நான்

அமர்ந்து பார்க்கின்றேன்.

எட்டிய தூரமெல்லாம்

நீரில்லா நிலையையே காண்கின்றேன்.

மீன் தின்ற காலமெல்லாம்

மீண்டும் என்று வந்திடுமோ

பசி தீர்க்க தேடி நான்

புழு தின்று வாழுகிறேன்.

குளம் குட்டை அத்தனையும்

கட்டடமாய் மாறிவிட்டால்,

குழிநீரில் மீனின்றி- எம்மினமும்

குழுக்குழுவாய் அழிந்திடுமே.

கொஞ்சி குழாவிய 

குடும்பமது அழிந்ததினால்
வேதனையில் 

தனியாய் நானும் வாடுகிறேன்.

நீங்கள் அறியா வண்ணம் 

எத்தனையோ உதவிகளை செய்கின்றோம்.

பறவையினம் வாழ்ந்திடவே

மனத்தை நீங்கள் திறந்து வைப்பீர்.

தென்றலாய் உள்நுழைந்து - உமை

கவலையின்றி வாழ வைப்போம்.

Friday, March 27, 2015

இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்

மட்டில்லா நலன்
மாளா பெருஞ்செல்வம்
மருளா நிலைக் கொடுத்து
மாபெரும் இறைவனருள

ஓயா தலை
பாதமலரில் ஓய,
நெடுஞ்சான் கிடையாய்
பணிந்தோம் வேண்டி.
பாரினில்  சிறப்பாய்
பரந்த நட்புகள் உயர.

இனிய  தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்


#தெலுங்கு வருட பிறப்புக்கு எழுதப்பட்டது.
பதிப்பதில் விடுபட்டு விட்டது எமதினிய நட்பூக்களே!

பணம்

குறியோ அதிலிருக்க
குறி சொல்லும் உன்னிடம்
குறை களைய வருவோருக்கு
குறைகளது எத்தனையோ

தூரத்தில்

என் நினைவில்
நீ இருக்க,
உன் நினைவில்
நான் இருக்க,
சொல்லி நாம்
தெரிந்து கொண்டோம்
சொல்லாமல்
தெரிந்துக் கொள்ள
ஏதேனும்
வழிகள் உண்டோ?

உன் நினைவில்

ஓயாமல் நினைக்கின்றேன்
ஒன்றிவிட துடிக்கின்றேன்
ஒப்புதலில்லா நிலையுடனே
ஒதுங்கி நீ நிற்பதாலே
ஓட்டை விழுந்த
ஓடம் போல
தனியாக தத்தளித்து
மூழ்கி நான் கிடக்கின்றேன்

தவிக்கின்றேன்

பாடங்களாய் நீயிருக்க
படித்துவிட நான் துடிக்க,
புரியாத நிலையிருக்க
புரிந்துக் கொள்ள எங்கு போவேன்?


 

Thursday, March 26, 2015

பாட்டொன்று



பாவாக நான் வடித்தேன்
பாட்டாக பாடிடவே.
பாடமாக படித்து நீயும்
படுத்தி விட்டாய் என் மனத்தை.

தங்கமே.. என் தங்கமே......

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Dhanalakshmi Kirubhakaran



Dhanalakshmi Kirubhakaran


வார்த்தைகளைத் தேடுகிறேன் 
வாழ்த்திட நானும் தான்.
மலைத்து நான் நிற்கின்றேன் 
மேருவாய் உனைக் காண்கையிலே.
நலனுடனும் மகிழ்வுடனும் 
நீங்கா அருளுடனும் 
வாழியே பல்லாண்டு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Keerthy Pravin




Keerthy Pravin

பேறுகள் பதினாறும் 
வாழ்விலே  நிறையாக 
அருளட்டும் இறைவனெ
வாழ்த்தினோம் அன்பாக.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.

Wednesday, March 25, 2015

நட்புடன் புன்னகை


மூச்சுக்காற்றினிலே உள்நுழைந்து
இதயத்தில் தங்கி,
முகத்தினில் பொங்கட்டும்

''நட்புடன் புன்னகை''

எந்நாளும் மகிழ்வாய் இருக்க வாழ்த்துக்கள் நண்பரே, நட்புகளே. =D

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



அன்று முதல்  
 இன்று வரை 
புதிய உறவுடன்
புன்னகை  நினைவுகளுடன் .
உருண்டோடியதோ வாழ்க்கை   
உருண்டோடிய  காலமுடன்.

