Translate

Showing posts with label கந்துவட்டியில் எமன். Show all posts
Showing posts with label கந்துவட்டியில் எமன். Show all posts

Thursday, October 26, 2017

கந்துவட்டியில் எமன்

பச்சைமண்ணு பற்றியெரியுது அங்கு ஒன்னு.
படம் பார்த்து பதறுது மனம் பல இங்கு.
கல்நெஞ்சாய் மாறி நீங்கள் படம் பிடித்ததேனோ?
காப்பாற்ற மனமின்றி போனதேனோ?
புகைப்படக்கருவிகள் கையிலிருந்ததாலே,
பூண்டோடு அழிந்திடுமோ உணர்வுகளும் தானோ?
புரையோடி போனதெங்கே கலாசாரமே?
புரிவாரோ தனக்கென வந்தால் தானோ?
கொடும் துயரத்தை படம் பிடிக்க மனம் வந்ததோ?
ஒரு துளி உதவி செய்ய மறந்து போனதோ?
காசு பார்க்க இக்கயமைத்தொழில் தேவைதானோ?
உயிர் காக்க மறந்து நீங்கள் போனதேனோ?
புகைப்பட பேர்வழிகளை ஒன்று கேடகிறேன்
உம்முறவு என்றிருந்தால் இப்படி செய்வீரோ?
காக்க வேண்டிய கரங்களும் புழுத்ததேனோ ?
காக்கிச்சட்டை மாட்டிக்கொண்டு கொல்வதேனோ?
இரத்தம் உறுஞ்சும் இனங்களாய் ஆனதேனோ?
பி(ப)ணம் தின்னும் கழுகுகளாய் மாறியதேனோ?
கந்து வட்டி கொடுமைக்கு முடிவு இதுதானோ?
உணர்வுகளை குழித்தோண்டி புதைத்ததேனோ?
நெஞ்சில் ஈரமது காய்ந்தது ஏனோ?
தமிழக நாகரீகம் நசிவதேனோ?
கலிக்காலம் என்பதற்கு பொருள் இதுதானோ?


-- 
அதிர்ச்சியில்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.