Translate

Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts

Wednesday, August 13, 2014

அண்ணியார். விடோபாய் சதானந்தம் அவர்களின் 75ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து.




கழிந்ததோ வாழ்க்கை 
நான்கிலே மூன்று.
கணக்கிலா நினைவுகள் 
நகருமே நிதமும்.
கற்பனைக்கு எட்டா 
நடப்புகள் பலவும் 
காண வேண்டும் 
நலமுடன் இருந்து.

சொல்லிய கதைகள் 
பேத்திகள் மனத்தில் 
பதியுமே நாளும் 
கொண்டாடும் நினைவாய்.

தாண்டவமாடும் மகிழ்ச்சிகளாலும் 
தாள் பணியும் இறை பணியாலும்,
தாண்டியே போகட்டும் 
தளர்ச்சியும் முதிர்வும்.

பலமுடன் நலமாய் 
வருடங்களைத் தாண்டி,
பல்லாண்டுகள்   தொடர்ந்து 
சந்தோசமாய் வாழ,
பிரவாகிக்கும் மகிழ்வுடன் 
பிரார்த்தித்து வணங்கி 
அன்புடன் வாழ்த்தினோம் 
ஆனந்தமாய் உம்மை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணியாரே! 


அன்புடன் 
கொழுந்தனார் 
A.M.பத்ரி நாராயணன் 
மற்றும் குடும்பம்.