நீங்கா நலனுடன் ,
 நிறைவான மகிழ்வுடன்
இறைவனின் அருளால் 
பல்லாண்டுகள்  தொடர்ந்து
இணையாய் வாழ
இனிய  திருமணநாள்   நல்வாழ்த்துக்கள்  நண்பரே.

புரிந்தால் சரி




வாயாடி என்றாலும்
வாடிபோடி என்றாலும்
வாடாத வதனமுடன்
வான் கொண்ட முகில் தரும்
வற்றாத மழைப்போல்
வாரி தருவாள் தனதன்பை.

வாழ்க நலமுடன் நண்பர்களே..

Tuesday, March 24, 2015

குழந்தைகளுக்கான சிறு கவிதைகள்

.

லட்டுகள் 

குட்டி குட்டி லட்டுகள் 
குவிந்திருக்குது இங்கே.
கும்மாளமிட்டு குழந்தைகள் 
குதிக்குது  மகிழ்விலே.
=========================

மகிழ்விலே 

அளவில்லா மகிழ்விலே 
ஆடிப்பாடும் நிலையிலே 
அன்றைய பொழுது துவங்கவே 
அற்புதமாய் செயல்களோ 
அதிவிரைவாய் முடிந்ததே.
============================

நாங்கள் 

பள்ளியில் நாங்கள்
பாடங்களைக் கற்போம்.
பகுத்தறிந்து செயல்களை 
பக்குவமாய் முடிப்போம்.

பல்கலைகள் பயின்று 
பண்பாய் நாங்கள் வளர்வோம் 
பாரதத்தின் பெருமையை 
பரவ செய்வோம் எங்குமே.
========================



#வருங்கால தலைமுறைகளான இன்றைய குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலையிலேயே நல்ல கருத்துக்களையும், எண்ணங்களையும் பதியவும் , தமிழ் நிலைக்கவும்  செய்ய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.  இலகுவாகவும், சிறியதாகவும் உள்ள இந்த குட்டிக் குட்டி  கவிதைகளை,  உங்கள் மற்றும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்களேன். 

Monday, March 23, 2015

அமெரிக்காவில் வேலை வாய்ப்பு



ஹெச்-1பி விசா உரிமையாளரின் துணைக்கும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு. 


ஹெச்-1பி விசா உரிமையாளர் ( ஆண், பெண் ) யாராக இருப்பினும், அவரின் துணைக்கு   ( ஆண், பெண் ) தகுதியிருப்பினும் பணியில் சேர தடையிருந்தது. தற்போது அமெரிக்க அரசு அத்தடையை நீக்கி உத்தரவியிட்டுள்ளது . இது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பல்லாயிரக்கான தகுதியுள்ள இந்தியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

காக்குமா குடி? தேவையா இது?

புண்பட்ட மனமென 
குடித்து தீர்த்தாய்.
புண்பட்ட குடலுக்கு 
எதை குடிப்பாய்?

தீராத தாகமென 
குடித்துத் தீர்த்தாய்.
தீர்ந்த உன் சொத்துக்களை 
எப்படி சேர்ப்பாய்?

விலகா இருள் நேரத்திலும் 
தெளியா புத்தி மயக்கத்தில் 
புரண்டுக் கொண்டிருந்தாய் 
சாக்கடையின்  ஓரத்தில்.

தர்மவானாய் இருந்தாய் 
மது அருந்திய நேரத்தில்.
பிச்சைக்காரனாய் மாறினாயே 
மது தேவைப்பட்ட நேரத்தில்.

சல்லடையாய் உறுப்புக்கள் 
இரத்தத்தில் கலந்து,
இதயத்தில் புகுந்து, 
சிறுநீரிலும் வெளியேற வழியின்றி
அடைப்பட்ட  சாக்கடையாய் உடல்.

மது காசைக் கரைக்கும்,
மனத்தைக் கெடுக்கும்,
மானத்தை வாங்கும். - ஆனால் 
கொடுக்குமா நல்லதை.

கவிழாத தலை - இன்று 
கவிழ்ந்து போக,
பித்தம் தீர எதை தின்று 
புத்தி தெளிவாய்?

