Translate

Showing posts with label கதாசிரியர் அனுராதா ரமணன். Show all posts
Showing posts with label கதாசிரியர் அனுராதா ரமணன். Show all posts

Thursday, February 19, 2009

''அந்தரங்கம்''

சகோதரி அனுராதா ரமணன் அவர்களுக்கு, வணக்கம். 
       தங்களின் கைவண்ணத்தால் உருவான எத்தனையோ கதைகளை படித்திருந்தாலும், தினமலர் வாரமலர் ''அந்தரங்கம்'' பகுதியில் தாங்கள் அளிக்கும் ஆறுதலும், அரவணைப்பும், வழிக்காட்டலும் எம்மை மெய்மறக்கச் செய்யும். அதன் தாக்கம் தான் இக்கடிதம்.

தவறுகள் பல விதமாய்
தறிக்கெட்ட பாதைகளில்
தவளும் நினைவுகளோ
தகிக்கிறது எழுத்துக்களில்.

பயமாய், பாவமாய்,
நடுக்கமாய், நாசரமாய்  (நாரசமாய் )
உணர்வுகள் எத்தனையோ
அத்தனையும் எழுத்துக்களில்.

பரவசமோ உணர்வினிலே,
தடுமாற்றமோ மனதினிலே.
சீரமைத்துக் கொள்ளவே,
வழிகளைத் தேடியே,
உமை நாடி வருகின்றார்,
அந்தரங்கத்தை வெளிப்படுத்தி.

ஆறுதல் அளிக்கும் அம்மாவாய்,
வழி நடத்தும் சகோதரியாய்,
தட்டிக் கொடுக்கும் தோழியாய்,
ரணம் அகற்றும் மருத்துவராய்,
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு
கடவுளாய்,
உமை நினைத்து
வெள்ளைத் தாட்களில்
கோடுகளை கிறுக்கி வைப்பார்
கோளங்களாய் மற்றச் சொல்லி.

கழிவுகளை கழித்து விட்டு,
சுகமென்னும் நினைவுகளை
மனத்தினிலே சுமந்திடவே,
மனச்சுமைகளை உம்மிடமே
இறக்கியே வைக்கின்றார்.

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
வாசிக்கின்ற எங்களையே
வருத்தெடுக்கும் எண்ணங்கள்.
மனத்தையே உறைய வைக்கும்.
உடலையும் சிலிர்க்க வைக்கும்.
கண்களை கரைய வைக்கும்.

வந்து உமை தாக்கும்
வேதனை அம்புகளால்
ஆறா ரணமாய்
நிற்கா குருதியுடன்
நித்தமும் துடிப்பீரோ.


வழி பார்த்து விழி இருக்கும்,
உம் பதில் காண காத்திருக்கும்,
  சகோதரன்,
தவப்புதல்வன்.
06\02\2008.

ஈடுபாடு =
1) ஊனமுற்றோருக்கு உதவுதல்
2) உடல், கண், ரத்த தான விழிப்புணர்வு
   ஏற்படுத்துதல்.
3) கவிதை, கட்டுரை பெயர்களில் மனச்சுமைகளை 
   இறக்கி வைக்க முயற்சித்தல்.

பின் குறிப்பு

       தினமலர் 'வாரமலர்'  இமெயில் மூலமாக அனுப்பட்டது.