Translate

Showing posts with label குழந்தைகளுக்கான சிறு கவிதைகள்.. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கான சிறு கவிதைகள்.. Show all posts

Thursday, August 14, 2014

குழந்தைகளுக்கான சிறு கவிதைகள்.



லட்டுகள் 

குட்டி குட்டி லட்டுகள் 
குவிந்திருக்குது இங்கே/ அங்கே 
கும்மாளமிட்டு குழந்தைகள் 
குதிக்குதே மகிழ்விலே.
========================

மகிழ்விலே 

அளவில்லா மகிழ்விலே 
ஆடிப்பாடும் நிலையிலே 
அன்றைய பொழுது துவங்கவே 
அற்புதமாய் செயல்களோ 
அதிவிரைவாய் முடிந்ததே.
============================

நாங்கள் 

பள்ளியிலே நாங்கள்,
பாடங்களைக் கற்ப்போம்.
பகுத்தறிந்து செயல்களை 
பக்குவமாய் முடிப்போம்.

பல்கலைகள் பயின்று 
பண்பாய் நாங்கள் வளர்வோம் 
பாரதத்தின் பெருமையை 
பரவ செய்வோம் எங்குமே.
========================



#வருங்கால தலைமுறைகளான இன்றைய குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலையிலேயே நல்ல கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிய, தமிழ் நிலைக்க  செய்ய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். உங்கள் மற்றும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்களேன்.