இதயம் ஒருநாள் 
இயங்கவே மறுநாள் 
மறந்தால் அந்நாள் 
காலடி மண்ணும் 
சொந்தமில்லை உனக்கு.




Sunday, March 22, 2015

செய்தி....




சொல்ல வார்த்தைகள் 
ஆயிரமிருக்க,
தொண்டைக் குழியில் 
அத்தனையும் துள்ள,
தடுத்து நிறுத்தியது 
தாக்கமாய் நினைவு.
எப்படி உரைப்பேன் 
நீயதை உணர?
போதும் இத்துடன் 
விடைப்பெற்றுக் கொள்ள.

நிலையின்றி .......



உனது வாயிலிருந்து
உதிரும் வார்த்தைகளோ 
உண்மையே இதுவென 
அறுதியிட்டு சொன்னால்,
வாய் மூடி நானும் 
மௌனமாய் செல்வேன். 
புறந்தள்ளிய மனதோ 
உறங்காமலிருக்கும்,
என்றேனும் ஒரு நாள் 
சுட்டிக் காட்டும்.
அன்றிலிருந்து 
அனுதினமும் உன்னை 
அல்லாட வைக்கும்
அனல் பட்ட நிலையாய்.
உனக்கு நீயே 
அந்நியனாய் மாறி.
உரைத்திடயியலா 
நிலையிலன்று,
உள்ளும் வெளியும் 
புழுங்கிப் போகும்.  
  

பிரார்த்தித்தோம் உமக்காக. - Tvn Tvnarayanan

Friday, March 20, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Senthil Kumar R


 


Senthil Kumar R

பொங்கும் மகிழ்வுகள்
பீரிட்டு பொங்க,
போடும் நடை
ராஜநடையாய் விளங்க,
நலனும் மகிழ்வும்
இறை தரும் கொடையாய்
என்றுமே சூழ்ந்து
காத்துமை அருள.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
ஆசிர்வாதங்கள் பேராண்டி.


Thursday, March 19, 2015

இன்றைய பொழுது



ஆனந்தமாய் விடிந்ததே.
கண் விழித்த நேரம் முதல்
காட்சிகளோ கவிதைகளாய்
களைக்கட்டியது காலமது.
காண்போரெல்லாம் ஆவலாய்
கதைக்கும் நிகழ்வாயானது.

அருமையான  நட்புகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் 

விடியலில் - குறுங்கவிதை

 

நீ
எப்படியோ
அப்படியே
நான்.

அழகான விடியலுக்கு வாழ்த்துக்கள் நட்புகளே.

Wednesday, March 18, 2015

காசைத் தவிர...




வின்னைத் தொடும் விலை கூறி
பிச்சைகளுக்கு குறைவில்லை.
ஆண்டி முதல் அரசன் வரை
கையேந்துகிறான் பிச்சைக் கேட்டு.
காரணங்கள் பலவிருக்க
குறி மட்டும் காசிலிருக்க,
பிச்சைக்கு விடிவேது
மனங்களது மாறாவரை.
முடிந்தவனும் கரக்கின்றான்
தருபவனை நோகடித்து.
ஒன்றுக்கு மதிப்பேயில்லை
அளவுக்கோ கணக்கேயில்லை.
பற்பல வேடங்களில்
பகலிலே பல்லிளித்து,
அம்மணமாய் திரிகிறது
இராப்பொழுது  நேரத்தில்.
பிச்சைக்காரனும்  கேட்பதில்லை
பழைய சோறு வேண்டுமென்று.


*அமுதமென ஊட்ட வேண்டும்
ஆதரவற்றோர் நிலையறிந்து.
ஏங்குகிறது மனமும் தான்
ஏக்கத்துடன் கரங்குவித்து.

  

Monday, March 16, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

ஈருடல் ஆயினும்
ஒரு மனமாய் கலந்து,
குடும்பமெனும் விதை,
விருட்சமாய் செழித்து
பல்லாண்டு பல்லாண்டு
நலமாய் வாழ 


இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே.

எண்ணிலா கேள்விகள்





ஆசைகள் இன்னும்
பெரிதாய் வாட்ட,
குழந்தை வாழ்வோ
விளையாட்டாய் செல்ல,
முதிர்ந்த வயதில்
சூதாட்டமாய் செல்ல,
பருவங்களை நினைத்தால்
புதிர்களாய் தெரிய,
முன்னோக்கி பின்னோக்கி
எண்ணங்கள் விரைய,
 எண்ணிலா கேள்விகள்
எழுந்து நமை ஆட்ட,
ஆட்டுவிக்க  நினைப்போம்
எதிரிகளாய் நினைத்து.
கிடைக்குமோ விடைகள்
முடியும் முன்னே.

Sunday, March 15, 2015

இலவசம்



இலவசம் 

கொடுக்கவில்லையே எனக்கென 
வருத்தப்பட்டேன்.
உடைச்சல் கடையில் 
பார்க்கும் வரை.

பெருமிதப்பட்டேன் 
பட்டியலில் நானில்லையென்று.
வேதனைப்பட்டேன் 
மக்கள் பணம் குப்பையாய் கண்டு.

பதரில்லா நெல்





பாவிய நெல் முளைக்க

பழுதில்லா விதை வேண்டும்.
பதமான  நிலம் வேண்டும்.
பக்குவமாய் உழ வேண்டும்.
பஞ்சமில்லா நீர் வேண்டும்.
பசுங்களை நீக்க வேண்டும்.
பாங்குடன் உரமிட்டு
பகுத்தறியும் செயல் வேண்டும்.
பாட்டாளி உழவனுக்கு, காலமது
பசுமை தந்து, உதவ வேண்டும்.

பேதம் ஏதுமின்றி

புரியாத மொழி நீ பேச,
புரிந்ததாய் நானும் தலையாட்ட,
நமக்குள் பேதம் ஏதுமின்றி 
கழிந்ததே நாட்கள் மகிழ்வாக .
புரிந்துக் கொள்ள நானும் முயலவில்லை 
அறிந்தேனாவென அறிய நீயும் முனையவில்லை.

நின் செயல் கண்டு

கைகளை நீட்டினாய் 
''கா'' வென காட்டினாய்.
விரித்தோமே கடையை 
கொழுவிருந்த பொம்மைகளை.
''கா''வென்று சொன்னபடி 
தள்ளினாயே அத்தனையும் .
புரியாமல் ஏறிட்டோம் மீண்டுமுனை. 
இருக்குமோ இதுவென கொடுத்தோமே
இறையுரு படந்தனை.
கண்களோ மின்ன 
மகிழ்வோ பொங்க 
கரத்தினை நீட்டினாய் 
படத்தினைப் பெற்றாய்.
ஆரத்தழுவினாய் 
நெஞ்சோடு அணைத்து.

அறியாத வயதில் 
புரியாத மொழியில் 
கடவுளைத் தொட்டு 
கரங்களைக் குவித்தாய்.
அறிந்த நாங்களோ 
அதிர்ந்து போனோம்.
ஆனந்தத்தில் மனமோ 
ஆழ்ந்து போனோம்.
அறியாமலே விழிகளில் 
துளிர்த்தது  விழிநீர்.
 பேத்தியே..
நின் செயல் கண்டு.

சுமை



உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள
உறவுகளை நாடி சென்றேன்
உண்மையை அறிந்தபோது
உள்ளதும் பிரிந்ததடா.

காயம் பட்ட மனத்தினால்

கடும் வலி உணர்வு
டன்
கண்களில் நீருடன்
காலமது  கடந்ததே சுமையாக.


*$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


வலை மொழி பேசி,
இதழினை நனைத்தாய்.

இனிய மாலை வணக்கம் மக்களே!

Saturday, March 14, 2015

இனிய நன்னாள் வாழ்த்துக்கள்




பூதத்தில் அழகாய்
பொலிவிலும் அழகாய் - உம்
எண்ணத்தின் அழகால்
விரிந்தது இங்கு.

இனிய நன்னாள் வாழ்த்துக்கள் மகிழ்வுடன் நண்பர்களுக்கு.

கொலைக்கார கொசுவே!



இரணகளப் படுத்துகிறாயே
உதட்டைக்  கடித்து.

இப்படி கடித்ததில்லை
என் காதலியும்
மோகத்தினால்.

*******************

அடிப்பட்டு சாகிறாயே
இருட்டிலே
உனக்கும்
கண் தெரியாதா?

*$$$$$$$$*$$$$$$$$$$$$$$$$$$

இனிதான இரவு வணக்கம் - குறுங்கவிதைகள்,

துவண்ட இமைகள்
தழுவியது விழிகளை.
நாவும் நவின்றது
நட்புகளுக்கு இரவு வணக்கம்.









தழுவிய இமைகள்
தழுவியபடி இருக்கட்டும்
தவழும் இரவு
கலைந்துப் போகும் வரை.

நட்புகளுக்கோர் வணக்கம்.
அது இனிதான இரவு வணக்கம்.


..

Friday, March 13, 2015

சொல்லம்பு

அச்சொல்லே உள்நுழைந்து
ஆறாமல் போனதேனோ?
கௌரவமென  நினைத்துக் கொண்டு
மௌனமாய் கடக்கின்றோம்.
எதிரெதிரே  பார்த்தாலும்
எதிரியாய் ஒதுங்குகிறோம்.
நெருங்கிட நினைத்தாலும்
 நேசத்தின் குறுக்காக
நெருஞ்சியாய் அந்நினைவு
நெஞ்சத்தைத் துளைக்கிறது.

ஆவலுடன் அழைத்திட்டோம்
ஆசையுடன் அணைத்திட்டோம்
தூபமிட்ட  எண்ணத்தால்
தூவப்பட்ட அவ்வார்த்தை
துண்டிக்க தூண்டிவிட
துணையிருந்தும் தவிக்கின்றோம்

காலமது கழியுமுன்னே
வாழ்க்கை மீண்டும் துளிர்த்திடுமோ
இனிமையுடன் இளமையாய்
இணைந்து நாம் நடைப்போட,
அத்தனையும் துறந்து விட்டு 
ஒருவரோடு ஒருவராக,
நினைவுகளை  ஒதுக்கி விட்டு  
 சரணதை அடைவோமோ

 காலத்தின் கோலத்தில்
கலைத்துக் கொண்டோம் வாழ்வுதனை.
கடந்ததை எண்ணியெண்ணி
காலத்தைப் போக்காமல்
பகையை தூரம் விரட்டி விட்டு
 பாசத்தை மட்டும் அளந்திடுவோம்.
நினைவுகளால் தீய்ந்து கருகி போகாமல்
நித்தமும் சுகத்திலே ஆழ்ந்திருப்போம்.
என் நினைவும் உன் நினைவும்
ஒன்றாக கூடிவிட்டால்,
ஜெகத்தின் அகத்திலே
குன்றென உயர்ந்திருப்போம்.

அது ஒரு கனாக்காலம்




இரவோடு இரவாய்
பகலொடு உறவாய்
இடைவெளி ஏதுமின்றி 
நகர்ந்த நாட்களது

நட்போடு மகிழ்வாய்
கனிந்திருந்த காலம்
துள்ளலோடு கடந்து
நிகழ்ந்ததந்த நிகழ்வு.

இல்லாத புது கனவு
இதயத்தை கவ்விக் கொள்ள,
இருக்கும் நிலை மறந்து 
இனிப்பையது நாடியது.
இருப்புக் கொள்ளாமல்
இயங்கியதே ஒரு முகமாய்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Shri A P Irungovel








Shri A P Irungovel


 சூடிய நாள் முதல்
சுவைக் கொண்ட வாழ்க்கை
சற்றுமது குறைவின்றி

சங்கீதமாய் தொடர,
பிரார்த்தித்து வாழ்த்தினோம்
உமக்கென என்றே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Wednesday, March 11, 2015

பருகிய பருவம்



தனம் தாங்கா இடையோடு
அசைந்தாடும் தேராக,
பவனி வரும் பேரழகை
ஓரவிழியில் பார்த்தபடி 
வெண்முகில் மெத்தையிலே
அவன் கிடக்க,
பூங்கொடியாய் படர்ந்தாளே
பசலையால் துவண்டபடி.

காலமந்த சிறுபொழுதில்
ஆனந்த முனகலில்
நீர்த்துளி முத்துக்கள்
அங்கங்களில் உருண்டோட,
கரைந்ததே விழியிரண்டில்
கரு மையும்  இணைந்தங்கு.


#எமது இக்கவிதை ஏற்று வெளியிட்ட Single Frame முகநூல் குழுவுக்கு நன்றி.
https://www.facebook.com/groups/359102730866118/permalink/694085150701206/?notif_t=group_post_approved

அஞ்சலி




அடித்த அடிகள் நெஞ்சிலது
வழிந்த வெள்ளம் விழிகளிலது.
வார்த்தைகளில்லை வாயிலது.
உறக்கமில்லை உணர்வுக்கது.
நீங்க வேண்டும் அத்தனையும்
துன்பமது அணைய வேண்டும்
இறைவன் அருள் வேண்டும்.
சாந்தியது அடைய வேண்டும்,
தாய் குமரன் ஆத்மாக்கள்.
எடுத்தங்கு இயம்புங்கள்
எங்களின் இரங்கல்களை.

ஆழ்ந்த வருத்தத்துடன்,
தவப்புதல்வன்.

  

நட்பே! - குறுங்கவிதைகள்

நட்பே! 

நீ, எனை மறந்தாலும்
நாடி வந்து வாழ்த்துகிறேன்.
உனை உணர்வாயென.

******************

காணவில்லை..

உனைக் காணாப் பொழுதுகளில்
எனைத் தேடி அலைகின்றேன்.

&&&&&&&&&&&&&&&


வில்லங்கம்

கண்டதை மெயென்றேன்.
காணாததைப் பொயென்றேன்
மேற்பூச்சை அறியாமல்.  
*$$*******************

வானத்திலிருந்து 

 தேவதையாய் நீ வந்து
தேன் மழையை பொழிய வைத்து
தெவிட்டா நிலைக்கொடுத்து
மதுரமாய் சுவைக்கச் செய்தாய்.



மகிழ்வான நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.

நாய் - குறுங்கவிதை

நாய் 

குலைக்கிறது 
தெரியவில்லை 
அதற்கும்.
நல்லவனா?
கெட்டவனா?

அருள் நிலைக்கட்டும் நட்புகளே! 

தூது - குறுங்கவிதை


தூது



உன்னவரை

நான் கண்டேன்.
என்னவளைக் கண்டாயோ
தோழி நீ......

அன்பு நன்னாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

Tuesday, March 10, 2015

''உன்னிடம்'' - குறுங்கவிதை



 எனக்குள்  பேசிக்கொண்டிருப்பேன்.
பதிலில்லையேயென
ஏங்கிக்கொண்டிருப்பேன்.

''உன்னிடம்''

அருமையான நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Alphonse Xavier





ஆண்டவரின் கருணை
உமைக் காத்து இரட்சிக்க,
நட்புகளின் வாழ்த்துக்களோ
அரவணைத்துக் கொள்ள,
நலனுடனும் மகிழ்வுடனும்
நீடூடி வாழ ,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Sunday, March 8, 2015

''கேமரா'' - குறுங்கவிதைகள்

துவண்டாலும் 
தூங்குமோ மனம்,
துடிக்கும் நினைவுடன்?

''உடல்.''
=================
உமை கண்டதும் 
தனை மறந்து 
 கண் சிமிட்டுகிறது 

''கேமரா''

வலிகளுண்டு




வடிக்கா சொற்களுக்கும் வலிகளுண்டு.
வடித்த சொற்களுக்கும் வலிமையுண்டு.
வாடாத நினைவுகள் பல நிலையிலுண்டு.
வலுவூட்டும் நிலையி
து நிலைப்பதுண்டு.


நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.

Saturday, March 7, 2015

ஒன்பது முறை




எட்டியிருந்து பார்த்தவுடன் 
ஏடுகளில் பதிக்க வைத்தாய்.
கிட்டயிருந்து உனைக் காண 
கிடந்து எனை தவிக்க விட்டாய்.
கடைக்கண்  பார்வைப்பட 
கடைக்கோடியில் நின்றிருந்தேன்.
தெருவில்  கடந்து செல்கையிலே 
தேர்ந்தெடுத்துக் கொண்டாயோ?
ஒரு குடம் நீரெடுக்க 
ஒன்பது முறை கவிழ்த்து விட்டாய்.
காத்திருந்த மனமது 
காற்றினிலே மிதந்ததம்மா.
கவிழ்ந்தோடிய நீர் போல 
கலகலப்பாய் ஆனேனம்மா. 

கண் விழிப்பேன்



காமனாய் உருவெடுத்து 
கண்களை கவர்ந்து விட்டாய்.
கரும்புதனில் நாண்பூட்டி 
கணைதனை தொடுத்து விட்டாய் - உன்  
கரமது எனை  தழுவ 
காதலால் சரணடைந்தேன்.
கட்டுடலால் நீ அணைக்க 
கனிந்துருகி நான் படர 
காண்போர் கண்டுனமை வியந்திருக்க 
காவியமாய் நம் வாழ்வு பதிந்திருக்க
காலமெல்லாம் சுருதியுடனே 
கானம் பாடி சுவை சேர்ப்பேன்.
காளை, உன் கனவுகளோ 
காட்சிகளாய் நீ மாற்ற 
கண் விழிப்பேன் எந்நாளும்  


கருத்தாக உன்னுடனே இணைந்திருந்து.  

கணக்கனாய்

கணக்கனாய் இருந்த என்னை 
கற்பனையில் மூழ்க வைத்தாய்.
கணக்கெழுதும் காகிதத்தில் 
கவியெழுத தூண்டி  விட்டாய்.
கண் மூடிய அடுத்த நொடி 
கனவு காண செய்து விட்டாய்.
கண் அகலாவண்ணம் - நீ  
கடிவாளம் பூட்டி விட்டாய்.
 கடவுளிடம் உனைக் கேட்டு 
கடுந்தவம் செய்ய விட்டாய்.
 கடைக்கண் சாடைக்காட்டி - எனை 
கடையேற்றிக் கொண்டாயே.
இனி தடையேதுமின்றி 
இன்பம் தாண்டவமாடுமே.
தளிர் இளங்கொடியாய் - நீயெனை 
தழுவிக் கொள்ள 
தாங்கிடுவேனே தளராமல் 
தாலாட்டு ஆட்டியப்படி.

உயிராய்





பொங்குகின்ற பூம்புனலாய் 
புத்துணர்வு ஆட்டுவிக்க 
ஆடுகின்ற எம் மனத்தில் 
நினதாட்டம் ஆட்சி செய்ய.
நிலையற்ற நிலையினிலும் 
இணைந்தேனே குதித்தாடும் நின்னுடனே.
நினைத்தேனே உன்னுறவு எம்முடனே 
என்றுமே நிலைத்திருக்க.
குக்கூ... குக்கூ...வென  குயிலோசை 
செவிப்பறை தழுவுகின்ற பொழுதெல்லாம் 
எம் குருதியிலே ஊடுருவும் 
உயிராய் உன் குரலோசை.

கணபொழுதினிலே





கருவிழியோ 
புவிவிசையாய் 
கவர்ந்திழுக்க,

கண்டதோ 
நாடிப்பேரோசை 
செவிப்புலனும்,

செல்லரிக்கும் 
கூட்டினுள்ளே 
வெளிச்சமோ 

உணர்வுகளுக்கும் 
மட்டில்லா 
மகிழ்வுகளோ  

ஊர்ந்ததோ 
இன்பமும் 
குருதியில் 
இடைனுழைந்து.


இருளடையுமோ 
நினைவுகளும் 
உனை மறந்து?

முடிவினிலே  
ஏனிந்த 
சலனமோ 

Thursday, March 5, 2015

புதிர் - குறுங்கவிதை,




நீ சொல்லா புதிருக்கு
விடையெங்கு போவேன்?
உனை அறியவியலா புதிருக்கு
விடையென்று காண்வேன்?

அன்பான நன்னாள் வாழ்த்துக்கள் நட்புகளே.





நன்றி Thanks to:

http://thumbs.dreamstime.com/x/illustration-telugu-girl-26336220.jpg




 

Monday, March 2, 2015

10ம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றியடைய வாழ்த்து - பிரனேஷ் & தக்ஷிதா



All the best to Pranesh and Dhakshitha
We wish great success in your Exam

இறையருளோ சூழ்ந்திருந்து  உமைக் காக்க
அனைவரின் வாழ்த்துக்களோ சீராட்ட
நினைவுகளோ நிலைக்கொள்ள
திறமைகளோ ஒளி வீச,
வெற்றிகளோ உமை அடைந்து
சிறப்பாக உயர்வடைய
பிரார்த்தித்தோம் உமக்காக
செயல்படுவீர் உறுதியாக.